View Single Post
  #24  
Old 05-09-05, 12:02 AM
முகேஷ்'s Avatar
முகேஷ் முகேஷ் is offline
*Ex-Paid Member.
 
Join Date: 14 Jul 2004
Location: India
Posts: 83
iCash Credits: 2,322
My Threads  
Thumbs up

Quote:
Originally Posted by xxxGuy
சிவா_மதுரை,

உங்கள் கருத்துக்கள் படி நடந்தால் நல்லது தான். ஆனால், கதை எழுதுவது என்பது எல்லோராலும் முடியாது. நாம் கதை எழுதினால் முன்னுரிமை என்று கூறுவதனால் பலர் கதை எழுத ஆரம்பிக்கிறார்கள், ஆனால் ஒரு சிலராலேயே நன்றாக எழுத முடிகிறது, பலர் அனுமதி கிடைத்தவுடன், கருத்துக்கள் கூறியே தங்கள் தகுதிகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

யாருமே தனக்கு எதுவுமே வராது என்றும் இருந்துவிடக் கூடாது. முயற்சி செய்து பார்க்கவேண்டும். முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. அதே நேரத்தில் எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியாது. ஆனால், அவரவருக்கு என்று ஒரு திறமை உண்டு. அதை செய்தாலே போதும் கதைகள் மட்டும் தான் படைக்க வேண்டுமென்பதல்ல. குறைந்த பட்சம் சிறந்த கருத்துக்கள் கொடுத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தாலே போதும். ஆனால், அனுமதிகள் கிடைத்தவுடன், அதுவும் கூட செய்யாமல் நிறைய பேர் இருந்து விடுகிறார்களே அவர்களுக்கு தான் விதிமுறைகளை இனி கடுமையாக்க வேண்டும்.

நல்ல விமர்சனங்கள் ஒரு படைப்பாளிக்கு டானிக் போன்றது. அது கிடைத்தால், படைப்பாளி மேலும் மேலும் தன் படைப்பை மெறுகேற்றுவான். அதன் மூலம் தரமான படைப்புகள் கிடைக்கும்.

நீங்கள் ஆரம்பித்துள்ள இந்த தலைப்பால் பலர் கலங்கிப் போய் இருக்கிறார்கள். "வந்துட்டான்யா... வந்துட்டான்யா..." என்று வடிவேல் பாணியில் பலர் கூறியிருப்பார்கள்". "ஏற்கனவே, இங்கே அதிக கெடுபிடி, இந்த ஆளு வேரையா?" என்று சிலர் முணுமுணுத்திருப்பார்கள். நாமும் அவர்களை முதலிலேயே ரொம்பவும் மிரட்ட வேண்டாம். கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் தானாகவே எழுதுவார்கள், நாம் கத்தியை காட்டி மிரட்டி எழுத வைக்க தேவையில்லை.

மேலும், நாங்கள் இங்குள்ள ஒவ்வொரு படைப்புகளையும், அதைப் படைப்பவர்களையும், கருத்துகள் கூறுபவர்களையும், கருத்துக்கள் கூறாமல் செல்பவர்களையும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதற்கு ஏற்ப அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப் படும், படைப்பாளிகள் ஊக்கம் கொடுக்கப் படும், கதைகளின் தரம் காக்கப் படும்.
தலைவர் அவர்களே
தாங்கள் சொல்வது தான் சரி
மேடை பேச்சாளர்கள் பேசிய உடன் அந்த கைதட்டல் இருக்கே அது பேசியவருக்கு எவ்வளவு பெருமை
பேசுபவர் ஓரிருவர் தான் கேட்டு கொண்டிருப்பவர் பல்லாயிரம் பேர் யாவருமா பேச முடியும்
அது போல கதையின் விமர்ச்சகர் இருந்தால் தான் அந்த கதையின் வலிமை மற்றவர்களுக்கு தெரியும்
கதை படிப்பவர்கள் இருந்தால் தானே கதை எழுதி அணுப்ப முடியும்
எல்லோரையும் தண்டனை என்ற பெயரில் நீக்கி விட்டால் யார்தான் எழுதும் கதையை படிப்பது எழுதியவரே படிப்பதா?
கதை எழுதுபவர் எவ்வளவு முக்கியமோ அதெபோல கதையை விமர்சிப்பவரும் முக்கியம் என்ற உங்கள் கருத்துக்கு ஓராயிரம் கைதட்டல் பெருகிறீர்கள்
தலைவா
__________________
ஆலும் வேளும் பல்லுக்கு உறுதி
ஆழ்ந்துபடித்தால்அறிவுக்கு உறுதி
Reply With Quote