View Single Post
  #7  
Old 12-01-12, 08:37 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நம் தளத்தலைவர் நம் தேவைகளைக் கேட்டறிந்து இயன்றவற்றை செய்யும் எண்ணத்துடன் இத்திரியைத் தொடங்கியுள்ளார். அவர்களுக்கு நம் நன்றி.

1. முதற்பக்கத்தில் காலண்டருக்கு மேல் உள்ள தேடுதல் பெட்டியில் ஒரு சொல்லைப் பதிது க்ளிக் செய்தால்,
Your submission could not be processed because you have logged in since the previous page was loaded.
Please push the back button and reload the previous window.

என்று வருகிறது. அந்த மெஸேஜ் சொல்லியபடி பின்சென்று மீண்டும் ஒரு வார்த்தையைப் பதித்துத் தேடச் சொன்னால் மீண்டும் இதே பதில். எத்தனை தடவை கேட்டாலும் இப்படித்தான் வருகிறது. இதை சரிசெய்தால் வசதியாக இருக்கும்.

2. ஒரு கதையிலிருந்து மூன்று நான்கு பகுதிகளை கோட் செய்யவிரும்பினால், 'QUOTE' என்ற பட்டனைக் க்ளிக் செய்தால் முழுக்கதையும் வந்துவிழுகிறது. இதில் நமக்குவேண்டிய பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டுவது மிக சிரமமான காரியம். நமக்கு வேண்டிய பகுதிகளை ஹைலைட் செய்து அவை மட்டும் 'கோட்' பட்டனைத் தட்டும்போது கிடைக்குமானால் வசதியாக இருக்கும். மல்டிகோட் செய்யும்போதும் இதேமுறையில் ஹைலைட் செய்யப்படும் பகுதிகள் மட்டும் கிடைத்தால் நல்லது.

3. ஒரு பின்னூட்டத்தை அல்லது அதன் ஒரு பகுதியைக் கோட் செய்யும்போது இடையே உள்ள கொடேஷன்கள் விடுபட்டுப்போகின்றன. நாம் சொல்லவரும் கருத்து அந்த கோட் செய்யப்பட்ட பகுதியையும் சேர்த்துப் படித்தால்தான் தெளிவாகத் தெரியும்.
உதாரணத்துக்கு என் கருத்தை ஒருவர் கோட் செய்து அதன் கீழ் "இல்லை ட்ரீமர், அது தவறு' என்றுமட்டும் சொலவதாக வைத்துக்கொள்வோம். நான் விடையிறுக்கும்போது கொடேஷ்ன் பெட்டியில் உள்ள என் ஒரிஜினல் கருத்தையும் அதன்கீழ் அவர் கருத்தையும் சேர்த்துப்படித்தால்தான் அடுத்து நான் 'அது எப்படித் தவறு என்று சொல்கிறீர்களா?' என்று வினவமுடியும்.
அதனால் நாம் ஹைலைட் செய்யும் பகுதி முழுதையும் கிடைக்கும்படி செய்யலாம்.

4. 'கதைகள் பற்றிய கல்ந்துரையாடல்' பகுதியில் நம் தளத்தலைவர் 'காமலோக சரித்திர காமக்கதைகள்' என்ற திரியில் ஒரு தொகுப்பு வைத்துள்ளார். இதேபோல் பிறரும் வெவ்வேறு வகைக் கதைகளையும் அவற்றில் ஆர்வமுள்ளவர்கள் தொகுத்துவைக்கலாம் என்று அனுமத்தித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். தளத்தை மேம்படுத்த ஓள்வாத்தியார் தொடங்கிய பழைய திரியில் நண்பர் ஸ்ரீராம் அவர்கள் 'காமலோக விஞ்ஞான காம்க்கதைகளுக்கு ஒரு திரி தொடங்கலாமே என்று கூறியிருந்தார். அவரே இப்படி ஒரு திரி தொடங்கி அக்கதைகளைக் தொகுக்கலாமே..

5. சில உறுப்பினர்கள் தாம் கதைகளை எழுதமட்டுமே செய்வோம், அதற்குவரும் பின்னூட்டங்களை வரவேற்போம், கேட்டுக்கூடப் பெறுவோம், ஆனால் பிறர் கதைகளைப்படித்து பின்னூட்டம் இடமாட்டோம்' என்று கூறுகிறார்கள். நம் தளம் உறுப்பினர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தால் வளம்பெறுகிறது. 'என் கதையை மற்றவர்கள் படிக்கவேண்டும்' என்று எதிர்பார்ப்பவர் தாம் மற்றவர் பதிக்கும் கதைகள் சிலவற்றையாவது படிக்கவேண்டும் என்று நினைக்கவேண்டாமா? எனவே தளத்தில் கதை பதிப்பவர் ஒவ்வொருவரும் மூன்று மாதங்களில் மற்றவர் பதித்துள்ள பத்துக்தைகளையாவது பதித்துப் பின்னூட்டமிடவேண்டும் என்று ஒரு விதியைக் கொண்டுவந்தால் என்ன? அந்தப் பின்னூட்டங்கள் ஒப்புக்குப் போடப்பட்டவையா உண்மையிலேயே படித்து செய்யும் விமரிசனமா என்பதை அந்தப் பின்னூட்டம் இடுபவரின் சுயமரியாதைக்கே விட்டுவிடலாம்.

6. முகப்புப் பக்கத்தின் வலது பகுதியில் புதிதாகப் பதிக்கப்பட்ட திரிகளின் பட்டியலிலேயே கதைகளின் சுட்டிக்குப் பின்னால் அடைப்புகளில் தீ.த.உ, என்று குறிப்பிட்டால் அப்படிப்பட்ட கதைகளை விரும்பாத உறுப்பினர்கள் அதை க்ளிக் செய்து உள்ளே சென்று பின் முகம் சுளிக்காமல் இருக்கலாமே. நான் இனி அந்தப்பகுதியில் கதை பதிக்கும்போது கதையின் பெயரிலேயே இதைச் சேர்த்துவிட எண்ணுகிறேன்.

7. ஒரு கதையைப் படித்துக்கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் முடிந்து அடுத்த பக்கத்துக்கு / முன்பக்கத்துக்குச் செல்ல நாம் மவுசால் ஸ்க்ரால் செய்யவேண்டி இருக்கிறது. பல வலைத்தளங்களில் உள்ளதுபோல் கீபோர்டில் 'PAGE UP'& 'PAGE DOWN' என்னும் கீகளை உபயோகித்து இயக்க்கும்படி அமைக்க முடியுமா?

தளத்தை மேம்படுத்த இத்திரியின் என் கருத்துகளைப் பதிக்கும் வாய்ப்புக்கு நன்றி, பாராட்டுக்குரிய தலைவர் முக்குறியோன் அவர்களே.
Reply With Quote