View Single Post
  #29  
Old 03-04-12, 11:47 AM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 64,197
My Threads  
டிரீமர் அவர்களின் உடல் நிலை! நேரில் பார்த்த விபரம்!

காமலோகத்தின் பிரபல கதாசிரியர்களில் ஒருவர், நல்ல வாசகர், சிறந்த விமர்சகர், டிரீமர் அண்ணா அவர்களின் உடல் நலம் பற்றிய தகவல் இந்த திரியில் பார்த்தேன். உடனடியாக தனி மடல் மூலம் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்று நினைத்தேன். அவர் அதை படித்து எனக்கு தனி மடல் மூலம் பதில் அனுப்புவார். அது அவருக்கு சற்று சிரமமான வேலை. ஆகவே நான் அவருக்கு தனி மடல் அனுப்பவில்லை. நான் சென்னையில் இருக்குமிடம் அவர் இடத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. 15 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரமே! ஆகவே அவரை நேரில் சந்திக்க தீர்மானித்து நண்பர் ராஜேஷ் மூலம் முன் அனுமதி வாங்கி நேற்றைக்கு முன் தினம் அதாவது ஞாயிற்றுக் கிழமை காலை 9:30க்கு சென்றேன். நண்பர் ராஜேஷ் அவர்களையும் அங்கே சந்தித்தேன். 2 மணி நேரம், அரட்டை. காமலோகம் உட்பட பல விஷயங்களையும் பற்றி பேசினோம். எனது பல சந்தேகங்களுக்கு நல்ல விளக்கம் கொடுத்தார்.

சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவு பற்றி விசாரித்தேன். சென்ற முறை நான் பார்த்ததை விட இப்போது அவர் சற்று சோர்வாகக் காணப் பட்டார். பத்து நிமிடம் பேசினாலும் சிறிது தொலைவு நடந்தாலும் அவருக்கு மூச்சு வாங்குகிறது. தடியின் உதவி இல்லாமல் அவரால் நடக்க முடியவில்லை. இருந்தாலும் நல்ல மனோதிடத்துடன் இருக்கிறார். கார் நிறுத்துமிடம் வரை தடியூன்றி நடந்து வந்து எங்களை வழியனுப்பினார். அவரது வாழ்க்கை தத்துவம் தனி. அதை சாதாரணமாக புரிந்து கொள்வது கஷ்டம். உடல் நிலை குறைவு பற்றி அவர் கவலைப் படுவது போல் தெரியவில்ல. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக மற்றவர்கள் சிரமப் படுவதை அவர் விரும்புவதில்லை. கொஞ்ச நாட்கள் இருந்தாலும், இருக்கும் வரை நன்றாக இருந்தால் போதுமானது என்று கருதுகிறார் போலும்.

மீண்டும் அடுத்த முறை சந்திப்போம் என்று கூறி 11:30 மணியளவில் நானும் ராஜேஷ் அவர்களும் விடை பெற்றோம்.
__________________
ராசு
Reply With Quote