View Single Post
  #27  
Old 28-02-09, 05:56 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by ஆதி View Post
ஒருமுறை நான் என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவனாலும் அவனின் குடும்பத்தினராலும் நான் உபசரிக்கப்பட்டேன். அந்த உபசரிப்பு என் வாழ்க்கையில் (ஒரு) மறக்க முடியாத (அனுபவம்) உபசரிப்பு. அவன் பள்ளியில் படிக்கும் போதும், கல்லூரியில் படிக்கும் போதும் வாங்கிய (பெற்ற) பதக்கங்களை என்னிடம் காண்பித்து சந்தோஷம் அடைந்தான் நானும் அதை எல்லாம் கண்டு மிக சந்தேஷம் (மகிழ்ச்சி) அடைந்தேன். (வாங்கிய என்றால் இந்த இடத்தில் காசுகொடுத்து வாங்கிய என இன்னொரு பொருளில் வருவதால், பெற்ற என்பது சரியாக இருக்கும் என்பது என் கருத்து)

அவனின் வீட்டிற்கு பக்கத்திலேயே கடற்கரை... காலார நடக்கலாம் என்று கடற்கரை பக்கம் சென்றோம்... இதமான காற்று... வங்காலவிரிகுடாவில் இருந்து வந்துகொண்டிருந்தது... அந்த காற்றுப்பற்று அருகில் உள்ள தென்னைமர கீற்றுகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தத.... இவையெல்லாம் ரசித்து ரசித்து நேரம் போனதே தெரியவில்லை... அந்தி சாயும் நேரம் ஆகிவிட்டதால்.. மீண்டும் எங்கள் நடை வீட்டை நோக்கி பயணமாகின. அவனிடம் பிரியாவிடை பெற்று என் வீட்டிற்கு வரும் வழியில்... அங்கே என்னோடு வேலை பார்க்கும் நண்பனையும் பார்க்க நேர்ந்தது. அவனோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு... காற்றாட அந்தி பொழுதை ரசித்த படி... அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு என் வீடு வந்து சேர்ந்தேன்.

இலக்கிய கதைகள் எழுத நேரம் ஆகும் என்பதால், உடனடி உணவை போல் இதை எழுதியுள்ளேன். இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

நன்றி
இரண்டாவது பத்தி இப்படி இருந்தால் நலம்...

கடற்கரையை ஒட்டியே அவன் வீடு இருந்ததால், காலார நடக்கலாமே என்று கடற்கரை பக்கம் சென்றோம். வங்காள விரிகுடாவின் இதமான காற்றில் தென்னைமர கீற்றுக்கள் ரீங்காரமிட்டுக்கொன்டிருந்தது. இதையெல்லாம் ரசித்துக்கொன்டிருந்த எங்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை... பொழுதும் சாய்ந்துவிட்டது... எங்கள் கால்கள் வீடுநோக்கி மீன்டும் பயணமாயின... அவனிடம் விடைபெற்றுக்கொன்டு என் வீட்டிற்கு வரும்வழியில் என்னுடன் பணிபுரியும் நண்பனை தற்செயலாக சந்தித்தேன்.. இதமான காற்றுடன் கூடிய மாலை பொழுதை ரசித்தபடியே அவனுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு... இறுதியில் என் வீடு வந்து சேர்ந்தேன்.

அன்புள்ள ஆதி அண்ணா
உங்கள் தமிழ் ஆர்வம் என்னை மிகவும் அதிசயிக்க வைக்கிறது... நீங்கள் எழுதியதில் எந்த பிழையும் இல்லை.. ஆனால் வாக்கிய அமைப்பை தான் சிறிது மாற்றியுள்ளேன்....

ஒரு திருத்தம்... மகிழ்ச்சி என்பதே சரியான தமிழ்ச்சொல்... சந்தோஷம் என்பது தூய தமிழ்சொல்லா என்று தெரியவில்லை....


நண்பர்களே நான் பதித்ததில் ஏதேனும் தவறிருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.. திருத்திக்கொள்கிறேன்...

Last edited by BILLA; 28-02-09 at 06:12 PM.
Reply With Quote