View Single Post
  #18  
Old 08-07-13, 03:07 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
இந்த திரியை முன்னரே பார்த்து விட்டேன். ஆனால் இப்போதான் காம கேடியை வாழ்த்த நேரம் கிடைத்துள்ளது.

கழிந்த பெப்ருவரியில் கோவைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்த போது, சென்னை சந்திப்பிற்கு சென்று வந்த காமகேடியாரை சந்திக்கலாம் என எண்ணம் எழுந்தது. ஆனால் காம கேடி என்ற பெயரை பார்த்து இவர் ஆள் கொஞ்சம் முரட்டு ஆளாய் இருப்பாரோ என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. ஒரு வழியாய் காம கேடியை சந்திக்க முடிவெடுத்து அண்ணன் ராஜேஷ் அவர்களிடமும் சோழ இளவலாரிடமும் கேட்டு காம கேடியின் போண் நம்பரை வாங்கி பேசி அடுத்த நாள் அவரை நேரிலேயே சந்தித்த போது ஒரு நல்ல மனிதனை சந்தித்த நிறைவு ஏற்பட்டது. ஒரு நாள் பக*ல் முழுக்க அவருடன் செலவழித்தில் அவரை பற்றிய பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

இன்பம் துன்பம் என மாறி வந்த பல சூழல்களிலும் எதிர் நீச்சல் போட்டு தான் தனது குடும்பம் மட்டும் என இல்லாமல் பல பேருக்கும் உதவிக்கரம் நீட்டும் அவரது மனிதாபத்தையும் அறிய முடிந்தது. மூன்று மாதங்கள் முன்னர் இக்கட்டில் சிக்கி கொண்ட போதும் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

எனக்கு தெரிந்த நல்ல மனிதாப உள்ளம் கொண்ட நண்பர் காம கேடி அவர்கள் மென் மேலும் தன் வாழ்வில் சிறக்க என் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote