View Single Post
  #12  
Old 24-04-14, 06:28 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
கவி காளமேகப்புலவர் நாகைக்குச் சென்றபோது (நாகை என்றுதான் நினைக்கிறேன்) ஒரு உணவு விடுதியில் மதிய உணவு அருந்த காத்திருந்தபோது உணவு வர நேரமானதால் அந்த விடுதி இருந்த தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனிடம்..."உணவு எங்கேப்பா விக்கும்..?" எனக் கேட்டாராம்.

அதற்கு அந்த சிறுவன்... "உணவு தொண்டையில்தான் விக்கும்.." என இரட்டுற மொழிந்தானாம். (சோழநாடு சோறுடைத்து.. எனவே பஞ்சம் அடிக்கடி ஏற்படும் தொண்டை நாட்டையே அச்சிறுவன் குறிப்பிட்டான் என்பது என் தமிழாசிரியர் எனக்கு கூறியது}

காளமேகம் எப்பேர்ப்பட்ட இரட்டுறமொழிபவர்.. அவரையே திகைக்கவைத்த பதிலடி வரிகள். சாமானியனான ரோட்டில் விளையாடும்.. தரை டிக்கட் வம்சமான சிறுவனின் பதில் மொழி அது. அதுகுறித்து காளமேகம் புகழ்ந்தும் செய்யுள் இயற்றியிருக்கிறார். எனவே சராசரி மனிதனும் அவர்கள் எழுதியதை முழுக்கப் புரிந்துகொண்டு ரசித்திருக்கமுடியும்.. பதிலடி கொடுக்கமுடியும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஐயா..

Quote:
Originally Posted by dreamer View Post
ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அப்படியல்ல. அவர் எழுதிய வசனங்களை தரை டிக்கட் (the pit) ஆடியன்ஸ் ஆரவாரமாக வரவேற்று ரசித்தனர். 'ஜனரஞ்சக என்றால் பாபுலர் என்றுதானே பொருள்? மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால் இன்று ஷேக்ஸ்பியருக்கு நோட்ஸ் தேவைப்படுகிறது.
ஐயா..

இதில் உங்கள் கருத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். ஜனரஞ்சக என்றால் பாபுலர் என்றுதான் பொருள். இதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஜனரஞ்சகம் என்பது மாறுபடும். அதை இன்றிருக்கும் அளவுகோலால் அளப்பது சரியானதல்ல.

உதாரணத்திற்கு..

காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே..
மேயாத மான்.. மே....யா....த.... மான்...
சாயாத கொம்பிரண்டிருந்தும் அது தலைநிமிர்ந்து பாயாத மான்...


என்றெல்லாம் கூத்துக்களில் பாடும்பொழுது தரைடிக்கட் ஆடியன்ஸ் கைதட்டி வரவேற்பர். கருத்தைப் புரிந்து ஆரவாரம் செய்வர். ரசித்து தங்கள் இணையைக் காதலோடு பார்ப்பர். அவர்களுக்கு அப்போது நோட்ஸ் தேவைப்படவில்லை. ஆனால் இவ்வரிகளுக்கு இன்றைய ஜெனரேஷனுக்கு நோட்ஸ் தேவைப்படுகிறது ஐயா.. இதுதான் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கும் பொருந்துகிறது.
தம்பி, இங்கு நான் குறிப்பிடுவது காளமேகத்தை அல்ல. கம்பர், வள்ளுவர் மற்றும் இளங்கோவடிகள் படைப்புகளைப்பற்றி. இவற்றை அவர்களுடைய சமகாலத்து எழுதப்படிக்கத் தெரியாதவரே உதவியின்றி முழுமையாகப் புரிந்துகொள்வார்களா என்பதுதான் எனது வினா. 'காயாத கானகத்தே' போன்ற பாடல்களைக் கொண்டுவ்ந்து திசை திருப்பாமல் பாரதி குறிப்பிட்ட முப்பெரும் இலக்கியப் படைப்பாளிகளுடன் ஷேக்ஸ்பியரை பாபுலாரிடி அளவீட்டை வைத்து ஒப்பிட்டுப் பாருங்கள்..
Reply With Quote