View Single Post
  #1  
Old 21-03-12, 04:29 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
என் உடல்நிலை -- ஒரு சுய விளக்கம்.

தீ.த.உ. பகுதியில் என் ‘வரது எனக்கு வருது’ தொடரின் கடைசி (4) பாகத்தைப் பதித்துவிட்டு இறுதியில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
Quote:

மன்னிக்கவேண்டும் வாசகர்களே. என்னால் எழுத முடியவில்லை. இனி வரும் மாதங்களில் என் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பில்லை. அதனால் பல பாகங்கள் செல்லக்கூடிய இத்தொடரை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.
இதைப் பார்த்த பல நண்பர்கள் தனி மடல் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் தம்பி ராஜேஷ் மூலமாகவும் என் உடல் நலம் பற்றி அக்கறையுடனும் கவலையுடனும் விசாரித்துவருகிறார்கள். சிலர் தாங்கள் எப்போது எப்படி எங்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுச் செல்வது என்று கேட்கிறார்கள். ஓரிருவர் தாம் சென்னை வரும்போது என்னை வந்து சந்திக்கலாமா எனவும் கேட்கின்றனர். ஏற்கனவே வாசகர் சவால் போட்டி நடத்த முன்பதிவு செய்துகொள்ளும் திரியில் போட்டி நடத்துவதிலிருந்து நான் விலகிக் கொண்ட போஸ்டைப் பார்த்துவிட்டு சிலர் இவ்வாறு வினவத் தொடங்கினர். அவ்வாறு வினவுவது இப்போது அதிகமாகிவிட்டது. அதனால் இந்தச் சுயவிளக்கம் தருகிறேன்.

ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் ஏதோ மரணப் படுக்கையில் இருப்பதுபோலவும் என்னைப்பற்றி விசாரிப்பதும், என்னைப் பார்த்துவிட்டுப் போவதும் ஒரு மரியாதை எனவும் நினைத்துக் கொள்ளாதீர்கள்.

நான் சென்ற மாதத்துக்கு அப்புறம் மறுபடி ஒருமுறை காய்ச்சல் வந்து அதற்குரிய மருந்துகளை எடுத்துக்கொண்டபிற்கு ஓரளவு ரிகவர் ஆனேன். அப்போதிலிருந்து என் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது. கொஞ்ச தூரம் கைத்தடி இல்லாமல் நடக்கமுடியும் என்ற நிலைபோய் இப்போது ஊன்றுகோல் இன்றி பத்தடிகூட நடக்க இயலவில்லை. பத்து வரிகள் டைப் செய்ய கால்மணி ஆனதுபோய் இப்போது அரைமணி தேவைப்படுகிறது. கம்ப்யூடரில் படிக்க/எழுத ஒரு செஷனுக்கும் மறு செஷனுக்கும் இன்டர்வல் ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது. கை நரம்புகள் இன்னும் கூடுதலாகவே வலிக்கின்றன. நண்பர் மா.கி. யின் ‘அண்ணிகள் ராஜ்ஜியம்’ முடிந்து நம் லோகத்தின் பத்தாண்டு நிறைவுத் திருவிழா பாதி நடக்கும்வரை எப்படியோ பல்லைக்கடித்துக் கொண்டு ஓட்டினேன். இனி இயலாது. எனவேதான் கதை பதிப்பதிலிருந்து விலகுகிறேன். ஓரிரு நண்பர்களின் படைப்புகளுக்கு சுருக்கமாகப் பின்னூட்டமிடுவேன். அதுவும் சில வாரங்களில் நின்றுவிடும்.

பல இரவுகளில் சுமார் 10 மணிக்குப் படுக்கப்போய், காலை ஒருமணி, ஒன்றரை மணிக்கெல்லாம் முழிப்புக் கொடுத்துவிடுகிறது. அப்புறம் புரண்டு புரண்டு தூங்க முயற்சித்து தலைவலிதான். இந்த இன்ஸோம்னியாவுக்கு சிறிதளவு தூக்க மருந்து சாப்பிட்டால் ஒரேயடியாக 12 மணி ,15 மணி நேரம் தூக்கம்தான். மருந்து சாப்பிட்டுவிட்டு தூங்கி எழும்போது ஃப்ரெஷ்ஷாக இல்லை. டயர்டாகத்தான் இருக்கிறது. அதனால் தூக்கமாத்திரைகளை அவாய்ட் செய்கிறேன். இன்ஸோம்னியாவின் விளைவு நாளெல்லாம் தூக்கக் கலக்கம். கோழித்தூக்கம். பேப்பர், புத்தகம் படிக்கும்போது, டீவி பார்க்கும்போது, கம்ப்யூடரில் படிக்கும்போது/எழுதும்போது எப்போதும் திடீர் திடீரென்று சில நிமிடங்கள் தூங்கிவிடுகிறேன். அட்டென்ஷன் ஸ்பேன் குறைந்துவிட்டது.

இங்கு யார் வந்தாலும் இரண்டு நிமிஷத்துக்குமேல் அவர்களுடன் பேச முடிவதில்லை. மூச்சு வாங்குகிறது. டெலிபோனிலும் அவ்வாறே. அவ்வப்போது இருமல், தும்மல், விக்கல், மார்வலி. எல்லாம் தொந்தரவுதான். ஒருமுறை ஆபரேட் செய்தபிறகும் ப்ராஸ்டேட் ப்ராப்ளம். யூரினேஷன் ஃப்ரீக்வென்ஸி அதிகமாகிவிட்டது. டாக்டர் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும்ங்கிறார். நான் டாக்டரிடம் போவதையே நிறுத்திவிட்டேன். அவர் போனவுடன் அப்டமினல் ஸ்கேன் ரிபோர்ட் கேட்கிறார். என்னால் காலை பத்துப் பதினோரு மணிக்கு ஸ்கேன் செய்யும் டாக்டர் வரும்வரை பட்டினி கிடந்து தண்ணீர், தண்ணீர் தண்ணீர் என்று மூச்சுமுட்டத் தண்ணீர் குடித்துவிட்டு காத்திருக்க முடியவில்லை. அதனால் அவர் முன்னால் கொடுத்த மருந்துகளையே தேவைக்கேற்ப கூட்டிக் குறைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். (குறைப்பதேது, கூடிக்கொண்டுதான் போகிறது

இங்கு நான் இருக்கும் ஹாஸ்பிடல் கேம்பஸில் எல்லா ஸ்பெஷலிஸ்டுகளும் வந்து பார்க்கிறார்கள். டாக்டர்களிடம் செல்வதை சில காரணங்களினால் தவிர்த்துவருகிறேன். (பணப் பற்றாக்குறை காரணமில்லை. எனக்கு மெடிகல் இன்ஷ்யுரன்ஸ் இருக்கிறது. கொஞ்சம் சேவிங்ஸும் இருக்கு.) ஓடறவரைக்கும் ஓடட்டும்.

என் உடல்நலத்தில் என்றாவது முன்னேற்றம் ஏற்பட்டால் நானே தெரிவிக்கிறேன். பின்னடைவு என்றால் தம்பி ராஜேஷ் உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் வாரம் ஒருமுறையோ இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ இந்தப்பக்கம் வரும்போது கண்டிப்பாக வருவேன் என்று அடம் பிடிக்கிறார்.

தயவு செய்து என்னைப் பார்க்கவோ என்னுடன் போனில் பேசவோ முயலவேண்டாம். அது எல்லாமே எனக்கு ஸ்ட்.ரெயின். அவசியமானால் தனிமடல் இடவும். ஓரிரு வரிகளில் பதில் எழுதுகிறேன்.

.
Reply With Quote