View Single Post
  #1  
Old 06-03-06, 03:59 AM
ஸ்டீம்'s Avatar
ஸ்டீம் ஸ்டீம் is offline
*Reactivated on 22/4/18
 
Arrow அன்பர்கலெ உதவி செய்யுங்கல்



தமிழில் எழுத 7 சுலபமான வழிகள்


காமலோகத்திற்கு வரும் எல்லோருக்கும் தோன்றும் முதல் கேள்வி. எப்படி தமிழில் எழுவது? எதில் எழுதுவது? அதற்கு எந்தெந்த மென்பொருட்கள் தேவைப்படுகின்றன? அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? இந்த யூனிகோட், பாமினி, முரசு அஞ்சல் இதெல்லாம் என்னவென்று குழம்பி தலை வலிக்கிறதா? கவலையை விடுங்கள். நான் கீழே எழுதியிருக்கும் 7 வழிகளை அப்படியே கடைப்பிடித்துச் செய்யுங்கள். 10 நிமிடத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து விடுவீர்கள்.


1. கீழ்கண்ட இணையதளத்திலிருந்து eKalappai 2.0b (Anjal) என்ற மென்பொருளை உங்கள் கணினியில் பொருத்துங்கள்.

eKalappai 2.0b (Anjal)

2. அதை பொருத்தியப் பிறகு உங்கள் கணினியில் Start பிறகு Programs பிறகு Tavultesoft Keyman For ThamiZha! பிறகு Keyman-ஐ க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது eKalappai துவங்கி உங்கள் ஸ்கிரீனின் கீழ்வலது மூலையில் இரு சிறு ஐகான் (icon) ஆகிவிடும்.

3. இப்பொழுது கணினியில் Notepad-ஐ துவக்குங்கள்.

4. கர்ஸரை (Cursor) Notepad-இல் வைத்து Alt-2 ஐ அழுத்துங்கள். இப்பொழுது கீழ்வலது மூலையில் இருக்கும் அந்த சிறு ஐகான் "அ" என்ற தமிழ் எழுத்தைக்காட்டும்.

5. பிறகு Notepad-இல் டைப் செய்யுங்கள். என்ன? தமிழில் எழுத துவங்கி விட்டீர்களா? எவ்வளவு சுலபமாக இல்லை?

6. நீங்கள் எவ்வளவு எழுதுகிறீர்களோ அதை அப்படியே காப்பி செய்து காமலோகத்தில் எங்கு பதிக்க நினைக்கிறீர்களோ அங்கிருக்கும் எழுத்துப் பலகையில் பதியுங்கள்.

7. பிறகு நீங்கள் எங்கு எழுதுகிறீர்களோ அதை பொறுத்து "Submit New Thread", அல்லது "Post Quick Reply" என்ற Button-ஐ அழுத்தி உங்கள் பதிப்பை சமர்ப்பியுங்கள்.


பார்த்தீர்களா? ஏழே வழிகளில் உங்களை தமிழில் எழுத வைத்துவிட்டேன். இப்பொழுது எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? செல்லுங்கள். உங்கள் எண்ணங்களை கதைகளாக கட்டுரைகளாக பதியுங்கள்.

மேலும் விவரங்கள் வேண்டுபவர்களுக்கு:

1. eKalappai-யின் Keyman மென்பொருளை ஆரம்பித்து விட்டு Notepad-இல் நீங்கள் Alt-1-ஐ அழுத்தினால் ஆங்கிலத்தில் எழுதலாம். Alt-2-வை அழுத்தினால் யூனிகோட் (Unicode) முறையில் தமிழ் எழுதலாம். இது தான் நமக்கு தேவை. காரணம் காமலோகத்தில் இப்பொழுது எல்லாமே யூனிகோடே. இருப்பினும் இன்னொன்றையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். Alt-3-ஐ அழுத்தினால் தமிழை அஞ்சல் எழுத்துருவில் எழுதலாம். அதற்கு கணினியில் முரசு அஞ்சல் என்ற இன்னொரு எழுத்துருவு மென்பொருளும் வேண்டும். இது கொஞ்சம் குழப்பமானதால் அப்படியே விட்டுவிடுங்கள். Alt-2 மற்றும் Alt-1-ஐ மட்டும் பயன்படுத்துங்கள்.

2. யூனிகோட் முறையிலான தமிழை பயில இந்த இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.

யூனிகோட் பயிற்சிக் கூடம்

தமிழில் மிகச் சுலபமான முறையில் டைப்படித்து பழகச் சிறந்த இடம் இதுவே. இங்கு தமிழ் எழுத்துக்களை டைப் செய்வதற்கு முன்னால் மறக்காமல் நான் மேற்கூறியது போல Keyman மென்பொருளை செயல்படுத்தி பின்பு எழுதும் பலகையில் கர்ஸரை வைத்து Alt-2-வை அழுத்துங்கள். பின்னரே எழுத ஆரம்பியுங்கள்.

3. ஆங்கில உச்சரிப்புக்களுடன் தமிழ் யூனிகோட் வெகுவாகப் பொருந்தினாலும் சில எழுத்துக்களை தேட வேண்டிய நிர்பந்தம் ஆரம்பத்தில் எல்லோருக்கும் ஏற்படும். அதை சுலபமாக்க மறைந்திருக்கும் சில முக்கியமான எழுத்துக்களை இங்கே தருகிறேன். அவற்றை பழகிக்கொள்ளுங்கள்.

ந், ந - w, wa
ஃ - q
ஷ், ஷ - sh, sha மற்றும் ch, cha
ஸ், ஸ - S, Sa
ஞ், ஞ - nj, nja
ல, ள, ழ - la, La, za
ங் - ng
ஹ - ha
க்ஷ - ksha

4. புதிய திரி (New Thread) ஒன்றை ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்றால் தயவு செய்து அதை "Preview Post" என்ற Button-ஐ க்ளிக் செய்து சரி பார்த்தப் பின்னரே பதியுங்கள். இது உங்களின் படைப்புக்களின் முதல் பார்வை (First Impression) தரத்தை உயர்த்தும்.

நான் சொல்ல நினைத்தது அவ்வளவே. வேறு எதாவது சந்தேகங்களிலிருந்தால் இதே பதிப்பில் என்னிடம் கேளுங்கள். என்னால் இயன்ற ஆலோசனைகளை கூறுகிறேன். யூனிகோட் தமிழில் உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய எனது நெஞ்சம் கலந்த வாழ்த்துக்கள். நன்றி.


ஸ்டீம்


Last edited by asho; 12-08-09 at 09:50 AM.
Reply With Quote