View Single Post
  #5  
Old 13-07-10, 02:56 AM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
இத.. இதத்தான் ரொம்ப நாளா எதிர்ப்பார்த்துட்டு இருந்தேன் !

நண்பனுக்கு செய்யும் சிறப்பா, நான் செய்யனும்னு ஆசையா இருந்தேன் ஆனா பிண்ட்டூ முந்திக்கிட்டார். அதுவும் நல்லதுக்குதான், இல்லேனா என்ன எழுதுறதுன்னு தெரியாம, எனக்கு ரொம்ப நேரம் ஆயிருக்கும். (விஜியை பத்தி எழுதுறதுன்ன சும்மாவா).

நண்பர் பிண்ட்டூ தேவையானவற்றை நச்சுன்னு அழகா சொல்லிட்டார், அதிலும் தலைப்பு ‘விக்கிப்பீடியா விஜி’ பிரமாதம். விஜிக்கு சொல்றதுக்கு, முன்னாடி உங்களுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன் பிண்ட்டூ. நல்ல படைப்பாளிக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று காத்திருந்து செய்த அந்த உணர்விற்கு - வாழ்த்துகள், நன்றிகள் !


அப்புறம், இந்த விஜிய பத்தி என்ன சொல்றது,

காவியங்களாக கதைகள் படைத்து
ஓவியங்களாக கவிதைகள் தீட்டி

உரைகல்லாக உறத்து உரைத்து
படிகல்லாக படைப்பாளிகளை உயர்த்தி

நீ என்றும் செய்திட்ட சேவை அழகு,
நீரின்றி அமையாது காம உலகு !

முவாயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துப்பா ! - விரைவில்,
நாலாயிரத்திற்கும் பாட வேண்டும் வாழ்த்துப்பா !!

தங்கவாசல் வந்ததிற்காக தரமான படைப்புக்காக ஒதுக்கி வைத்திருந்த இந்த 1550 பதிவை, தரமான படைப்பாளியான தங்கமான ஓஷோவிஜிக்கு சமர்ப்பிக்கிறேன்!

மீண்டு(ம்) வந்து லோகத்தில் சுறுசுறுப்பாக வலம் வர எதிர்ப்பார்க்கிறேன் !

வாழ்த்துக்கள் !!!
Reply With Quote