View Single Post
  #1  
Old 18-02-10, 07:43 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
"16000 ரன்கள் அடித்து விட்டார் மரியாசீர்....!!!" (updated: 01.02.16)

ஆறே மாதத்திற்குள்ளாக 3000 பின்னூட்டங்கள் பதித்து தொடர்ந்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் நண்பர் மரிய ஆசீர் அவர்களை வாழ்த்துவோம் நண்பர்களே....!

இவர் ஆகஸ்ட் 2009 - ல் சேர்ந்தாலும் முதல் மூன்று மாதங்களில் அவ்வளவாக பின்னூட்டங்கள் பதிக்கவில்லை. ஆனால் கழிந்த மூன்று மாதங்களில் மட்டும் 2500 பின்னூட்டங்களுக்கும் மேல் பதித்து இமாலய சாதனை படைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

இவர் போகும் வேகத்தை பார்த்தால் வாத்தியார் நெருங்கப் போகும் பத்தாயிரத்தை கூட ஒரே மூச்சில் வெகு விரைவில் நெருங்கி விடுவார் போலத்தான் தெரிகிறது. எப்போதும் போல உங்களின் பங்களிப்புகள் தொடர வாழ்த்துக்கள் நண்பரே மரிய ஆசீர். 3000 பதித்ததன் மூலம் விரைவிலேயே நீங்கள் தங்கவாசல் எட்டிப் பார்க்கவும் வாழ்த்துகிறேன்.



25.07.2010


26-08-2009 ல் தனது லோக பயணத்தை தொடங்கிய மரியாசீர், இன்று 25.07.2010 - அதாவது சரியாக 11 மாதத்தில் 6000 பின்னூட்டங்களை பதித்திருக்கிறார். அசுரவேகத்தில் அனாயாசமாக 6000 அடித்த மரியாசீரை நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.

வாழ்த்துக்கள் மரியாசீர்.




22.09.2010


தற்போது நான் விடுமுறையில் இருந்தாலும் ஏழாயிரம் எட்டிய எழுச்சிமிகு பின்னூட்ட நாயகனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இன்றோடு 7250 பதிவுகளை கடந்த உங்களுக்கு பாராட்டுக்கள் மரிய ஆசீர்......! விரைவில் பின்னூட்டத்தின் விண்ணைத்தொட மச்சான் வாழ்த்துகிறேன்.




19.10.2010


என் விடுமுறை முடியாமல் நீண்டு கொண்டே சென்றாலும், இந்த திரியை தொடங்கிய நான், எட்டாயிரத்தை பட்டென்று தொட்ட பின்னூட்டப்புயலான உங்களை சட்டென்று பாராட்டாமல் இருக்க இயலுமா.......? வாழ்த்துக்கள் நண்பரே மரிய ஆசீர்.......! விரைவிலேயே வாத்தியாரின் கோட்டையை பிடிக்கவும் வாழ்த்துகிறேன்.





26.12.2010

9000 - பதிப்பை அதுவும் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தின் இடையில் பதித்தமைக்கு மச்சானின் டபுள் வாழ்த்துக்கள் மரிய ஆசீர்....!

ஏழாயிரத்திலிருந்து எட்டாயிரத்தை ஒருமாதத்திலேயே தொட்ட நீங்கள், எட்டாயிரத்திலிருந்து ஒன்பதாயிரத்தை பிடிக்க இரண்டு மாதங்கள் எடுத்திருக்கிறீர்களே... அது ஏன்....? அதற்காக மச்சானின் கண்டனங்கள்....!

தலைப்பில் சொன்னது போல தொடர்ந்து அபாரமாக விளாசி பத்தாயிரத்தை இன்னும் ஒரு மாதத்துக்குள் எட்டிப்பிடிக்கவும் மச்சான் வாழ்த்துகிறேன்.


18.02.2011

மைல்ஸ்டோன் எனப்படும் 10000 பதிவுகளை இன்று எட்டிப்பிடித்த உங்களுக்கு மச்சானின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மரிய ஆசீர்...! முன்பிருந்த எக்ஸ்பிரஸ் வேகத்தில் இப்போது உங்களிடமிருந்து பின்னூட்டங்கள் ஒன்றும் வருவதில்லை என்பதை தெரிவித்தே ஆகவேண்டும். மேலும் பல பதிவுகளை விரைவிலேயே கடக்கவும் வாழ்த்துகிறேன்.


16.05.2011

11000 பதிவுகளை இன்று கடந்து வாத்தியாரின் கோட்டையை எட்டிப்பிடிக்க தொடர்ந்து நாலுகால் பாய்ச்சலில் அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மரியாசீருக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.




16.10.2011


நம்ம லோகத்து காமெடி கிங் மரியாசீர் இன்று 12000 பதிவுகளை கடந்து வாத்தியாரின் கொட்டையை.....ச்சீய்.. கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

முன்னபெல்லாம் ஒரு ஆயிரத்திலிருந்து மற்றொரு ஆயிரத்தை கடப்பதற்கு ஒருமாத காலம் அல்லது கூடிப்போனால் இரண்டு மாத காலம்தான் எடுத்துக்கொள்வார். ஆனால் 11000 பதிவுகளை மே மாதம் 16 ம் தியதி நிறைவு செய்தவர் தற்போது 12000 பதிவை சரியாக 5 மாத காலங்கள் கழித்து இன்றுதான் போட்டிருக்கிறார். இவ்வளவு காலதாமதம் ஏன்....?

இப்படி ரொம்பவே தள்ளாடி தள்ளாடி வந்தால் நம்ம வாத்தியாரை எப்படி ஓவர் டேக் செய்ய முடியும் மரியா...? ஆனாலும் மெதுவாக 12000 போட்ட உங்களை மச்சான் செல்ல கோபத்தோடு வாழ்த்துகிறேன்.


09.04.2012

வரவர ரொம்பவே ஸ்லோவ் ஆயிட்டீங்க மரியா...!!!! முன்பெல்லாம் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இடைவெளிதான் எடுத்துக்கொண்டீர்கள். ஆனால் இப்போதோ கிட்டத்தட்ட 6 மாதங்கள் எடுத்திருக்கிறீர்கள். திஸ் ஈஸ் டூ மச்...!!

எனி வே, 13000 ரன்களை கடந்து நமது லோகத்து டெண்டுல்கரின் ( வாத்தியாரின் ) சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.

28.11.2013

Quote:
Originally Posted by MACHAN View Post
வரவர ரொம்பவே ஸ்லோவ் ஆயிட்டீங்க மரியா...!!!! முன்பெல்லாம் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இடைவெளிதான் எடுத்துக்கொண்டீர்கள். ஆனால் இப்போதோ கிட்டத்தட்ட 6 மாதங்கள் எடுத்திருக்கிறீர்கள். திஸ் ஈஸ் டூ மச்...!!
அதையே நானும் ரிப்பீட் செய்கிறேன்.

விரைவில் வாத்தியாரை கடக்க என் வாழ்த்துகள்.

Last edited by tdrajesh; 01-02-16 at 09:32 PM. Reason: for updating
Reply With Quote