View Single Post
  #20  
Old 08-12-15, 03:58 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
நண்பர்களின் பதிவுகளை கண்டு நிலைமை அறிந்துக்கொண்டேன். லோகவாசிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதை அறிந்து மகிழ்ந்தேன். சென்னை வாசிகளில் நான் தொலைப்பேசி தொடர்பில் இருப்பது திரு ராஜேஷ் அவர்களிடம் மட்டுமே. ஆனால் போன் வேலை செய்யுமோ என்ற காரணத்தினால் பேசவில்லை. லோகத்திலும் சரியாக வந்துபோக முடியவில்லை. கோடங்கியார் நலமுடன் இருப்பார் என்று எண்ணுகிறேன்.
இந்த வெள்ளத்தினை பார்த்ததும் எனக்கு எங்கள் சூரத் வெள்ளம் தான் நினைவிற்கு வந்தது. நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஃபுட்போல் மேட்ச் போல் வந்துபோகும். அப்படி ஒரு முறை வந்த பொழுது தான் ப்ளேக் என்ற மோசமான நோய் வந்தது. நான் இந்தியாவிலிருந்து கிளம்பும்பொழுது கடைசியாக 2006 ஆம் ஆண்டு வெள்ளத்தினை பார்த்துவிட்டு தான் கிளம்பினேன். அபார்ட்மெண்ட்டின் மொட்டைமாடியில் நின்றுக்கொண்டு ஹெலிகாப்டரிலிருந்து போடும் உணவிற்கு கையும் ஏந்தியிருக்கிறேன். ம்ம் கசப்பான நிகழ்வுகள்..

தமிழகத்தில் எனக்கு ரொம்ப தெரிந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். அவர்களிருவருக்கும் ஆபத்தில்லை என்று அறிந்து மகிழ்ந்தேன்.
பாண்டியிலும் வெள்ளம். அநபாயனிடம் யாராவது பேசினீர்களா?
ராரா & மச்சான் குமரி பக்கம் எந்த பிரச்சினையும் இல்லையே?
தாமிரபரணியிலும் வெள்ளம் என்று கேள்விப்பட்டேன். பச்சி நலமா?
Reply With Quote