View Single Post
  #1  
Old 01-04-22, 03:24 PM
vasanthanirmala vasanthanirmala is offline
User inactive for long time
 
Join Date: 21 Jan 2020
Location: maya ulagam
Posts: 59
My Threads  
மௌனி ஒரு தேவதை!

மௌனி ஒரு தேவதை!

மௌனி யார் என்ற கேள்விக்கு என்னிடம் சற்று அதிகமான விவரங்கள் இருப்பதாக நினைப்பதால், மௌனி விரும்பிய லோகத்துக்கு சொல்வது என் கடமை என்பதால் இந்த பதிவு!

முதலில் நான் ஆண். டெக்னிக்கல் ரைட்டிங் என் தொழில். அலுவலக நிமித்தமாக நான் டெல்லி சென்ற சூழ்நிலை. 30 நாட்களுக்கு மேலாக இட்டிலி, சாம்பார் கிடைக்காததால் நாக்கு செத்து சுண்ணாம்பாகி , மீண்டும் என் முன்னால் வைத்த சப்பாத்தியை திட்டியபோது (எப்படி தமிழில்தான்!)

"நீங்க தமிழா?" என்ற குரலுக்கு சொந்தமானவர்களை பார்த்தபோதுதான் மௌனி என்ற தேவதையை பார்த்தேன்.

அழகு இல்லை. கருமையாக உருவம். ஆனால், தீர்க்கமான பார்வை. கணீரென்ற குரல். பார்த்து பழகிய 5 நிமிடத்திலேயே ஏதோ பல வருடங்கள் பழகியது போல இருந்த பாசம்! முதல் முதலாக நெகிழ்ந்தேன்.

"ஆமாம்" என்றேன்.

"வாங்க வீட்டுக்கு?"

"முன் பின் தெரியாத என்னை வீட்டுக்கு கூப்பிடறீங்க?" என்றேன்.

"தமிழாச்சே...நல்ல மனிஷங்களாகத்தான் இருப்பீங்க" என்ற அந்த நம்பிக்கை என்னை ஈர்த்தது!

அவர்கள் வீட்டுக்கு சென்றேன். சின்ன வீடு.

'என்ன படிச்சீங்க"

"எம்.சி.யே படிச்சேன். ஆனா, இப்ப வேலை செய்யறது ரெஸ்டாரண்டில்"

வருத்தப்பட்டேன்.

எங்கும் தமிழ். அலமாரியில் கத்தை , கத்தையாக புத்தகங்கள். தி.ஜானதிராமன் முதல் லேட்டஸ்ட் சுபா வரை!

5 நிமிடத்தில் வரலாம் என்று நினைத்து பல மணி நேரமாக பேச்சி போனது.
அப்படியே போனது 5 வருடங்கள்.

நல்ல நட்பு.