View Single Post
  #32  
Old 17-04-12, 11:59 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,646
iCash Credits: 375,886
My Threads  
6,020 பதிவுகளைப் பதிந்து மற்றுமோர் எல்லையைத் தொட்டு விட்டேன் என்று பாராட்டுகளுடன் நல் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் கள்ளமில்லா எல்லா நல் உள்ளங்களுக்கும்
நெஞ்சார முதல் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் தெரிவித்த என் நண்பர்கள் மற்றும் என் மதிப்புக்குரிய ஆசிரியர்கள்
தமிழா
, gemini, tdrajesh
அவர்களுக்கு
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் சொல்லிக்கொள்கிறேன் !
தூய நெஞ்சத்துடன் வாழ்த்துக்களும், வாழ்த்திய முறைகளும், ‘இணைப் பணம்’ அனுப்பிய பெருந்தகைகளின் உவகையும் எல்லாமே என் எழுத்துக்குக் கிடைத்த ஒரு நல்ல அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்!

அந்த 6,020 பதிவுகளும் நாளொன்றுக்கு சராசரியாக 4 லிருந்து 5 வரை பதிந்து இருக்கிறேன் என்று லோகம் சொல்கிறது. அவ்வளவுதான் அது சொல்கிறது.

அவைகளில் எத்தனை எண்ணிக்கை உருப்படியானவை என்று எனக்குத்தான் தெரியும். அவை மொத்தமே ஒரு
60க்கும் குறைவாகவே இருக்கும்.
மீதி எல்லாமே 5,940மே ஒன்றுக்கும் உபயோகமில்லா குப்பைகள்தாம், சக்கைகள்தாம்.
இந்தப் பெரிய ‘காமலோக’க் கடலில் ஒரு சிறு தோணியைக் கொண்டு பயணத்தை நடத்தும் என்னுடையப் பயமறியாத கன்றின் செயல்பாட்டுக்களுக்கு, படைப்புகளுக்கு பின்னூட்டங்கள் மூலமாகவும் தனி மடல் மூலமாகவும்:
  • பாராட்டிய
  • பாராட்டி நட்சத்திர மதிப்புக் குறியீடு தந்த
  • வாழ்த்தி இ பண முடிச்சுகள் அனுப்பிய
  • மனமார மகிழ்வுற்ற
  • இசை பாடிய
  • வசையும் கூறிய
  • கிண்டலடித்த
  • எரிச்சலுற்ற
  • தவறுகளைச் சுட்டிக் காட்டிய
  • அவ்வப்போது எச்சரிக்கை மணி அடித்த
  • கண்டன அறிவிப்புசெய்த
  • நெறி பிறழாது இருக்கக் கடிந்துரை செய்த
  • பிழைகளைக் கண்டித்
  • வரம்பு மீறிய செயற்பாடுகளை எச்சரிக்கை செய்து திருத்திய
  • புத்தி கற்பித்
  • ஒடுக்கிய
  • அறிந்தோ அறியாமலோ சட்ட திட்டங்களை மீறும்போது கடுமையாகத் தண்டித்த
  • பயமுறுத்திய
  • வன்மையாகச் சாடிய
  • நெறிப்படுத்திய
  • ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ் நடையை மிகவும் பாராட்டிய
  • அதே தமிழ் நடையைப் படித்துச் சலிப்பும், சுணக்கமும் காட்டிய
  • பிழைகளைக் களைந்து எழுதினால் மட்டுமே உங்கள் ‘கதை அளப்பு’ களை படித்து பின்னூட்டம் இடுவேன் என்று மிரட்டிய
  • சமயங்களில் ‘காதை’ப் பிடித்துத் திருகிய
  • ‘மோதிர விரல்க’ளால் தலையில் குட்டிய
  • சோர்ந்து இருந்த நேரங்களில் அணைத்துக் கை கோர்த்து வழி நடத்திச் சென்ற
  • பல சமயங்களில் அன்பினால் முதுகைத் தட்டிக் கொடுத்த
  • சோர்ந்து இருந்தபோது ‘உங்களாலும் முடியும்’ என்று உசுப்பி விட்ட
  • காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி, களங்கமில்லா அன்புடன் கடிந்த, அடித்த, சாடிய, அணைத்த, வாழ்த்திய - பல்வேறு முறைகளில் என்னை வழி நடத்தி வரும் - எண்ணிலடங்காத அந்த
  • முகமறியாதப் புரவலர்கள், பண்பாளர்கள்,நண்பர்கள், யாவரும் நலமுடன் வாழ்க வளமுடன் என்று நன்றியறிதலுடன் நெஞ்சார வாழ்த்துகிறேன் !
அவர்களால் விளைந்த இன்ன பிற கட்டுக் கோப்புகளால் ஓரளவு என் எழுத்துக்கள் செம்மைப் படுத்தப் பட்டன. இன்னமும் அந்தப் பணி தொடர்கிறது.
கட்டுக் கோப்போடு
இயங்கும்
இந்தப் பெரிய காமலோகக் குடும்பத்தில் நானும் ஒரு பொறுப்பான உறுப்பினர்தான் என்று ஒரு நாள் நிச்சயம் எல்லோரிடமும் பெயர் வாங்குவேன்.
அந்தப் பெரிய நம்பிக்கை எனக்குண்டு அய்யா, அம்மணி!
நானும் நல்ல பெயர் வாங்குவேன்
தொடர்ந்து என்னைக் கண்டித்து வாருங்கள் அய்யா, அம்மணி. அப்போதுதான் என்னுள் ஒளிந்துள்ள சின்னஞ் சிறு
சிறப்புக் குணங்கள், அப்படி நிஜமாகவே ஏதேனுமிருந்தால், வெளியாக வழி உண்டாகும். என் பணிகளும் மேலும் செம்மைப்படும்
இதுதான் என்னுடைய இன்றைய வேண்டுகோள்
,

Last edited by vjagan; 17-04-12 at 12:41 PM.
Reply With Quote