View Single Post
  #1  
Old 29-10-21, 10:27 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,307
iCash Credits: 140,605
My Threads  
காமலோகத்தில் "களையெடுப்பு" நல்லது

குறள் 111:
“தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்”.

(ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடைபெறுமானால், ‘தகுதி’ என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும் - புலியூர்க் கேசிகன்)

நம்முடைய லோகத்தில் மாதாந்திர சிறந்த கதை போட்டி முடிவுகள் அறிவிப்பின் போது களையெடுப்பு என்கிற பெயரில் புதிய நடவடிக்கை அரங்கேறி வருகிறது. இது நம் லோக உறுப்பினர்கள் அனைவரும் அறிந்ததே.

தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 20 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தலைவாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு வெள்ளி வாசல், தங்க வாசல் உறுப்பினர்கள் கூட தலை வாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப் படுகின்றனர். இந்த நடவடிக்கை முறையானதா? முரணானதா? என கேட்டால், தினமும் லோகத்தில் பங்களிப்பு கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் நல்லது என்றும், என்றாவது ஒருநாள் மட்டும் லோகத்தில் எட்டிப் பார்ப்போர் இது சரி இல்லை என்றும் கூறுவார்கள்.

அனுமதி குறைக்கப் பட்டதும் எப்படியாவது நிர்வாகத்திடம் பேசி அல்லது மன்னிப்பு கேட்டு மறுபடி முழு அனுமதியை பெற்று விட வேண்டும் என்றே நினைப்பார்கள்.

பிற காம தளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு முதன்மை தளமாக நம் தளம் பயணிக்க முக்கிய காரணமே இங்கே வகுக்கப் பட்டிருக்கும் விதிமுறைகள் தான். விதிமுறைகள் என்று வரும் போது அதில் பாரபட்சம் இருக்க கூடாது என்பது தானே சரியாக இருக்கும். அதைத்தானே நம் லோகம் செய்கிறது.

அப்படி இருக்கையில் முன்னாள் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், பல பங்களிப்புகளை கொடுத்தவர் என்ற அடிப்படையிலும், அவர்களுக்காக விதிமுறைகளை மாற்றி அமைப்பது என்பது நற்செயல் ஆகாதே. இருந்தாலும் முன்னாள் உறுப்பினருக்கு பதிவு எண்ணிக்கையில் சலுகை கொடுக்கப்பட்டுள்ளதே. அதன்படி சுலபமாக முன்னேறி விடலாமே.

“ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது தேவன் என்றாலும் விடமாட்டேன்”

இந்த பாடலை உணர்வு பூர்வமாய் நாம் ரசிக்கிறோம். பாடலின் வரிகளை வரவேற்கிறோம். நம் லோகத்திலும் அப்படி தானே. தவறு செய்பவர் யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்கப்படும். தவறு செய்பவர்கள் அனைவரும் தானாய் திருந்த மாட்டார்கள். கடுமையான தண்டனைகள் மட்டுமே தவறுகளை குறைக்கும். ஆனால், லோக தண்டனைகள் யாவும் தவறை திருத்திக் கொள்ள கொடுக்கப்படும் மென்மையான தண்டனைகள் தானே.

ஆகவே லோகத்தின் இந்த நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன். லோக வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிப்பதாகவே நான் கருதுகிறேன். நான் தங்க வாசலை அடைந்து விட்டதால் சாதித்து விட்டேன் என்று எப்போதுமே நினைத்தது இல்லை. லோகம் துவங்கிய காலந்தொட்டே இன்னும் சோர்வடையாமல் உற்சாகமாய் பயணிக்கும் பல உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் சாதனையாளர்கள் தான். அத்தகுதி கண்டிப்பாக எனக்கு இல்லை. நான் லோகத்தில் சின்ன ஒரு தூசி மட்டுமே. ஆகவே நான் அறிவுரை கூறவில்லை நண்பர்களே. என் கருத்தை மட்டுமே பதிவிடுகிறேன்.

அப்படி என்ன தவறு செய்து விட்டேன்? ஒரு காம தளத்தில் வராததற்கும், வாக்களிக்காததற்கும் இப்படி ஒரு நடவடிக்கையா? என பலரும் கேட்கலாம்.

ஆம்... படைப்பாளிகள் பலர் நேரங்களை ஒதுக்கி பலப்பல கோணங்களில் சிந்தனைகளை செதுக்கி கதைகளை எழுதி லோகத்தில் பதிவிடுகிறார்கள். பலரோ கதையை மேலோட்டமாக படித்து நகர்ந்து விடுகின்றனர். மேலும் சிலர் கதையை படித்தும் ஒரு பின்னூட்டம் கூட கொடுப்பது இல்லை. சரி. இது அவரவர் சொந்த விருப்பம் என்று வைத்துக் கொள்ளலாம். இதை பற்றி பெரிதாக பேச முடியாது. ஆனால், போட்டியில் பங்குபெறும் கதைகளுக்கு வாக்களிக்க தவறுவது என்பது குற்றம் தான். பலர் மெனக்கெட்டு எழுதிய கதைகள், பலரின் உன்னத படைப்புகள் என கடல் போல கொட்டிக் கிடக்கும் நம் லோகத்தில் இலவச அனுமதியை பெற்றுக் கொண்டு வாக்களிக்க கூட தயங்குவதை என்னவென்று சொல்வது?

