View Single Post
  #12  
Old 05-09-12, 11:06 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,631
iCash Credits: 375,305
My Threads  
Quote:
Originally Posted by mouse1233 View Post
உங்க ஆதங்கம் எனக்கு புரியுது
Quote:
Originally Posted by mouse1233 View Post
ஆக்சுவலா சில விசயங்களை பேச்சுத்தமிழுல் பேசினால் அங்கே தகவல் தொடர்பானது எளிதாக போய்ச்சேருகிறது.
உண்மையிலேயே [ 'ஆக்சுவலா' என்ற 'ஒலி பெயர்ப்'பின் தமிழாக்கம் ] நீங்கள் சொல்ல வந்ததை இயல்பான தமிழில் சொல்லி இருக்கலாமே ! 'பேச்சுத் தமிழ் வேறு ! ஆங்கில ஒலி பெயர்ப்பு வேறு அய்யா !
Quote:
Originally Posted by mouse1233 View Post
அழகாக சொல்லுவதை விட தெளிவாகச்சொல் என ஒரு பழமொழி உண்டு. புரியும் படி சொல்வது பெட்டன்னு தோனுது !
'பெட்டன்னு' தமிழும் இல்லை ஒலி பெயர்ப்பும் இல்லையே ! ஏனிந்த குழப்பம் அய்யா !
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by oolvathiyar View Post
உலகம் முழுவதும் பிறமொழி கலப்பில்லாமல் எந்த மொழியும் இருக்காது. எந்த மொழி பல மொழிகளிலிருந்து சொற்களை வாங்கி கொள்கிறதோ அந்த மொழி பவர்புல்லாகவும் அழியா மொழியாகவும் விளங்கும்.
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by KANNAN60 View Post
தூய தமிழில் எழுதுவது ஒரு கலை நண்பர் விஜெகன் அவர்களே! அது உங்களுக்கு நன்றாகக் கைகூடி வருகிறது என்பதை உங்கள் கதைகளில் கண்டு வியப்பவன் நான்! எனக்கும் அப்படி எழுதப் பிடிக்கும்தான்.
மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் !
Quote:
Originally Posted by KANNAN60 View Post
நல்ல திரிக்கு 5 விண்மீன் பாராட்டுகள் நண்பர் விஜெகன் அவர்களே! உங்கள் தமிழுக்கு ரசிகன் நான்!
மீண்டும் நன்றி அய்யா !
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
என்னாலும் பிறமொழிச் சொற்கள் கலக்காமல் தூய தமிழில் எழுத முடியும்.. ஏற்கனவே எழுதியும் உள்ளேன்.. ஆனால் அது கதை படிப்பவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்த பிறகு நான் என் நடையை மாற்றிக் கொண்டேன்..
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே !
Quote:
Originally Posted by SIRUTHAI View Post
ஜெகன் அன்பருக்கு என் மரியாதையான வணக்கங்கள்! இத்திரியை ஆரம்பித்து தங்கள் ஆதங்கங்களை பரிமாறிக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்! சுத்தமான தமிழில் எழுததான் எனக்கும் பிடிக்கும்... நானும் என் கதைகளில் குறைந்தபட்ச ஆங்கில வார்த்தைகளை மட்டுமே உபயோகிக்கிறேன். கதையில் யதார்த்தத்தை கொண்டுவர சில சில வார்த்தைகளை உபயோகிப்பது கட்டாயமாகிறது. சில சமயம் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பது கொஞ்சம் பொது அறிவு வளரவும் உதவுகிறது. இந்த லோகத்தில் இருக்கும் உறுப்பினர்கள் வெறும் காமக்கதைகளை மட்டுமே படிக்காமல்/படைக்காமல் நிறைய பொதுநலக் கருத்துகளையும் கதை மற்றும் பிற பதிப்பு மூலம் பதிக்கிறார்கள்! ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது, அதன்மூலம் மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள்!
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by dreamer View Post
என்னாலும் தூய தமிழில் எழுத முடியும் --.ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல் - (1). அது இயற்கையாக இருக்காது; (2) கால விரயம் ஆகும். மன்னியுங்கள், நான் என் எழுத்துப் பாணியை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by asho View Post
இங்கே கதை எழுதுபவர் தான் சொல்லவந்ததை தனக்குத்தெரிந்த வார்த்தைகள் போட்டு தன்க்கென்று தனி முத்திரையுடன் பதிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
தங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !
Quote:
Originally Posted by niceguyinindia View Post
சுத்தமான தமிழ் படைப்புகளை படைக்க ஆர்வம் தான் ஆனால் அது எந்த அளவுக்கு வெற்றியை தரும் என்பது தெரியவில்லை கதையின் சுவாரஸ்யத்துக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில் தவறொன்றும் இல்லை என்றே நானும் கருதுகிறேன்
தனகளின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !
Quote:
Originally Posted by Hermi View Post
உங்கள் ஆதங்கம் புரிகிறது...அதேசமயம் தூய தமிழில் கதை எழுதுவது உங்களுக்கு நன்றாக வருகிறது..ரசனையாகவும் இருக்கிறது..ஆனால் அதை எல்லோரும் முயற்சி செய்தால் சரியாக வருமா என்று தெரியவில்லை..அதனால் நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடருங்கள். சரியா? பிற மொழிகளை தமிழில் கலந்து (தமிழில் எழுதுவது) வருவது தமிழுக்கு சிறப்புதானே..! காமலோகத்தில் ஆங்கில வார்த்தைகளை நேரிடையாக தட்டச்சு செய்யாமல் தமிழில் தட்டச்சு செய்வதால் இதை ஒரு குறையாக சொல்ல முடியாது. நண்பரே, ஜெகன் உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும்...வாழ்த்துக்கள்.
தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Quote:
Originally Posted by Mathan View Post
நல்ல சிந்தனையோடு திரி துவங்கிய நண்பர் ஜெகனை நான் பாராட்டுகிறேன். நான் சொன்னவை யாவும் அந்நிய மொழியை ஒலிக்க செய்து எழுதுவது பேசுவது எல்லாமே அடங்கும். நீங்கள் உங்கள் வழியிலேயே தொடருங்கள் அய்யா அம்மனி. உங்களின் தமிழ் தொண்டு பரவட்டும். தமிழ் வாழட்டும், வாழும் எனவும் சொல்லி விடைபெறுகிறேன்...
தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அய்யா !
Reply With Quote