View Single Post
  #31  
Old 28-09-05, 10:01 PM
கர்ணா's Avatar
கர்ணா கர்ணா is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Location: USA
Posts: 685
My Threads  
Unhappy 15 கதையா யப்பே?

திரு சிவா அவர்களே,
உங்களின் கருத்துக்கு மிகவும் கடுமையான விமர்சனங்கள் செய்ய முடியும் ஆனால் விரும்பவில்லை. தாங்கள் கூறியது போல் 15 கதைகளா அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நிறம்ப கதைகள் எழுதிய உங்களுக்கு தெரியும். நான் ஆரம்பித்த 2 கதையை இன்னும் முடிக்க நேரம் கிடைக்காமல் விழிபிதுங்கி நிற்கிறேன்.
கதை ஏழுதுவது கதை படிப்பது போல சாதரண விஷயம அல்ல என்பது என் கருத்து. நல்ல தரமான கதைகள் எழுத வெகு நேரம் வேண்டும். பிறகு அந்த கதையை தொடர்ந்து எழுத சூழ்நிலைகள் சாதகமாக வேண்டும். எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இதே தளத்தில் எத்தனை கதைகளை நீங்கள் வேகமாக ஸ்குரோல் செய்து படித்து இருப்பீர்கள் ஏன் என்றால் அதில் படிப்பதற்கு ஒன்றும் இல்லாததால். இன்னும் கதை எழுத சட்டம் போட்டால் கதைகளின் தரம் அதளபாதளத்திற்கு போகும் நண்பரே.
எனக்கு என் கதையின் ஒரு பாகம் சுமாரான நீளத்தில் எழுதுவதற்கு 2 மணி நேரம் எடுக்கிறது. என்னால் எப்பவும் ஒரு இடத்தில் உக்காந்து 2 மணி நேரம் எழுத முடியாது. ஆனால் கதைகளை படித்து விமர்சனங்கள் எழுத முடியும். அதுவும் நான் எல்லா கதைகளுக்கும் விசர்சனம் எழுதுவதில்லை விமர்சனம் இருந்தால் மட்டும் எழுதுவேன்.
உண்மைய சொல்லுங்கள் நண்பரே பதிப்புகள் கதைகள் அதிகம் எழுதினால் பதவி உயர்வு என்பதால் தானே இத்தனை வேகமாக கதை எழுதுனீர்கள். பதவி உயர்வே ஒரு முக்கியமான நோக்கம் நன்பரே அதனால் தான் அந்த விதிமுறையே உள்ளது. அதை இங்கே யாரும் மறுக்க முடியாது பதவி உயர்வுக்கு பின்னரும் கதை எழுதும் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் எல்லாராலும் அது முடியாது.
Reply With Quote