View Single Post
  #83  
Old 19-05-18, 03:50 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,452
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
அமைதியானவர், அடக்கமானவர், அன்பானவர், பண்பானவர், திறமை மிக்கவர் என சொல்லிக்கொண்டே போகலாம் இவரைப்பற்றி. இவரை இங்கே பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க வாய்ப்பில்லை. நண்பர் ஹெர்மியை பெரும்பாலும், 2011ல் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்த 'திகில் இரவு' சிறப்பு நிர்வாக சவாலில் தான் பலருக்கும் தெரிந்திருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில் அந்த நி.சவாலில் கலந்துக்கொண்ட 12 நபர்களில் ஹெர்மியும் ஒருவர். லோகத்தின் ஜாம்பவான்கள் பலர் கந்து கொண்ட அந்த சவாலில் ஓர் போர் வீரனைப்போல் களத்தில் குதித்து அவரது கதை மூலம் பலரையும் வியக்க வைத்தவர். சிலர் முன்பே அவரை அடையாளம் கண்டிருக்கலாம். எனக்கு அந்த 'திகில் இரவு' நி.சவாலில் தான் முதன் முறையாக ஹெர்மியை அடையாளம் கண்டேன். நல்ல எழுத்தாற்றல், கதை, கவிதை என கலக்குபவர்.

மிகவும் மென்மையான கதைகள் அதிலும் நளினமான கதைகளை எழுதுவதில் பெயர் பெற்றவர். அதிலே காதல் கதை, கிராமத்து கதை, க்ரைம் கதை என பலவகையான தளங்களில், நிறைய கதைகளை எழுதியுள்ளார். எனக்கு இவரது கிராமத்து கதைகள் ரொம்பவும் பிடிக்கும். இவரது எல்லாக் கதைகளிலும் நக்கல் நையாண்டி இல்லாமல் இருக்காது. ஆனால் எதுவுமே ரொம்பவும் எல்லை மீறி இருக்காது. படிக்க சுவாரஸ்யமாக அருமையாக எழுதக்கூடிய அற்புத படைப்பாளி.

இவரது பின்னூட்டங்கள் மிகவும் அருமையாக இருக்கும். யார் மனதையும் புண்படுத்தாதபடி மிக நாசூக்காக எழுதுபவர்.
Quote:
Originally Posted by MACHAN View Post
நண்பர் ஹெர்மியின் கதைகளுக்கு மிகுந்த ரசிகன் நான்...! நக்கல், நையாண்டி லொள்ளுத்தனமாக கதை எழுதுவதில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்திருக்கிறார். நண்பர் மதன் சொன்னதுபோல் 3000 பதிவுகளை ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாகவும் கடந்து விட்டார். நண்பர்களின் படைப்புகளுக்காக அவர் எழுதும் பின்னூட்டங்களும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.
Quote:
Originally Posted by anabayan View Post
ஹெர்மியின் படைப்பில் நாசுக்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. வார்த்தையில் குறும்பும் குசும்பும் நர்த்தனமாடும். கவிதைகளில் கவிநய அழகு கொளிக்கும்

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
ஹெர்மி தன் படைப்புகளாலும் பண்புகளாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்..
என் தங்கை புதுமலரை கலாய்பதென்றால் தம்பிக்கு பெப்பர்மிட்டாய் சாப்புடுராப்போல – கலாய்த்து விட்டு வாங்கி கட்டிகிரதுங்கரது அது வேற விசயம்-தமாஷுக்குப்பா
Quote:
Originally Posted by RasaRasan View Post
ஹெர்மியின் அவ்தாரில் சல்மான்கான் இருப்பாய். பாலிவுட் கேடியான சல்மான்கான் பார்க்க அமைதியாய் இருப்பார். ஆனா ஆளு செம கேடி. அதனை போல் பின்னூட்டங்களில் சாந்தமாய் யார் மனமும் புண்படாமல் ப்ளஸ் பாயிண்களை மட்டும் சொல்லியே மற்றவர்களை பாராட்டி பரிசிலும் வழங்குவார். ஆனா மவன்னே கதைன்னு வந்திட்டா மட்டும் சல்மான்கான் என்ற அவரின் உள்ளே தூங்கிகிட்டிருக்கும் கேடி பயல் வெளியே வந்து நையாண்டி லூசு சென்டிமெண்டு வில்லத்தனம் அது இது என அதகளம் பண்ணிடுவார்.
எல்லாருக்கும் செல்லப்பிள்ளையான தம்பி ஹெர்மி இப்போது 6000 பதிவுகளை தாண்டிவிட்டார். அவர் 10,000 என்ற மைல் கல்லை விரைவில் தாண்ட வாழ்த்துகள்.
Reply With Quote