View Single Post
  #33  
Old 28-02-09, 10:09 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
அருமையான .....பாராட்டப்பட வேண்டிய திரி...
எ-கலப்பையில் தட்டெழுத்து செய்யும்போது அவ்வப்போது சில தவறுகள் நிகழத்தான் செய்யும்... 100 விழுக்காடு சரியாக வரும் என்பதை எதிர்பார்க்க முடியாது.

ஆனாலும் பல பல பதிப்புக்களிலும், ழ-ள-ல, ற-ர, போன்ற குழப்பங்களைக் காணும்போது, என் மனதில் அடிக்கடி தோன்றும் ஓர் எண்ணம்... பேசும்போது உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் எழுத்துப் பிழைகள் தானாக மறைந்து விடும்.

தமிழுக்கு 'ழ' அழகு என்று கவிஞர் அருமையாகப் புனைந்தாலும், எத்தனைத் தமிழர்கள் (நன்கு படித்தவர்கள் உட்பட) தமிழை "தமிள்" என்று சொல்லுகிறார்கள் என்று கவனித்தால் இதன் முக்கியத்துவம் புலப்படும். இதனாலேயோ என்னவோ, சிறந்த தமிழ் திரைப்படப் பாட்டுகள் கூட சேர நாட்டுப் பைங்கிளிகளாலேயே பாடப் படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல், எழுத்துப் பிழையின்று எழுதுவதும் அவ்வாறே.. எழுதியவுடன் ஒரு முறை பிழை இருக்கிறதா என்று மீண்டும் பார்த்து திருத்துவதில் கவனம் செலுத்தினால் மீதி இருக்கக் கூடிய ஒன்றிரண்டு பிழைகளையும் களையலாம்...

தூய தமிழில் எழுதுவது வேறு.. பிழையில்லாமல் எழுதுவது வேறு.....!!
Reply With Quote