View Single Post
  #1  
Old 04-05-06, 01:27 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,442
My Threads  
5வது வருடத்தில் புதிய பதவிகள்/உதவியாளர்கள்

5வது வருடத்தில் புதிய பதவிகள்/உதவியாளர்கள்

வணக்கம் நண்பர்களே..! நண்பிகளே..!!

காமலோகம் இந்த மாதம் வெற்றிகரமாக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நான்கு ஆண்டும் வெற்றிகரமாக கடந்து சென்றதற்கு காரணம் இங்குள்ள பழைய உறுப்பினர்களே... அவர்கள் துணையில்லையென்றால் சாதாரண இ-குரூப்ஸ் குழுவாக இருந்து இன்று இவ்வளவு பெரிய தளமாக வேரூன்றி நிற்க முடியாது. இந்த தளத்திற்காக உழைத்த அத்தனை உறுப்பினர்களையும் நினைவு கூர்ந்து என் நன்றிகளைகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது பழைய துணை-நிர்வாகிகள் பப்பி மற்றும் இளங்கரிகாலன் சொந்த பிரச்சனைகள் காரணமாக தற்போது அடிக்கடி வருவது கிடையாது. அவர்கள் மீண்டும் வரும் நாளுக்கு காத்திருப்போம்.

அது போல நமது மேற்பார்வையாளர்களில் வத்சலா மற்றும் ஆரன் இன்னும் தங்கள் சொந்த பணிகளில் இருந்து மீண்டு வரவில்லை. நண்பர் கா.தா. என்னும் காஞ்சிக்கோ தான் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவருக்கு மேற்பார்வையாளர் பொறுப்பில் இருந்து உயர்த்தி துணை-நிர்வாகியாக பதவி உயர்வு கொடுக்கப் படுகிறது.

தற்போது காமலோக பணிகளில் உதவி புரிந்து வரும் உதவியாளர்கள், chuttipayan, askbusk, ஆதி, amateur_trichy, ஹயாத் ஐவருக்கும் ஒரு வருடத்திற்கு மாடரேட்டர்களாக பதவி உயர்வு கொடுக்கப் படுகிறது.

இவர்கள் ஐவரும் காமலோகத்தின் தலா ஒரு வாசலுக்கு முழு பொருப்பாளியாக விரைவில் நியமிக்கப் படுவார்கள். (விவரம் பின்னால் அறிவிக்கப் படும்)

இவர்களின் தலைமையில் காமலோக பணிகளில் உதவி புரிய 5 புதிய உதவியாளர்களை விரைவில் தேர்ந்தெடுக்கப் போகிறோம். அதனால், விருப்பம் உள்ளவர்கள் தனிமடல் மூலம் உங்கள் விருப்பத்தை எனக்கு தெரிவிக்கலாம்.

காமலோகம்.அமை தளத்திலும் சில வேலைகளில் உதவி புரிய உங்கள் சேவை தேவை. விருப்பம் உள்ளவர்கள் எது போன்ற வேலைகளில் எங்களுக்கு உதவி புரிந்திட நினைக்கிறீர்கள் என்று குறிப்பிடவும்.

தகுதி:
1) காமலோக பதிப்புகளின் தரத்தை உயர்த்த ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
2) காமலோக விதிமுறைகளை நன்றாக தெரிந்தவராக இருக்க வேண்டும்.
3) தமிழ் தட்டச்சு நன்றாக தெரிந்தவராக இருக்க வேண்டும்
4) இங்கு குறைந்த பட்சம் 200 பதிப்புகளையாவது தாண்டியிருக்க வேண்டும்.
5) குறைந்த பட்சம் வாரத்திற்கு 3 மணி நேரம் ஒதுக்க கூடியவராக இருக்க வேண்டும்.


குறிப்பு: தேவைக்கு அதிகமானவர்கள் விண்ணப்பித்தால், காமலோக நிர்வாகிகள்/மேற்பார்வையாளர்கள் சேர்த்து எடுக்கும் தேர்வே இறுதியானது.

உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..

xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-05-06 at 12:11 AM.
Reply With Quote