View Single Post
  #5  
Old 05-05-11, 08:44 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,526
iCash Credits: 148,355
My Threads  
Quote:
Originally Posted by காமராஜன் View Post
நிர்வாகக் குழுவுக்குள்.. விதிமுறைகளின் அர்த்தம் கற்பித்ததில் (interpretation of rules), விதிமுறைகளை அமல்படுத்துவதில் (Adhoc implementation of rules) .. பல முரண்பாடுகள்
விதிமுறைகள் வகுக்கபடுவது சுலபம் ஆனால் அதை புரிய வைப்பதும் அமல்படுத்துவதும் கடினமான வேலை. அவ்வபோது முரன்பாடுகள் வரதான் செய்யும். நிர்வாக மேற்பார்வையாளர்கள் முழுநேரம் பீல்டில் இருக்க முடியாது, அவர்கள் ஆன்லைனில் வரும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை / சர்சைகளை தடுக்க அந்த நேரத்தில் என்ன செய்ய வேன்டும் என்பது அவர்கள் மனதில் தோன்றியபடி முடிவு செய்கிறார்கள். இப்பதான் ஆன்லைனுக்கு வந்திருக்காங்க. இன்னும் எத்தனை நேரம் இங்க இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. எந்த நேரத்திலும் ஏதாவது பர்சனல் வேலைகள் வரலாம். லாக் அவுட் ஆகலாம். இப்படி சூல் நிலையில் இருக்கும் போது அந்த நேரத்தில் தோன்றியதை தானே செய்ய முடியும் அப்படி இருக்கும் போது சில முரன்பாடுகளை தவிர்க்க இயலாதே.
பெரிய நாட்டில் ஏற்படுத்தி வைத்த சட்டங்களை கூட கீழ் கோர்ட்டு மேல் கோர்ட்டு ஹை கோர்ர்டு சுப்ரீம் கேர்ட்டு என்று இழுத்து கொன்டே போகவில்லை.
ரூல்ஸ் ஏற்படுத்துவது சுலபம் ஆனால் இம்பிலிமன்டேசன் என்பது கடினம் என்பது நாட்டு விசயத்திலேயே இருக்கும் போது நம் லோகத்திலும் இருப்பது இயல்புதானே.

Quote:
Originally Posted by காமராஜன் View Post
பல முரண்பாடுகள் தோன்றுவது இயற்கை..
இயற்கை என்று நீங்களே தெளிவாக சொல்லி விட்டீங்க.
Quote:
Originally Posted by காமராஜன் View Post
குறைப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.
உங்கள் நோக்கத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் அது வெறும் நிர்வாக உருப்பினர்கள் கையில் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது உருப்பினர்கள் கையிலும் இருக்கிறது.

Quote:
Originally Posted by காமராஜன் View Post
தென்படும் 'முரண்பாடுகள்'... முற்றிலும் தவிர்க்க முடியும் என்று நான் கூறவில்லை.. குறைக்கலாம் அல்லவா??
கண்டீப்பாக குறைக்கலாம். எந்த சர்சைகளை ஊதி பெரிசாக்குவதன் மூலம் முரன்பாடுகளை குறைக்க முடியாது என்பதும் இயற்கை. இதை சரியாக புரிந்து கொண்டு உருப்பினர்கள் செயல்பட்டாலே போதும். ஏன் சொல்கிறேன் என்றால் தளம் சீராக போக நம்மை போன்ற உருப்பினர்களும் கடமைபட்டவர்கள் தானே.

முரன்பாடுகளை தவிர்க்க நான் சொல்லும் யோசனையை கடைபிடிக்கலாம்
1. முரன்பாடுகள் தோன்றினால் அதை திரியில் தனிமனித தாக்குதல் இல்லாமல் விவாதிக்கலாம் வாதடலாம் விளக்கம் கோரலாம்.
2. திரி பூட்டபட்டுவிட்டால் தனி மடல் மூலம் தீர்வு கான முயற்ச்சி செய்யலாம். அவ்வாரு செய்யும் போது நிர்வாக உருப்பினர்கள் தங்கள் சிரமத்தையும் நமக்கு புரிய வைப்பார்கள். அதை அனுசரித்து நாமும் நம் கருத்தை அவர்களுக்கு தெளிவாக்கலாம்.
3. இவ்வளவு தூரம் வேலை செய்ய நேரமில்லை அல்லது மூடு இல்லாத பட்சத்திலோ அல்லது எவ்வளவு விளக்கியும் நிர்வாக உருப்பினருக்கு புரியவில்லை என்ற நிலை வந்தால் அதை விட்டு விட்டு அடுத்த வேலை பாக்க போய் விடலாம்
4. ஒரு திரியில் ஏற்படும் சர்சைகளை அங்கு தீர்வு கான முடியவில்லை என்பதற்காக மற்ற திரியில் போய் சம்மந்தமில்லாத கருத்து பதிவதை நிச்சயம் தவிர்க்க பட வேன்டிய செயல்.

நன்பர் காமராசன் அவர்களே முரன்பாடுகள் என்பது நம் அனைவருக்குமே உள்ள தவிர்க்க முடியாத ஒரு குணம். முடிந்த வரை முரன்பாடுகளை குறைக்க முயற்ச்சிக்கலாம். முடியாத பட்சத்தில் முரன்பாடுகளை ஏற்று கொண்டு ஜாலியாக பொழுதை கழிக்கலாமே. பொழுது போக வேன்டும் என்பது தானே நமது முதல் கடமை.

உங்களின் இத்திரியை பாராட்டுகிறேன். இன்னும் ஸ்பெசிப்பிக்காக சொல்லுங்கள் நாம் கருத்து பரிமாற்றங்கள் செய்து முரன்பாடுகளை குறைக்க முயல்வோம்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote