View Single Post
  #144  
Old 15-09-11, 10:11 AM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2011
Location: Pammal, Chennai, Tamil Nadu
Posts: 833
My Threads  
என்னைப்போன்ற புதிய உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் பல பயனுள்ள தகவல்கள் மற்றும் முக்கியமான தகவல்கள் இருக்கும் விபரத்தை கொடுத்த நண்பர் மாயகிருஷ்ணனை பாராட்ட வார்த்தைக்ளே இல்லை.
Quote:
அதாவது இணையத்தை ஒரு காரண காரியத்திற்காக யாரும் பயன்படுத்துவதில்லை. ஒரு நோக்கத்திற்காக உள்ளே நுழைகிறார்கள். பிறகு மனம் போன போக்கில் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு மாறி கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு பிரச்சனை. நம் வாழ்வை நாம் இப்படி வீண் செய்ய முடியாது.
மிகச்சரியாக சொன்னீர்கள். நான் இப்போது அப்படித்தான் அலைந்துக் கொண்டு இருக்கிறேன். கூடிய விரைவில் முறையாக உபயோகிக்க கற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறேன்.
Quote:
தொடக்க காலங்களில் நான் எல்லா பகுதிக்கும் சுற்று பயணம் போவதுண்டு. ஆனால் தற்போது கதைகள், கதைகள் பற்றிய உரையாடல் பகுதிக்குள் என்னை சுருக்கி கொண்டு விட்டேன். காரணம் காமலோகம் மிக பெரிய கடல். தினம் பல திரிகள் தொடங்கபடுகின்றன. பல பின்னூட்டங்கள் எழுதபடுகின்றன. அத்தனையும் பார்த்து கொண்டிருப்பது முடியாத காரியம். அதற்கு பதிலாக எனக்கு ஆர்வமானதை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். மற்ற பகுதிகளுக்கு போவதில்லை என்பதல்ல. மிக குறைவாக போகிறேன் என்பது தான் உண்மை. உங்கள் ஆர்வத்தை பொறுத்தும் நீங்கள் தினசரி தளத்திற்கு செலவழிக்கும் நேரத்தை பொறுத்தும் உங்கள் காமலோக உலாவின் அளவுகோளை உருவாக்கி கொள்ளுங்கள்.
சிறப்பான ஆலோசனை. முயற்சி செய்து பார்க்கிறேன்.
Quote:
படிக்க வேண்டிய மற்ற திரிகள்
இந்த தலைப்பின் கீழே பல தகவல்கள் இருப்பது தெரிகிறது. ஒவ்வொன்றாக படிக்க முயலுகிறேன்.
(பின் குறிப்பு : எனக்கு எப்படி 'கோட்' பண்ணுவது என்பதை சொல்லி கொடுத்த நண்பர் பச்சிக்கு நன்றி. முதல் தடவையாக இங்குதான் முயற்சி செய்கிறேன்.)
Reply With Quote