View Single Post
  #43  
Old 02-03-09, 09:30 AM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
Quote:
Originally Posted by thangar.c View Post
தெளிவான கருத்துக்கள்... 'இயன்றவரை பிழையின்றியே எழுத வேண்டும்' என்பதை ஒவ்வொருவரும் மனமுவந்து குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நன்றி நண்பரே....


நன்றி நண்பர் ஸ்ரீராம்... இதுநாள் வரை இத்தவறை செய்து வந்துள்ளதை உணர்ந்து இனி திருத்திக் கொள்கிறேன்... நண்பர் காமராசன் சொல்லி இருப்பது போல 'உச்சரிப்பை' உணர்ந்து எழுதுவது பற்றி தங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் இருக்கிறேன். சமஸ்கிருதம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் இருப்பது போல தமிழில் உச்சரிப்பிற்கு ஏற்ப எழுத்துக்கள் இல்லாமல், இடத்திற்கு ஏற்ப ஒலி கூடியோ குறைந்தோ ஒலிப்பது போல இருப்பது குறையா? உதாரணமாக ஹிந்தியில் 'க' என்பதையே க1, க2, க3, க4 என நான்கு உச்சரிப்புடன் தனித்தனி எழுத்து வடிவத்துடன் இருப்பது போல தமிழிலும் இருந்திருக்கலாமோ?!
உலக மொழிகளிலேயே, மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி ஒன்றே. இதன் எழுத்து வடிவமும் சரி ஓசை வடிவமும் சரி இனிமையாக இருக்கின்றது.

தமிழுக்கு அந்த மாதிரியான ga, gha, ghaa, ka, kha, khaa எனப் பல எழுத்துக்கள் தேவையில்லை. தமிழ் மொழிக்கு அறிவு இன்றியமையாதது. தமிழ் மொழி நம் அன்றாட வாழ்வில் நம்மையறியாமலேயே நம் நுண்ணறிவைத் தீட்டுகின்றது.

விஞ்ஞான ரீதியில் விளக்கம் வேண்டுமெனில் மற்ற மொழிகளைப் போல் தமிழ் மொழியைக் கண்களை மூடிக்கொண்டு உச்சரிக்கவோ எழுதவோ முடியாது. விழிப்பும் மனப் பயிற்சியும் முக்கியம்.


நாம் தற்சமயம் பயன்படுத்தும் தமிழ், ஆதியிலிருந்த தமிழ் அல்ல. பல மாற்றங்கள் அடைந்திருக்கின்றது.

மாங்காய் என்பது Mango வானது.
Orangeசுளைகளில் 11 சுளைகள் இருக்கும். அதனால் அதனை நம்மவர்கள் ஆறு அஞ்சு என அழைக்க ஆரம்பித்து ஆரஞ்சு என்றாகி அதுவே Orange எனப் பரவிவிட்டது.


Tomato, Potato ஆகிய மேலைநாட்டு காய்கறிகளையும் நாம் தமிழில் பெயரிட்டே அழைக்கின்றோம்.

தமிழ் மொழி இறைவனால் படைக்கப்பட்டது என்று ஒரு சரித்திரம் உண்டு. தமிழ் என்றாலே அழகு, இனிமை, இயற்கை என்ற பொருள். இயற்கைக்கு முருகு என்ற சொல் தமிழில் உள்ளது. முருகன் என்ற கடவுளின் பெயர் முருகு என்ற சொல்லிருந்தே வந்தது. தமிழ் மொழியின் மேல் தீரா காதல் கொண்ட சீகன் பால்க் என்பவர் தன்னை உணவு, உடை, மொழி, கலாச்சாரம் என அனைத்திலும் ஒரு தமிழனாய் மாற்றிக்கொண்டு சீகன் பால்க் ஐயர் என்றானார்.

தமிழ் மொழி வேத காலங்களுக்கும் முன்பே பிறந்திருந்தது. தமிழ் கலாச்சாரம் சுத்த சைவம். தமிழர்களின் உணவுப் பழக்கங்கள் மரக்கறி உணவு. தமிழ் மறை நல்லொழுக்கங்களை மேற்கொண்டு வாழ்வை நடத்தும் மார்க்கம் என சாத்திர நூல்கள் கூறுகின்றன.

Last edited by sreeram; 08-07-10 at 01:28 AM.
Reply With Quote