View Single Post
  #7  
Old 23-12-20, 03:20 PM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
நண்பா, இது இயற்கையான மற்றும் எதார்த்தமான உண்மையும் கூட, நாம் அதிகம் பார்க்கின்ற, படிக்கின்ற, கேட்கின்ற செய்திகளின் தாக்கம் கண்டிப்பாக நமது படைப்புகளில் வருவது இயல்பு.

நீங்கள் சொந்தமாக கதை எழுதுகிறீர்கள் என்பதே நீங்களும் ஒரு படைப்பாளி, நன்பர் வேதா சொன்னது போன்று படித்தவற்றை அப்படியே பிரதிபலிக்காமல் எழுதினாலே நன்று, என்னை பொறுத்தவரை படைப்பாளிகள் இருவகை ஒன்று புதிதாக உருவாக்குவது மற்றொன்று ஏற்கனவே இருப்பதை செறிவூட்டுவது. நீங்கள் அதில் எந்த வகை என்று அறிந்துகொள்ளுங்கள்

புதிதாக உருவாக்கவேண்டும் என்றல் அதிகம் தெரிந்துகொள்ளவேண்டும், படிக்கவேண்டும், நல்ல அனுபவமும் வேண்டும். நான் பொதுவாக மற்ற ஆசிரியர்கள் எழுதும் விதத்தை மட்டும் எடுத்துக்கொள்வேன் அவர்கள் எப்படி சூழ்நிலைகளை வர்ணிக்கிறார்கள், எப்படி உணர்ச்சிகளை கையாளுகின்றனர், தொடர்ச்சியை எப்படி ஏற்படுத்துகின்றனர் இப்படி பல அன்பர்களின் கதை படித்து அதை என் எழுத்தில் பயன்படுத்தி கொண்டுள்ளேன்.

மேலும் ஒன்று சிலநேரங்களில் ஒரு கதை படிக்கும் போது இதை இப்படி எழுதியிருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒன்று தோன்றும் அது தான் நாம், அந்த எண்ணத்தை கதையில் கொண்டு வந்தாலே தனித்துவம் வந்துவிடும் என்று நம்புகிறேன்
Reply With Quote