அடடா.... எனது வாழ்த்துகளை முதலிலேயே தெரிவித்து பதிவு செய்து விட்டதாகத்தான் இதுவரை கருதி இருந்தேன். இப்போது இத்திரியை பார்த்த பிறகுதான் எனது பதிவு ஏதும் இல்லாமல் எப்படியோ மிஸ் ஆகிவிட்டது.
வெற்றிக் கனியை தட்டிப்பறித்து 10 வது முறையாக சவால் ராஜா பட்டத்தைப் பெற்ற ராஜேஷ் அண்ணாவுக்கும், இரண்டாமிடம் பிடித்த நண்பர் நல்லவன் அவர்களுக்கும், மூன்றாமிடம் வந்த நண்பர் ராராவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும், என்னைப்போலவே போட்டியில் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கதை எழுதி ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போன நண்பர்களுக்கும் பாராட்டுகள். ஓட்டுப்போட்ட அத்தனை வாக்காளப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
|