View Single Post
  #1  
Old 24-05-21, 10:45 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,467
My Threads  
சிக்நேச்சர் (தமிழில்) கையெழுத்து பற்றிய விதிகள்

நம் தளத்தில் சிக்நேச்சர் பற்றி ஒரு திரியிலே பதில் பதிப்பாக பதிந்ததை இங்கே தனி திரியாக பதிக்கிறேன்.

நம் தளத்தில் அவதார், புரபைல் மாதிரி சிக்நேச்சரும் ஒவ்வொருவரும் தனித்தனியே வைத்துக்கொள்ளலாம். அவரவர் புரபைல் சென்று வைத்துக்கொள்ளலாம். இது ஒவ்வொரு பதிவின் கீழும் தெரியவந்து கொண்டே இருக்கும்.

சிக்நேச்சரில் படம்/சலனபடம் அல்லது எழுத்துக்கள் வரிகளில் அல்லது முன்னர் சொன்ன இரண்டும் வைக்கலாம். ஆனால் இவைகளே பெரும்பாலும் ஒவ்வொரு திரிகளிலும் போஸ்டிங்கை விட நீளமாக இருப்பதால் இதற்கென வரையறை இங்கே குறிப்பிடப்படுகிறது.

1) படம் அல்லது உரைநடை இரண்டில் ஒன்று தான் வைக்க வேண்டும். இரண்டும் வைக்க வேண்டுமென்றால் ஏதாவது போட்டிகளை விளம்பரப்படுத்த குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்

2)படம் என்றால் அது காமமில்லாத அதே நேரத்தில் மற்றவர் எவரும் குறை சொல்ல முடியாத மாதிரி தள விதிகளுக்குட்பட்ட படமே வைக்க வேண்டும். படத்தின் அளவு 4 வரிகள் அளவே நீளமாக அல்லது சிறிதாகவோ இருத்தல் வேண்டும்

3)உரை நடையில் கவிதை அல்லது சுயவிவர குறிப்பு என தனது கதை/ப்ங்களிப்பு தளத்து பொது விசயங்களை குறிப்பிடலாம். இம்மாதிரி உரைநடைகள் லிங்க் வைத்து கதை கட்டூரை கவிதைகளுக்கு செல்வது போலவும் வைக்கலாம், இதுவும் 4 வரிகளுக்கு மேல் மிகக்கூடாது. இந்த 4 வரி என்பது தளத்திலே சாதாரணமாக பயன்படுத்தப்படும் பாண்ட் அளவிலே தான்.

5.எவர் ஒருவர் சிக்நேச்சரும் தளத்து உறுப்பினர் ஒருவரால் நிர்வாக உறுப்பினரிடம் புகார் தெரிவிக்கப்படும் பட்சத்தில், அது சரியான புகார் என நிர்வாக உறுப்பினர் கருதினால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் இசைவுடனோ/இசைவில்லாமலோ நீக்கப்படும். இது பற்றி உறுப்பினருக்கு எச்சரிக்கையோ/ அது இல்லாமலோ செய்ய நிர்வாக உறுப்பினருக்கு உரிமை உள்ளது.

6) ஆபாசப்படம் அல்லது பிறரை கேலி செய்ய /பழித்து பதிக்கப்படும் சிக்நேச்சர்கள் நீக்கப்படுவதுடன் திரும்ப சிக்நேச்சர் வைத்துக்கொள்ளவும் அனுமதி மறுக்கப்படுவர்.

7) பொதுவாக சிக்நேச்சரில் ஜாதி/மத/சிறார்/அரைகுறை ஆடையுடன்/ சினிமா/ சின்னத்திரை சம்பந்தமானவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
__________________