View Single Post
  #2  
Old 05-05-11, 12:20 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,673
My Threads  
காமராசனுக்கு நிர்வாக உறுப்பினர்கள் மேலே ஒரு கண் எப்போதும் இருக்கிறது என்பது தெரிந்ததே, அதனை வெளிப்படையாக அறிய திரி ஆரம்பித்திருக்கிறார்.

இதற்கு நிர்வாக உறுப்பினர் மட்டுமே பதில் தர இயலும் என்பதால் நான் தர முற்படுகிறேன்.

முதலில் தளம் தங்குதடையில்லாமல் இயங்க நிர்வாக உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த நிர்வாக உறுப்பினர்கள் உறுப்பினர்களில் இருந்தே தேர்வு செய்யப்படுகின்றனர். முன்னாள் நிர்வாக உறுப்பினர் விலகல்/நீக்கம் காரணத்தினால் தளத்திலே புது நிர்வாக உறுப்பினர் தேர்வு பற்றி ஒரு திரி நிர்வாகி அவர்களால் ஆரம்பித்து விருப்பம் உள்ளவர் பதிந்து பின் அவர்கள் பங்களிப்பு தெரிந்து பின் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

முதலிலே நிர்வாக உதவியாளர் என்ற மட்டிலே தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அந்த வேலை (பிழை திருத்தம், விதிமுறை மீறல்களை நிர்வாக குழுவிற்கு சுட்டிக்காட்டல், தளத்திலே புதியவர் அல்லது சந்தேகம் ஏற்படுபவர்களுக்கு தனிமடலில் உதவி புரிதல், கதைகளை உரிய இடத்திற்கு மாற்றுதல், யுனிகோடாக்கம்[முன்னர் இருந்தது]இன்னும் பிற சில ) திறம்பட செய்தால் அடுத்து கண்கானிப்பாளராக தகுதி உயர்த்தப்படுகிறார். இது அவர்கள் சேவைக்கு கிடைத்த அங்கிகாரம். நன்றாக பரிணமிக்க முடியாதவர்\தெரியாதவர்கள் தாங்களே உதவியாளர் பொறுப்பில் இருந்தும் விலகிக்கொள்கிறார்கள்.

கண்கானிப்பாளர்கள், உதவியாளர்கள் பணிகளுடன், நிர்வாக விசயங்களை(அதனை பொதுவிலே சொல்ல முடியாது)கூடுதலாக செய்கின்றனர்.

மேற்பார்வையாளர்கள், மேலே உள்ளவர்கள் செய்யும் வேலைகளை சரி பார்ப்பதுடன், மாதம் ஒருமுறை நடத்தப்படும் போட்டி, மற்றவர்கள் நடத்தும் போட்டிக்கு உதவுவதுடன், கூடுதலாக நிர்வாகி அவர்கள் ஆன்லைனிலே தளத்திலே இல்லாத பட்சத்தில் உடனடியாக செய்யப்பட வேண்டிய வேலைகளை செய்யும் பொறுப்பு பெற்றவர்கள்.

நிர்வாக ஆலோசகர், நேரடியாக மேற்பார்வையாளர் வேலைகளை செய்யாவிட்ட்டாலும், நிர்வாக குழுவில் (தனிமடல்கள் மூலம்) விவாதிக்கப்படும் விசயங்களுக்கு தீர்வு காண கருத்து தருபவர். இவையனைத்தும் தலைமை நிர்வாகி அவர்கள் இறுதி ஆலோசனைப்படி முடிவு செய்யப்படுகிறது.

உறுப்பினர் அனுமதி உயர்வு/இரத்து/மாற்றம் இதெல்லாம் தலைமை நிர்வாகி அவர்களே நேரடியாக் செய்கிறார். விதிமுறை மீறும் நபர்/திரிகளை உடனடி தடை செய்ய மேற்பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.

சீருடை என்பது சற்று ஒவரில்லையா காமராசன். அது தான் ஒவ்வொருத்தர் பெயரும் தனி நிறத்தில் உள்ளதே, பின் வேறு என்ன?.
__________________
Reply With Quote