வெற்றிக்கனியை பறித்த வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்
சரியான ஆளுக்குத்தான் வெற்றி சென்றுள்ளது. வாத்தி மாதிரி விமர்சனம் செய்வது என்பது நம்மால முடியாத காரியம் தான். சரியோ தவறோ தன் மனதில் பட்டதை அப்படியே பிரதிபலிக்கும் எண்ணம் கொண்டவர். ஆனால் என்ன குறை என்றால் இவ்வளவு பதிவுகள் செய்தும் இன்னும் எழுத்துப்பிழைகள் தான் குறைந்த பாடில்லை . உதாரணமாக றகரத்திற்கு ரகரம் இடுவது, உங்கள் என்பதற்கு உன்கள் என எழுதுவது அதிகம். இந்த குறைகள் எல்லாம் நீக்கி வாத்தியார் எழுதுவார் என ஆவலோடு எதிர்பார்க்கிறோம். மற்றபடி குறை சொன்னதாக எண்ண வேண்டாம். மனதில் பட்டதை சொல்கிறேன் அவ்வளவு தான். குறைகள் சொன்னால் வாத்தியார் திருத்துவார் என்று தான் சொல்கிறேன் தவறாக எண்ண வேண்டாம்.
|