View Single Post
  #25  
Old 28-02-09, 05:23 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நண்பர் ஸ்ரீராமின் விளக்கங்கள் மிகவும் அருமை... நண்பர்கள் அனைவரும் தமிழை ஆர்வமாக கற்றுக்கொள்வதை பார்த்தால்... இனி வரும் பதிப்புகளில் எழுத்துப்பிழை இன்றி தமிழை எழுத செய்வார்கள் என்றே நினைக்கிறேன்....

நண்பர் மதன்..
குளம்பி என்றால் ஒரு அர்த்தமும் இல்லை... குளம்பு இது குதிரையின் பாதத்திற்கு கீழ் உள்ள பகுதி... குளம் என்றால் நீர் சேர்ந்த ஒரு சின்ன இடம்....

குழம்பி என்பது தான் தாங்கள் அந்த இடத்தில் குறிப்பிட வந்தது.. ஆனால் எழுத்துப்பிழையாக குளம்பி என்று அடித்துவிட்டீர்கள்...

நண்பர் ஆதி
கஸ்டம் என்பது தமிழ் வார்த்தை அல்ல... கடினம் என்பதே இதன் தூய தமிழ் வார்த்தை.... கஷ்டம் என நாம் சில வேளைகளில் பேசுகிறோம்.. ஆனால் அது சரியல்ல.... கடினம் என்றோ அல்லது சிரமம் என்றோ தான் பேசவேன்டும் எழுதவேன்டும்.. சரியா?

இந்த திரியில் நண்பர்கள் தொடர்ந்து பத்து வரிகள் தமிழில் எந்தவித எழுத்துப்பிழையும் இன்றி ஏதாவது சிறு தமிழ் நீதிக்கதையை தட்டச்சு செய்யவேன்டும்,, அதில் வடமொழி கலந்திருக்கக்கூடாது.... ஆங்கிலமும் இருக்கக்கூடாது சரியா? தூய தமிழில் எழுதப் பழகுங்கள்... பிறகு தெரியாத வார்த்தைகளை வண்ணமிட்டுக்காட்டுங்கள் நண்பர்கள் வந்து உங்கள் ஐயப்பாட்டை நீக்குவார்கள்...

சாஜீத் எனது நண்பர் என்பதால் இந்த திரியில் நான் தொடங்கும் இந்த முயற்சியை வரவேற்பார் என நம்புகிறேன்...

Last edited by BILLA; 28-02-09 at 06:13 PM.
Reply With Quote