View Single Post
  #6  
Old 01-02-15, 06:39 AM
srikalyan's Avatar
srikalyan srikalyan is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 18 Jan 2015
Posts: 492
iCash Credits: 53,373
My Threads  
நண்பர் கேட்பதும் சொல்லுவதும் நியாயம்தான்.

அவசரம், எல்லா வாசல்களிலும் என்ன இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளும் அவசரம்தான் காரணமாக இருக்க முடியும்.

என்னையே எடுத்துக்கொள்வோம். இரண்டு மாதமாக செப்டம்பரில் இணையலாம் என்று காத்திருந்தேன். ஆனால் அது ஜனவரிக்கு தள்ளிப் போடப்பட்டது. காத்திருந்து இணைந்தால் ஒவ்வொன்றுக்கும் இத்தனை பதிப்புகள் வேண்டும் என்று தெரியும் போது சற்று சோர்வாக இருக்கிறது. சரி விதிமுறைப்படி நடப்போம் என்று உறுதி மொழி கொடுத்திருக்கிறோமே என்று என்னையே நான் தேற்றிக்கொண்டு பதித்துக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் அதே சமயம் கதைகளை படித்தால் உடனே அடுத்தடுத்த வாசலுக்கு அனுமதி கிடைக்கும் என்னும் போது இப்படிதான் ஒரு குறுக்கு வழியை கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. சில தளங்களில் கதை பதித்தால்தான் அனுமதியே! அங்கே என்ன செய்ய முடியும்? வேறு ஒரு தளத்திலிருந்து கதையை திருடி அனுமதி பெறுவதுண்டு இல்லையா? அந்த பழக்கம் இங்கேயும் தொடருகிறது என்று நினைக்கிறேன்.

இந்த இண்டர்நெட் யுகத்தில் காப்பியடிக்கும் கதைகளை கண்டுப் பிடிப்பது ரொம்பவும் சுலபம் என்பது புதியவர்களுக்கு தெரியாததால் இந்த தவறு நடக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. ஏற்கனவே இரண்டு மூன்று காப்பியடிக்கப் பட்டக் கதைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

என்னைப்போன்ற புதியவர் நண்பர் அன்பு மேலே பதித்தக் கருத்துகள் மிகவும் சிறப்பனவை.

என்னைப்பொறுத்தவரை இங்கே நானே தட்டச்சு செய்த என்னுடைய சொந்தக்கதைகளை மட்டும்தான் பதிக்கப் போகிறேன். வேறுயாருடைய / எந்த தளத்துடைய கதையையும் காப்பி பேஸ்ட் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை.

இதை புதியவர்கள் எல்லாரும் பின்பற்றினாலே போதும் என்பது என் கருத்து.

நன்றி.
Reply With Quote