View Single Post
  #42  
Old 06-12-10, 06:07 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
Quote:
Originally Posted by smartman View Post
அசோ இங்கே கருத்து சொல்லியிருப்பதைப் போலவே நண்பர் கா.ரா. மா.கி கருத்துக்கு எதிர்கருத்து சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். அவர் வேறு யோசனையைக் கொடுத்திருக்கிறார்.
"எதிர்" கருத்து வேறு ... "மாற்று"க் கருத்து வேறு.. எதையுமே பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டும் என்பதே எனது பரந்த நோக்கம். Opposite .. vs. Alternative.. தங்கக் கதைகள் என்ற பகுதி உருவாகியதே பல வருடங்களுக்கு முன்பு நான் வலியுறுத்திக் கொண்டிருந்த Better visibility for Standard Stories .. என்னும் கருத்தின் அடிப்படையில் என்றே எனது உள்மனம் கூறுகிறது. ஆனால் அமலாக்கப் பட்டபோது அதன் நோக்கம் நிறைவேறியதா என்பதை அங்கு கிடைக்கும் ஹிட்ஸ்-ஐ.. (பின்னூட்டங்கள் அல்ல) அளவுகோலாகப் பார்த்தால் தெரியும்.

ஓரளவுக்கு தேர்ந்த உலவலர்களுக்கும்(expert browsers) எப்படி நல்ல கதைகளை 'தேடி'க் கண்டுபிடிக்க வேண்டும் என்று நிச்சயமாகத் தெரியும். போட்டியில் வெற்றி பெற்ற கதைகள், நல்ல எழுத்தாளர்களின் கதைகள், போன்று 'கண்டு பிடிப்பது' சிரமம் அல்ல. ஆனால் ஏறக்குறைய எல்லோருமே.. நான் உட்பட .. மிதக்கும் திரிகளைப் பார்த்து விட்டு, வாசித்தோ வாசிக்காமலோ பதிக்கிறோம்.. ஒன்றும் சொல்லாமல் போவதும் உண்டு. இது தரைமட்ட உண்மை.

கதைகள் பதித்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பின்னர் 'புதைந்து' விடும் கதைகள் பின்னர் தலை தூக்குவது எப்போதாவதுதான் நடக்கும். பின்னர் திரிகளில் இருப்பதும் பின்னூட்டங்கள் வருவதும் almost irrelevant.. நிறைவு பெற்ற கதைகள்... பிடிஎஃப் அல்லது வேர்டு வடிவில் இருந்தால் நல்ல வாசகர்களை வாசிக்கத் தூண்டும். நான் இப்போதும் என் சேமிப்பில் இருக்கும் பழைய கதைகளை அவ்வப்போது ரிவைஸ் செய்வதுண்டு.. அது எந்த எழுத்துரு வடிவில் இருந்தாலும் கவலையே இல்லை.. கதைகள் வாசிக்கப் படுவதற்காகவே... அதுதான் எல்லோரின் நோக்கமாகவும் இருக்கவேண்டும்.
Reply With Quote