View Single Post
  #15  
Old 15-01-12, 10:51 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பர்களே,

உங்கள் ஆலோசனையை குறித்துக் கொள்கிறேன். தற்போது என்னால் உடனடியாக செய்ய முடிந்த ஒரு சில வசதிகளை முடுக்கிவிடுகிறேன். மற்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கவனிக்கிறேன்.

1) ஒரு தேடுதலுக்கும் அடுத்த தேடுதலுக்கும் நடுவே 180 வினாடிகள் (3 நிமிடங்கள்) இடைவெளி வைக்கப் பட்டிருந்தது. இதற்கு காரணம் சில தீய சக்திகள் இதை திரும்ப திரும்ப உபயோகித்து நமது தளத்தின் வேகத்தை குறைக்கவோ அல்லது தடைபடச் செய்யவோ கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்யப் பட்டிருந்தது. இது பலருக்கு அசௌகரியம் என்று உணரப் படுவதால், அதன் நேர அளவு இன்றிலிருந்து 60 வினாடிகளாக (1 நிமிடம்) குறைக்கப் படுகிறது.

2) உங்கள் விருப்பப் படி தனிமடல் வசதியின் அளவு 50-லிருந்து 100 ஆக உயர்த்தப் படுகிறது.
நன்றி, தலைவர் அவர்களே. இந்த மாற்றங்களை எல்லாரும் வரவேற்போம்.
Quote:
Originally Posted by xxxGuy
@கண்ணன்60,
3) நம் தளத்தின் மல்டி கோட் வசதியை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்களா என எனக்கு சந்தேகமாக உள்ளது. நான் இந்த பதிப்பை மல்டி கோட் மூலமாகத் தான் பதிக்கிறேன். 3 பதிப்புகள் மொத்தம் 4 சொடுக்குகளில் எளிதாக வந்து விட்டன.
அதுதான் எப்படி என்று புரியவில்லை. உண்மையில் நீங்கள் நண்பர் கண்ணனின் பின்னூட்டத்திலிருந்து இங்கு தரப்பட்ட பகுதிகளை ஹைலைட் செய்து, உங்கள் நோட்பேடில் காபி செய்து இங்கு பதித்திருக்கிறீர்கள்.நாங்கள் வரவில்லை என்று சொல்வது. இது அல்ல. நீங்கள் கோட் செய்த பகுதியிலிருந்து பக்கத்தில் இருக்கும் அம்புக்குறியைச் சொடுக்கினால் அவர் எந்த கான்டெக்ஸ்டில் அதைச் சொன்னார் என்பது விளங்கும். அந்த வசதியைத்தான் நாங்கள் வேண்டுகிறோம். இந்த பின்னூட்டத்தின் ஆரம்பத்தில் [QUOTE=xxxGuy;1124765] என்று சுட்டியோடு இருக்கும் அம்புக்குறியையும் இப்பகுதியின் துவக்கத்தில் அது இல்லாமல் இருக்கும் [QUOTE=xxxGuy] என்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

Quote:
4) இரண்டு "வார்த்தைகள்" கொண்ட சொற்றொடரைத் தேடும் வசதியும் எனக்கு சரியாக புரியவில்லை, இரண்டு "எழுத்துகளா"? அல்லது வார்த்தைகளா என எனக்கு சந்தேகமாக உள்ளது. இரண்டு வார்த்தை என்றால். இந்த வசதி ஏற்கனவே இருக்க வேண்டும்.
இரண்டு எழுத்துகள் உள்ள தொடரைத் தேடமுடிகிறது. ('சாவி') என்ற சொல்லைத் தேடச் சொன்னால் அது 8 இடங்களில் வருவதைக் காட்டுகிறதே. இரண்டு சொற்கள் என்றாலும் தேடித் தருகிறது. ஆனால் 'சர்ச்' என்ற இடத்தில் சொடுக்கியவுடன் இப்படி ஒரு மெசேஜ் வருகிறது.

