View Single Post
  #22  
Old 17-07-15, 05:41 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,125
iCash Credits: 249,183
My Threads  
Smile

சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தில் திரு.த.ஜெயகாந்தன் எழுதிய பாடலை மெல்லிசை மன்னரின் குரலில் கேட்பது என்றென்றைக்கும் மனதை விட்டு அகலாத ஒன்று. இது போன்று ஆயிரமாயிரம் பாடல்களுக்கு இசை அமைத்துள்ள இந்த மேதையின் ஆத்மா சாந்தியடையட்டும் அவருக்குப் பிடித்த கவிஞர் கண்ணதாசனோடு சேர்ந்து.

கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்

நல்லதைச் சொல்லுகிறேன்
இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன்
நல்லதைச் சொல்லுகிறேன்
இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ?
கூடி இருப்பதுண்டோ?

கண்டதைச் சொல்லுகிறேன்…

வாழ்ந்திடச் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்
வாழ்ந்திடச் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலையெழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ?
தாங்கிட நாதியுண்டோ?

கண்டதைச் சொல்லுகிறேன்…

கும்பிடச் சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டுச் சொல்லுகிறேன்
கும்பிடச் சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டுச் சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ?
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ?

கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ…ஓ..ஓ?
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote