View Single Post
  #1  
Old 19-11-08, 07:22 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
எம்.என்.நம்பியார் மரணம் அடைந்தார்



பிரபல வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.
பழம்பெரும் வில்லன் நடிகர் நம்பியார். இவர் 50 ஆண்டுகளாக சினிமாவில் கொடி கட்டி பறந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர் படங் களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடன் குடியிருந்த கோயில், எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், படகோட்டி, புதிய பூமி, நாளை நமதே, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சிவாஜி நடித்த திரிசூலம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மொத்தம் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக நம்பியார் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. வீட்டிலேயே படுத்த படுக்கையானார். இன்று பகல் 1.25 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் நம்பியார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்- நடிகைகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

திரை உலகின் புனிதர் வாழ்க்கை வரலாறு

நம்பியாரின் முழு பெயர் மஞ்சேரி நாராயணன் நம்பியார் அவர் 1919-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி கேரளா மாநிலம் கண்ண னூரில் பிறந்தார்.

நடிப்பில் இருந்த ஆர்வத்தால் 13 வயதிலேயே நவாப் ராஜ மாணிக்கம் நாடக குழுவில் சேர்ந்தார். ஆரம்பத்தில் இவருக்கு 3 ரூபாய் சம்பளம் வழங் கப்பட்டது.

1935-ம் ஆண்டு வந்த ராமதாஸ் என்ற படத்தில் முதல் முறையாக நடித்தார். அது தமிழ், இந்தியில் வெளி வந்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்தார்.

இதுவரை 1000 படத் துக்குமேல் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படத்தில் நடித்துள்ள அவர் ஜங்கிள் என்ற ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.

நம்பியார் தனியாக நாடக குழு ஒன்றை நடத்தி வந்தார். அய்யப்ப பக்தரான அவர் 65 ஆண்டுகள் சபரிமலைக்கு சென்றுள்ளார்.

நம்பியாருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்களில் சுகுமாறன் நம்பியார் பாரதீய ஜனதா தலைவராவார்.


நம்பியார் சுத்த சைவம், அதை தன்னுடைய இளமை காலத்தில் இருந்து இன்று வரை கடைப்பிடித்து வந் தார். இத்தனைக்கும் அவர் குடும்பம் அசைவ குடும்பம் இருந்தும் விடாப்பிடியாக தன் கொள்கையில் உறுதி யாக இருந்தார். தன்னுடைய 12 வயது வரையில் பால் கூட அருந்த மாட்டார்.

எம்.ஜி.ஆருடன் ஏராள மான படங்களில் நடித்தது மட்டும் அல்லாமல் அவரு டைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடை களில் ஏறியதும் கிடையாது. எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது.

நம்பியார் எந்த ஊருக்கு படப்பிடிப்புக்கு சென்றா லும் தன் மனைவி கையால் சமைத்து தான் சாப்பிடுவார். அதற்காக தன் சொந்த செலவில் மனைவியை அழைத்து செல்வார். ஒரு முறை ஒரு தாயாரிப்பாளர் நம்பி யாரின் மனைவிக்கும் சேர்த்து தன் கம்பெனி செலவில் விமான டிக்கெட் எடுத்து விட்டார். ஆனால் நம்பியார் அதை மறுத்து விட்டார்.

நான் மட்டும் தான் உங்கள் படத்தில் நடிக்கி றேன். என் மனைவி நடிக்க வில்லை என்று கூறி அதற் கான தொகையை சம்ப ளத்தில் இருந்து குறைத்து கொண்டார்.

திரையுலகினருக்கு (ஏன், இப்போது வெளியுல கினருக்கும் கூட) சர்வ சாதாரணமாகி விட்ட குடிப்பழக்கம், புகைப் பழக் கம் எதுவும் இல்லாத மனி தர் (புனிதர்) எம்.என். நம்பி யார்.

இவரிடம் நடிகர்கள் மட்டு மல்லாது, மனிதர்களும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.

நம்மிடம் எஞ்சியிருக்கும் பழையவர்களில், நல்லவர் களில் ஒருவர், இவர் பல்லாண்டு வாழ்க.

நன்றி விடுப்பு டாட் காம்

மும்மூர்த்திகள் என்று வர்னிக்கப் படும் எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, ஆகிய உச்ச நடிகர்கள் முதல் கமல் ரஜினி என்ற அடுத்த கட்ட உச்ச நடிகர்களுடன் நடித்த சிறந்த நடிகர் அவருக்கு எமது காமலோகம் சார்பில் கண்ணீர் அஞ்சலி
Reply With Quote