Quote:
Originally Posted by jayjay
இப்போதே புதிதாக தங்கவாசல் அனுமதி பெருபவர்கள் மற்றும் தங்க வாசல் உறுப்பினர்கள் சிலர் கதைகளை படைக்க அதிக விருப்பம் காட்டுவதாக தெரியவில்லை. தங்கவாசலில் படங்களுக்கான திரிகளையே அதிகம் துவக்குகிறார்கள். இது ஆரோக்யமான முன்னேற்றமாக எனக்கு தோன்றவில்லை
|
Quote:
Originally Posted by kazuthaipuli
அய்யோ ஜாக் இப்படி வெள்ளகாரிங்களை பாத்தவுடனேயே மாறிட்டிங்களே நியாயமா? எனக்கென்னமோ அன்னிய படங்கள் பதிக்கப்படும் போது நமது தள்த்தின் கண்ணியம் பாதிக்கப்படுமோ என்றுதான் பயப்படுகிறேன்
|
எல்லாம் சரி, முதலில் நீங்கள் தங்கவாசல் உறுப்பினராகி அந்த பகுதியில் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு பதியுங்கள், குருடர்கள் யானையை தடவிப்பார்த்து பின் கருத்து சொன்னது போல இருக்கிறது, தங்கவாசல் அனுமதி இல்லாதவர்கள் அந்தப்பகுதியை விமர்சிப்பது.
இந்த திரியிலே உள்ள அந்நியப்பட அனுமதி தகவல், தளத்திலே உள்ள மற்ற அனைத்து பகுதிக்கும் பொருந்தும் என்பதால் அனைவரும் அறியும் வண்ணம் தலைவாசலில் உள்ளது.
தங்கவாசல் பற்றி அந்த வாசல் அனுமதி இல்லாதவர் விமர்சிப்பது பொருத்தமாக இல்லை.
மேலும், தங்கவாசலில் கதைபதித்து வந்து சேர்ந்து பின் கதை பதிக்காமல் படம் மட்டும் பதிந்த நண்பர்களை தனிமடலில் தொடர்பு கொண்டு திரும்ப கதையும் பதிக்க வைத்திருக்கிறோம். நிர்வாக உறுப்பினர்கள் வேலைகளில் அதுவும் ஒன்று எனவே வீண் கவலை வேண்டாம்.
@கழுதைப்புலி, நமது தளம் பாஸ்வேர்டு புரடெக்டடு தளம், எனவே தங்கவாசல் என்ற ஒரு உபபாரம் லாகின் ஆகாத உறுப்பினர்களுக்கு தெரியவே தெரியாது, மேலும் தங்கவாசல் என்பது படைப்பாளிகளை ஈர்க்கும் ஒரு மையமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மாற்றங்கள் செய்யப்படுகிறது. ஆனால் இங்கே உங்களைப்போன்ற கதை மட்டும் படிக்க விரும்பும் நண்பர்களுக்காக தங்கக்கதைகள் மற்றும் சில கதை பகுதிகள் உள்ளன. இந்த வாசல் வந்து கண்டு பின் சொல்லுங்கள்.