View Single Post
  #1  
Old 25-12-06, 08:54 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
டிசம்பர் 26 சுனாமி நினைவஞ்சலி

மறக்க முடியுமா...???

நாள் - திசம்பர் 26
வருடம்- 2004
நேரம் - 8.30 மணி

இந்தோனிசியா, இலங்கை,தாய்லாந்து மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி 3 லட்சம் பேர் மாண்டதும், பல லட்சம் குழந்தைகளும்,பெரியவர்களும் அனாதைகள் ஆனதும்.... மறக்க இயலுமா..????

இந்தியாவில் அந்தமான் பகுதியும், அதைவிட மோசமாக தமிழ் நாடும் பாதிக்க பட்டது...
ஒரு குறிப்பிட்ட சமுதாயமே ஆழி பேரலையில் அழிந்து போனது....

சுனாமி தாக்கி இரண்டாவது ஆண்டு நினைவு தினம் தான்...திசம்பர் 26..

சுனாமியால் உயிரிழந்த அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும், உலக சொந்தங்களுக்கும், எங்களின் இதய நினைவஞ்சலி.!!

சென்னையில் ஒரு இடத்தில் வைக்க பட்டுள்ள பேனரில் நான் பார்த்த வாசகம் இதோ..,

சுனாமி...! வேண்டாம் இனி நீ...!!
ஆழி பேரலை...!! இனி தாக்க வேண்டாம் எங்களை...!!!

ஏ.. கடல் தாயே...!!! நியாயமா..??
நீ சுமந்த பிள்ளைகளை....,
நீ பெற்ற பிள்ளைகளை...,
உன் பேர் சொன்ன பிள்ளைகளை...,
உன் மடி தவழ்ந்த பிள்ளை களை...,

நீயே எடுத்து கொண்டது...நியாயமா..??



கண்ணீர் வந்து விட்டது எனக்கு... அதனால் கண்ணீருடன் நினைவு அஞ்சலி செய்கிறேன்...
நம் தள நண்பர்களும் அஞ்சலி செய்வார்கள் என்ற நம்பிக்கையில்...

வாழ்க தமிழ்

Last edited by udhayasuriyan; 25-12-06 at 08:56 PM.
Reply With Quote