மனசாட்சியை தொட்டு கேளுங்கள். இது நியாயமா? இது தவறு இல்லையா? இது குற்றம் இல்லையா? படைப்பாளிகள் இந்த படைப்புகளை படைக்க எவ்வளவு நேரத்தை செலவிட்டிருப்பார்கள்? பத்து நிமிடத்தில் நாம் ஒரு கதையை படித்து விடலாம். ஆனால் அந்த ஒரு கதையை எழுதி முடிக்க பத்து நாட்கள் கூட மெனக்கட்டு இருக்கலாம் என்பது ஏனோ பலருக்கு தெரியவில்லை என்பதை நினைக்கும் போது வேதனையாகத் தான் உள்ளது.

நானும் இதே தவறை தான் செய்தேன். களையெடுப்பு நடவடிக்கையால் நானும் தகுதி இறக்கம் செய்யப்பட்டேன். தங்க வாசலில் இருந்து தலை வாசலுக்கு இறக்கி விடப்பட்டேன். நிர்வாகியிடம் என் தரப்பு நியாயங்களை சொல்லி முழு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி மறுக்கப் பட்டது.

அனுமதி மறுக்கப்பட்ட போது தான், நான் செய்த தவறுகளை உணர்ந்தேன். மீண்டும் தங்க வாசலை விதிமுறைகள் படியே அடைய நினைத்தேன். பங்களிப்பின் எண்ணிக்கையை வேகமாக்கினேன். ஒவ்வொரு வாசலாக மீண்டும் எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டு மாதத்திற்குள் மீண்டும் தங்க வாசலை அடைந்தேன்.

அனுமதிக்கான விதிமுறைகள் இங்கே

“உனக்கென்னப்பா? எக்கச்சக்கமா நேரம் கிடைச்சிருக்கும் எழுதி தள்ளி இருக்கிறே”
நான் செய்யும் தொழிலில் எனக்கு நேரமே கிடைப்பது இல்லை என்பது தான் உண்மை. இருந்தாலும் கிடைக்கும் சின்ன சின்ன ஓய்வு நேரத்தில் தான் லோகத்தில் வந்து செல்கிறேன். மேலும் பத்து நிமிட இருபது நிமிட கேப்புகளில் தான் கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன். நேரம் கிடைக்கவில்லை. ஐ ஆம் ஆல்வேஸ் பிஸி என்று சொல்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்று தான்.

“மனமிருந்தால் மார்க்கம் உண்டு”

சிலர் போட்டிகளில் பங்கெடுத்து அதிலே வெற்றி கிடைக்காமல் போனால் துவண்டு போவதுண்டு. அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நாம் போட்டியில் பங்களிப்பு கொடுப்பதே வெற்றி தான். இங்கே பங்களிப்பு தான் முதல் வெற்றி என்பது பலருக்கு தெரியவில்லை. மேலும் சிலர், வெற்றி கிடைக்கும் போது அவர்களுக்குள் தலைக் கனமும் உருவெடுத்து விடுகிறது. நான் செய்வது மட்டுமே சரி என்றும் என்னை மிஞ்ச ஆள் இல்லை என்றும் நினைப்பதுண்டு. அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை.

“வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை”

ஆனால், சிறந்த பங்களிப்பை நாம் எப்போதுமே நினைத்தால் கொடுக்க முடியும். இதை நிரந்தரமாக செய்ய முடியும். எவ்வளவோ கஷ்டப்பட்டு நம் தலைவர் xxxguy நமக்காக கடலை போன்ற தளத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். தங்க வாசலை அடைந்து விட்டேன். இனி நாம தான் ராஜா என்றெல்லாம் நினைப்பது சரி தானா?

“தன்னை தானே புகழ்வது மன நோய்”

களையெடுப்பு நடவடிக்கையால் நான் தகுதி இறக்கம் செய்யப்பட்டேன். முதல் படியில் இருந்து முன்னேறுவது எனக்கு புது அனுபவமாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். இது கூட ஒரு தனி கிக் தான். என்னை தகுதி இறக்கம் செய்து மீண்டும் கீழிருந்து பயணிக்கும் வாய்ப்பை கொடுத்த லோக நிர்வாகத்திற்கு நான் நன்றி கூற கடமைப் பட்டிருக்கேன். இதை நான் சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு பயணித்தேன். கொஞ்சம் வேகமாக.... இந்த வேகம் என்றுமே நிலைத்திருக்குமா என்பதில் உறுதி இல்லை. ஆனாலும் என் பங்களிப்பை தொடர்ந்து நம் லோகத்தில் கொடுப்பேன் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

தகுதி இறக்கம் அடைந்தோர் ஒவ்வொரு படியையும் மீண்டும் ரசித்து முன்னேறுங்கள். இது அரியதோர் வாய்ப்பு. தகுதியை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாம் நினைத்தால் மீண்டும் நம் தகுதியை நிரூபிக்க முடியாதா? கண்டிப்பாக முடியும்.

“முயன்றால் முடியாதது இல்லை”

நிர்வாக சவால், வாசகர் சவால், மாதாந்தர போட்டிகளில் கண்டிப்பாக வாக்களியுங்கள் நண்பர்களே...
படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கும் பெரிய பரிசு என்பது வாக்களிப்பது தான். வாக்களிப்பு மூலம் படைப்பாளிகளுக்கு நாம் ஊக்கம் கொடுப்போம். வாக்களிப்பு அதிகாகும் போது நம் லோகத்தில் கதை பதிப்போரின் எண்ணிக்கையும், கதைகளும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

என் மனதில் தோன்றிய கருத்துக்களை இங்கே பதிவிட்டுள்ளேன். தவறு இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote