View Single Post
  #1  
Old 25-11-06, 07:07 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,503
My Threads  
கதை திருடர்களுக்கு கடைசி எச்சரிக்கை..!!!

நண்பர்களே...!!

சமீப காலமாக காமலோகத்தின் கதைகளை திருடி பிற தளங்களில், குழுக்களில் பதிப்பது வெகுவாக கூடியுள்ளது. இத்தகைய தீவிர விதிமுறை மீறல் செய்யும் காமலோக துரோகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்து விட்டது. எங்களுக்கு இவ்வாறு செய்யும் 10 துரோகிகளின் பெயர்கள் கிடைத்துள்ளன.

நீங்கள் எங்கள் விரோதியானாலும், துரோகியானாலும், "தமிழ் பேசும் இணையன்" என்ற ஒரே காணத்திற்காக உங்களையும் மன்னித்து எங்களுடன் சேர்த்துக் கொள்ள தயார். ஆனால், முதலில் நீங்கள் இந்த இழிசெயலை நிறுத்த வேண்டும், அதற்காக வருத்தப் படவேண்டும், அல்லது அவர் எத்தகைய பழைய உறுப்பினராக இருந்தாலும் அவரை காமலோகத்தில் இருந்து விலக்க தயங்கப் போவதில்லை.

காமலோகம் தவிர தமிழ் காமக் கதைகள் பிரசுரிக்க வேறு தளங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. செய்யுங்கள்.. நிச்சயம் செய்யுங்கள்... நன்றாக செய்யுங்கள்.. ஆனால், உங்கள் உறுப்பினர்களை சொந்தமாக கதை எழுதத் தூண்டுங்கள், நீங்களும் உங்கள் கதைகளை பதியுங்கள். அப்படி செய்தால், என் உதவி வேண்டுமென்றாலும் உங்களுக்கு உண்டு. அதை விடுத்து, அடுத்தவன் வாந்தி எடுத்ததை மீண்டும் உழுங்கி வாந்தி எடுக்காதீகள், அது ஆரோக்கியமானதல்ல.

கதை படிக்க விரும்புபவர்கள், ஒரு நிஜமான தமிழ் காம தளத்தை விட்டு, ஏன் பிற நிழலான தளத்துக்கு செல்வார்கள்? சிந்தியுங்கள், உங்கள் அற்ப புகழுக்காக, காமலோக படைப்பாளிகளின் படைப்புகளை திருடாதீர்கள். (எங்களிடமிருந்து திருடிய கதைகளை அங்கிருந்து திருடி மீண்டும் இங்கே பதித்து பலர் தண்டனைக்கு உள்ளாவது வேறு கதை)

காமலோகம் கட்டுப்பாடு உள்ளது தான், ஆனால் தமிழில் எழுதும் எவருக்கும் அது கதைகள் படிக்க கட்டுப் போட்டது கிடையாது. கதை படிக்க விரும்புவர்கள் யாராக இருந்தாலும் இங்கே வரட்டும் அவர்களை காமலோகம் இரு கரம் கூப்பி வரவேற்கும்.

ஆனால், ஏமாற்றுக் காரர்களையும், தமிழ் எழுத மறுப்பவர்களையும், சோம்பேறிகளையும் ஒரு காலமும் நாங்கள் ஏற்பதில்லை.

காமம் கூறும் தளங்கள் அனைத்தும் காட்டுமிராண்டி தளங்கள் என்பதை மாற்றி, ஒரு ஆரோக்கியமான கட்டுபாடுள்ள இணைய சமுதாயம், இங்கே ஒரு குடும்பம் போல் உருவாகியுள்ளோம். அதன் அருமை தமிழில் தட்டச்சு செய்யத் தெரியா வழிப்போக்கர் போல உலாவ வரும் பலருக்கும் புரியாது. புரிந்தவன் எவரும் இந்த காமலோக குடும்பத்தை பிரிந்ததில்லை.

எங்கள் உறுப்பினர்கள் நினைத்தால் நீங்கள் திருடிப் பதிக்கும் அந்த தளங்களை இரண்டே நாளில் குப்பையாக்கி மூட வைத்து விடுவார்கள். இருந்தாலும் மூடர்கள் திருந்தட்டும் என்று எங்கள் உறுப்பினர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.

திருந்துங்கள் தோழர்களே.. இது உங்களுக்கு கடைசி எச்சரிக்கை... இனியும் திருந்தாவிடில்... காமலோகம் உங்களுக்கு கதவை அடைக்கும் நேரம் வந்து விட்டது.

உங்களை அடையாளம் காட்ட எங்கள் காமலோக உறுப்பினர் படை புறப்பட்டு விட்டது, உங்கள் தகவல்களை ஏற்கனவே எனக்கு அனுப்ப துவங்கி விட்டார்கள், இனியும் அனுப்புவார்கள், அனுப்பிக் கொண்டே இருப்பார்கள், நீங்கள் திருந்தும் வரை..

அனுப்புங்கள் நண்பர்களே... துரோகிகளை வேட்டையாடுங்கள்.. அவர்கள் யார் என்று உங்களுக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்... தக்க ஆதாரங்கள் கொடுப்பவர்களுக்கு iCash சன்மானம் உண்டு..

தெரிவிக்க வேண்டிய முகவரி: kamalogam@gmail.com
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 25-11-06 at 07:27 PM.