View Single Post
  #21  
Old 21-11-10, 11:18 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 560
iCash Credits: 14,266
My Threads  
நண்பர்கள் இந்த யோசனையை ஆக்கப்பூர்வமாக ஏற்று கொண்டதற்கு நன்றி. முக்கியமாக ஸ்மார்ட் மேன் இந்த திரியை இன்னும் ஆக்கப்பூர்வமாக மாற்றுவதற்கு யோசனை சொல்லி இருக்கிறார். அவர் பதிவை படித்த பிறகு எனக்கு இன்னும் தெளிவு ஏற்படுகிறது. வைர வாசல் கோரிக்கையை கைவிடலாம். ஒற்றை இலக்காய் பழைய கதைகளை மீண்டும் பெரும் வாசிப்பிற்கு ஆட்படுத்துவது எப்படி என நீண்ட விவாதம் நடத்தலாம். சண்டை இல்லாமல் உள்குத்து அல்லாமல் இந்த விவாதம் நடந்தால் ஆரோக்கியமாய் இருக்கும்.

நான் எழுதியிருக்கும் இடங்களில் எல்லாம் 'பழைய கதைகள்' என்றே குறிப்பிடுகிறேன். 'தரமான கதைகள்' அல்லது 'நல்ல கதைகள்' என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தவில்லை. காரணம் இது ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளான வார்த்தைகள்.

அடுத்ததாக இந்த கருத்தோட்டம் இன்னும் பலருக்கும் முக்கியமாக தலைமை நிர்வாகிக்கும் இருக்குமென என்னால் உணர முடிகிறது. ஸ்மார்ட் மேன் சொன்னது போல நண்பர்கள் தங்களை யோசனைகளை இந்த திரியில் கொட்டினால் திரியை தொடங்கியவன் என்கிற முறையில் நான் பெரு உவகை அடைவேன்.
Reply With Quote