View Single Post
  #30  
Old 23-12-08, 01:19 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,782
My Threads  
அசோவைப் பற்றி என்னுடைய அறிமுகத்திரியில் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. தளத்தில் அறிமுகமாகி மிகவும் நெருங்கிய நண்பனாக பாசமிகு சகோதரனாக மற்ற எல்லோரையும்விட எனக்குத்தான் அசோவை அதிகம் தெரியும் என்று பெருமைப் பட்டுக்கொள்வேன்.

நிறைய நேரங்களில் அசோவைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.
  • புதியன கற்றல்.
  • கற்றதை பிறருக்கு பயன்படும் வகையில் பகிர்தல்.
  • தவறுகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டுதல்.
  • தன் மீதே தவறென்றாலும் தயங்காமல் உடனே ஒப்புக்கொண்டு தன்னிலையை மாற்றிக்கொள்ளுதல்.
  • தர்ம நியாயங்கள் மற்றவர்க்கு போதிக்கத்தான் என்றில்லாமல் தானே கடைபிடித்தல்.
  • உதவுவதில் பாரபட்சமின்றி பரந்த மனப்பான்மையுடன் செயல்படுதல்.
  • பொறுப்பை பொறுப்பாக நிறைவேற்றுதல்.
  • துன்பத்திலும் தன் நகைச்சுவை உணர்வைக் கலந்தே பிரதிபலித்தல்.
  • கருத்துவேறுபாட்டை விரோதமாக்காமல் உணர்த்துதல்.
  • நிறைய உழைத்தல்.
  • அரைகுறை ஞானத்தைக்கூட காசாக்கிப்பார்க்கும் இந்த உலகத்தில் தப்பிப்பிறந்த அறிவு நிறைந்த ஆன்மா.

.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நிறைய நற்குணங்களையும்.. நல்ல பண்புகளையும் கொண்டவரை நம் தளத்தின் மூலம் அறிந்து நண்பனாக/சகோதரனாகப் பெற்றது பெருமிதமாக இருக்கிறது.

அசோவின் பங்களிப்பு மேலும் மேலும் இங்கே தொடரவும் அவருடைய குடும்பம், தொழில் ஆரோக்கியம் ஆகியன சிறக்கவும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.