View Single Post
  #24  
Old 19-11-13, 09:30 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
அந்த நண்பர்களுக்கு அடிப்படையிலேயே கிரிக்கெட் விளையாட்டின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதும் அவர்களின் பதிவிலிருந்து தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
அரசியல் ஒரு சாக்கடை. கிரிக்கெட்டும் அது போல்தான். நான் தற்போதும் தீவிர கிரிக்கெட் ரசிகந்தான். ஆனால் கிரிக்கெட்டால் பல இழப்புக்களையும் நான் சந்தித்துள்ளேன். 11 முட்டாள்கள் சேர்ந்து விளையாடும் விளையாட்டை பல்லாயிரம் முட்டாள்கள் சேர்ந்து ரசிக்கின்றார்கள் என்ற பெர்னாட்ஷாவின் உண்மை கூற்றை என் மூலமே நான் புரிந்து கொண்டேன்.

சச்சின் ஒரு மகத்தான் கிரிக்கெட் வீரர். அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அரசியல் சாக்கடையை போல் கிரிக்கெட்டும் ஒரு சாக்க்கடை என்பதை நண்பர்கள் அறிந்து தெளிந்து கொண்டதால்தான் நண்பர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை இங்கே கொட்டுகின்றார்கள் என நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் நம்ம ஊர் சீனி மாமா, சிமென்ட் விலையை கூட்டி மக்களின் அடி வயிற்றில் அடிப்பவர். இவரது மருமகன் மேல் பெட்டிங் புகார் உள்ளது. சீனி மாமாவுக்கு கிரிக்கெட் தலைவராக என்ன தகுதி இருக்கிறது? சரத் பவார் மராத்திய மாநிலத்தின் அரசியலின் கிங்கான இவருக்கு கிரிக்கெட் சங்க வாரிய தலைவராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? கொல்கத்தா டால்மியா இவருக்கும் கிரிக்கெட் சங்க தலைவராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது. பின்புலமும் பண பலமும் ஆள் பிடிக்க காசும் இருந்தால் யாரும் தலைவராகலாம் என்பதுதான் கிரிக்கெட்டின் தலைவிதி. கிரிக்கெட் சங்க தலைவராக இருப்பவர் கிரிக்கெட் விளையாடிவராக* இருக்க வேண்டும். கிரிக்கெட் நுணுக்கங்களை கற்று தெளிந்தவராக இருக்க வேண்டும். ஆனால் பெரும் செல்வம் உள்ளவரும் தொழிலதிபரும்தான் கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கின்றார்கள்.
Quote:
Originally Posted by MACHAN View Post
யார் யாருக்கு எப்போது பட்டங்கள் கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் இருக்குதுங்கோவ்..!
நம்ம ஊர் சாக்கடை அரசியலாளர்களை பற்றித்தான் நமக்கு தெரியும்மே!!!! யார் யாருக்கு எப்போது பட்டங்கள் கொடுப்பார்கள் என தெரிந்த விஷயம்தானே!!!!
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
ஒக்கே மச்சி.. இது ஒன்னும் விவாத மேடை அல்ல.. நாம் கருத்துமோதல் பண்ணுவதற்கு.. எனவே நாம் எப்போதும்போல் ஒருவருக்கொருவர் அன்புடன் அதே நக்கல் நையாண்டியுடன் இருப்போம்..
நண்பர் காம கோடங்கியார் சரியாக சொன்னார்.

சச்சின் ஒரு கால் நூற்றாண்டு சகாப்தம்.1998ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சச்சின் சார்ஜாவில் விளையாடிய ஆட்டத்தை இன்றும் மறக்க முடியாது. 1990 களில் இந்திய கிரிக்கெட் முடங்கி போன நேரத்தில் சச்சின் என்ற இளம் புயல் வந்ததால்தான் இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் ஜூரம் பற்றி கொண்டது என்பதை மறுக்க முடியாது.
Reply With Quote