View Single Post
  #6  
Old 24-05-14, 12:26 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
தல் பரிசாக கிடைக்கவிருக்கும் 3000 இ பணங்களையும் தலா 1500 வீதம் என் இரு பங்காளிகளுக்குமே பங்கிட்டுக் கொடுக்கிறேன். அதற்கு அனுமதி வழங்குமாறு நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள நண்பர் மச்சானுக்கு வணக்கம்.


இந்த போட்டியில் வேலைப்பளு காரணமாக உங்களால் அடுத்தடுத்த பாகங்களை உடனே தர இயலாமல் பின்னர் கிடைத்த அவகாசத்திலும் மிக அருமையாக அடுத்தடுத்த பாகத்தை கொடுத்தீர்கள். அவசரமாக எழுதினால் வரும் பிழைகளோ கதையில் தொய்வோ கண்டிப்பாக இல்லை. மிக அருமையான படைப்பை தந்தீர்கள்...இதுவே உங்கள் உழைப்புக்கு வெற்றி.

அது மட்டுமல்லாமல் எல்லோரையும் ஓட்டு போட உத்வேகப்படுத்துனீர்கள், உற்சாகப்படுத்தினீர்கள். நிர்வாகத்தினர் சொன்னதை கருத்துடன் கேட்டு உங்களால் முயன்ற ஒரு முயற்சியை வித்தியாசமாக செயல்படுத்தினீர்கள் அது தான் ஸ்பெஷல் வீடியோ கொடுத்தது. அதிலும் உங்கள் உழைப்பும் சிரத்தையும் காணமுடிந்தது.

அது மட்டுமில்லாமல் கதையும் மிக அருமையாக கொடுத்திருந்தீர்கள்.

இத்தனை அம்சங்களும் தான் உங்களை முதல் இடத்தை பெற வைத்தது.

நீங்கள் இந்த முதல் இடம் பெற உங்கள் படைப்பு தகுதியானதாக இருந்ததால் தான் உங்களுக்கு வெற்றியும் கிடைத்தது.

இந்த வெற்றிக்கு உடன் இருந்து ஒரு நண்பராக சந்தோஷமாக வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிக்காக நிர்வாகம் கொடுக்கும் இபணம் பரிசளிப்பை எனக்கு கொடுக்காதீர்கள் நண்பரே. அது உங்கள் உழைப்புக்கும், சிரத்தைக்கும் கிடைத்த வெற்றி. அது உங்களோடு இருப்பது தான் சிறப்பு.

என்றென்றும்
நட்புடன்
ஸ்நேஹன்
Reply With Quote