View Single Post
  #124  
Old 15-01-09, 12:29 AM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by jayak View Post
...
தமிழ் புத்தாண்டு ..... எந்த ஒரு கலந்துரையாடல்கூட இல்லாமல் திடிரேன முடிவு எடுத்து அதை மொத்த தமிழர்கள்மேலும் நாம் ஆட்சியில் இருக்கிறோம், நாமும் நம்மை அண்டிஉள்ளவர்கள் மட்டும்தான் தமிழ் என்று சட்டம் இயற்றி திணித்தால், பலவருடங்களாக இருந்த சித்திரை வருடபிறப்பு என்பது மாறிவிடுமா....
ஆகையால் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை சித்திரை மாதம் நாம் பார்த்துக்கொள்ளலாம்
தவறு ஜெயக் அவர்களே..
பல ஆண்டுகளாக தமிழறிஞர்களின் கோரிக்கை..இது.
புதியதாக வருவதாலும்.. ஒரு நாள் விடுமுறை போவதாலும் கோபம் கொண்டு சொல்ல கூடாது..
இதை பற்றி பல ஆன்டுகளாக பலரும் பேசியுள்ளனர்..
தரணி ஆண்ட தமிழனின் கால அளவைகளை இடையில் வந்தவர்கள்(ஆரியமாயை) மாற்றிவிட்டனர்..
அதை இன்று திருத்தியுள்ளனர்..
இதை பற்றி சித்திரை திருனாள் வாழ்த்துக்களில் இத்தளத்திலேயே வாதிட்டு அசோ அவர்களும் நல்ல பல கருத்துக்களை சொல்லியுள்ளனர்..
தமிழில் இது வரை நாம் கொண்டாடிய 60 வருடங்களின் பெயர்கள் தமிழ் பெயர்களே அல்ல..
விளக்கத்திற்க்காக தான் இந்த பதிப்பு..

சென்னை மாகணம்.. தமிழ் நாடு ஆன போதும்..
மெட்ராஸ் சென்னை ஆனபோதும் இருந்த சந்தோஷம் தாம் இதற்கும் வர வேண்டும்

ஜெயக் அவர்களுக்காக இதோ பாரதி தாசனின் வரிகள்
"பத்தன்று; நூறன்று;பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல் நாள், பொங்கல் நன்னாள்!"

-புரட்சி கவிஞர் நம்மை விட தமிழறிந்த அறிஞர் என கருதுகிறேன்...
மேலும் பல தமிழர் அமைப்புகளின் அறிவிப்புகலையும் இங்கே சென்று பார்க்கவும் http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19030

தற்போதைய திருவள்ளுவர் ஆண்டு 2040 துவக்கம்

ஜெய்க் அவர்கள் திருப்தியடைந்து பதில் பதிப்பார் என எண்ணுகிறேன்...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote