View Single Post
  #42  
Old 02-03-09, 01:56 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
பல பல பதிப்புக்களிலும், ழ-ள-ல, ற-ர, போன்ற குழப்பங்களைக் காணும்போது, என் மனதில் அடிக்கடி தோன்றும் ஓர் எண்ணம்... பேசும்போது உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் எழுத்துப் பிழைகள் தானாக மறைந்து விடும்.

சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல், எழுத்துப் பிழையின்று எழுதுவதும் அவ்வாறே.. எழுதியவுடன் ஒரு முறை பிழை இருக்கிறதா என்று மீண்டும் பார்த்து திருத்துவதில் கவனம் செலுத்தினால் மீதி இருக்கக் கூடிய ஒன்றிரண்டு பிழைகளையும் களையலாம்...

தூய தமிழில் எழுதுவது வேறு.. பிழையில்லாமல் எழுதுவது வேறு.....!!
தெளிவான கருத்துக்கள்... 'இயன்றவரை பிழையின்றியே எழுத வேண்டும்' என்பதை ஒவ்வொருவரும் மனமுவந்து குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நன்றி நண்பரே....

Quote:
Originally Posted by sreeram View Post
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்

இந்த இரண்டில் எது சரியான தமிழ்....?

வாழ்த்துகள் என்பதே சரியான தமிழ். ‘க்’ பயன்படுத்தலாகாது.

இத்திரியில் தமிழில் ஏற்படும் உங்களது ஐயங்களையும் சொற்களையும் கேளுங்கள். என்னால் இயன்றளவு விளக்கம் தர விழைகின்றேன். ஆங்கில வழிக் கல்வி கற்றிருந்தாலும், மின்ணணுவியலில் முதுநிலைப் பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் மீது எனக்குத் தீராக் காதல்.
நன்றி நண்பர் ஸ்ரீராம்... இதுநாள் வரை இத்தவறை செய்து வந்துள்ளதை உணர்ந்து இனி திருத்திக் கொள்கிறேன்... நண்பர் காமராசன் சொல்லி இருப்பது போல 'உச்சரிப்பை' உணர்ந்து எழுதுவது பற்றி தங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் இருக்கிறேன். சமஸ்கிருதம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் இருப்பது போல தமிழில் உச்சரிப்பிற்கு ஏற்ப எழுத்துக்கள் இல்லாமல், இடத்திற்கு ஏற்ப ஒலி கூடியோ குறைந்தோ ஒலிப்பது போல இருப்பது குறையா? உதாரணமாக ஹிந்தியில் 'க' என்பதையே க1, க2, க3, க4 என நான்கு உச்சரிப்புடன் தனித்தனி எழுத்து வடிவத்துடன் இருப்பது போல தமிழிலும் இருந்திருக்கலாமோ?!

Quote:
Originally Posted by BILLA View Post
நண்பரின் தமிழ்ப்பற்று என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது.... எனக்கும் இந்த க், ப், த், இவற்றை எங்கு சேர்க்கவேன்டும் என்ற ஐயப்பாடு உள்ளது.....

இதற்கென்று ஏதாவது இலக்கணம் இருந்தால் அதை இங்கு தெரிவிக்கலாமே?
இருக்கிறது நண்பரே... தமிழில் 'ஒற்று'களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு என இலக்கணம் இருக்கிறது. இங்கோ, தமிழ் மன்றத்திலோ நண்பர் அசோ பதித்துள்ளதாக நினைவு... விரைவில் சுட்டி தருகிறேன்....
Reply With Quote