Please type keyword
Minimum word length: 3
Maximum character: 35

இதுதான் நண்பர் கண்ணனின் குழப்பத்துக்குக் காரணம் என நினைக்கிறேன். இதை மாற்றிவிட்டால் சரியாக இருக்கும்.

Quote:
@டிரீமர்,

5) உங்களின் பாயிண்ட் நம்பர் (1)-ல் கூறியுள்ள தகவல் வியப்பாக உள்ளது. இதுவரை யாரும் இதைத் தெரிவிக்கவில்லை. இது ஒருவேளை உங்கள் கணிணியில் அல்லது உலாவியில் உள்ள பிரச்சனையாக இருக்கலாம். குறிப்பாக Cookies பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது. வேறு உலாவியில் அல்லது வேறு கணிணியில் முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? சாத்தியம் என்றால் முயற்சி செய்து பார்க்கவும்.

சற்று விளக்கமாக படிப்படியாக இந்த பிழைச் செய்தி வருவதற்கு முன் நிகழ்ந்தவைகளை வரிசைப் படுத்திக் கூறினால், சரி செய்ய எளிதாக இருக்கும். முடிந்தால் அதன் "ஸ்கிரீன் ஷாட்" ஒன்றையும் அனுப்பிக் கொடுங்கள்.
செய்தி இவ்வளவு தான்.
Your submission could not be processed because you have logged in since the previous page was loaded.

Please push the back button and reload the previous window.

இதைக் கட்டமிட்டுக் கொடுக்கிறது. முகப்புப்பக்கத்தில் காலண்டருக்கு மேல் 'சர்ச் ஃபோரம்ஸ்' என்று வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் எத்தனை முறை ஒரு சொல்லை வைத்துச் சொடுக்கினாலும் கிடைக்கும் பதில் அதுவே. ஆனால் கன்ட்.ரோல் பேனல் இருக்கும் பக்கத்தில் 'லைவ் சர்ச்' என்று இருக்கும் பெட்டியில் இப்படி வர்வதில்லை. ஒழுங்காகத் தேடி விடை தருகிறது. நான் நண்பர் tdrajesh-இடமும் விசாரித்தேன். அவர் தன் கணினியில் கூகிள் க்ரோம் ப்ரௌஸர் உபயோத்து இதை வெரிஃபை செய்தார். அவருக்கும் இப்படித்தான் ஆகிறது.
Quote:
6) உங்களது பாயிண்ட் நம்பர் (1)-க்கு ஓழ்வாத்தியார் பதில் கூறியுள்ளது போல் நடைமுறையில் சாத்தியம் கிடையாது. இருந்தாலும் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் எதுவும் சாத்தியம் இல்லை என்று கூற முடியாது, ஏதாவது வழி பிறந்தால் உங்கள் ஆலோசனை நிறைவேற்றப் படும்.

7) இதை நானே பல முறை அனுபவப் பட்டிருக்கிறேன். எனக்கும் இது தேவை தான். ஆனால், பல வேலைகளின் நடுவே நினைவில் நிற்பதில்லை. நீங்கள் நினைவூட்டியுள்ளதால், இனி என் நினைவில் நிற்கும், அடுத்த மேம்படுத்துதலில் இதை சேர்க்க முயற்சி செய்கிறேன்.
எனது பாயின்ட் #1-க்கு மேலே விடை கொடுத்திருக்கிறீர்கள். இந்த பதில்கள் எனது எந்த பாயின்ட்டுக்காக என்று விளங்கவில்லை. 7) என்பதில் உங்கள் வரிசை எண் 7-ஆ, என் பாயின்ட் 7-ஆ? எனது #7-க்கான பதில் என்றால் 'PAGE UP'& 'PAGE DOWN' கீகள் நண்பர் ராஜேஷுக்கும் வேலை செய்யவில்லை.

மென்பொருள் லிமிடேஷன்ஸ் என்றால் சரி. இல்லாவிடில் முயற்சிசெய்து பார்க்கவும்

நன்றியுடன்.
Reply With Quote