காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   டி.எம்.சௌந்தரராஜன் மறைந்தார்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=63095)

kay 25-05-13 10:48 PM

டி.எம்.சௌந்தரராஜன் மறைந்தார்!
 
http://www.kamalogam.org/gallery/data/500/TMS.jpg

பி.பீ. ஸ்ரீனிவாஸ், மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தியைத் தொடர்ந்து டி.எம்.சௌந்தரராஜனும் தமது 91ஆவது வயதில் இன்று 25 - 5- 2013 மறைந்து விட்டார்! எம் ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தன் குரலை மாற்றிக் கொண்டு அவர்கள் பாடுவதைப் போலவே பின்னணி பாடுவார். அவர்
பாடிய பாடல்கள் ஏராளம். மதன் அவரைப் பற்றித் தனியாகக்
கட்டுரை எழுத வேண்டும்! அவர் பாடிய முருகன் பாடலில் தவத்திரு ஆண்டவன் பிச்சை அம்மையார் இயற்றிய "உள்ளம் உருகுதையா" தனித்துவம் வாய்ந்தது! டி.எம்.எஸ்ஸுக்கு என் அஞ்சலி! அவர் ஆத்மா முருகனிடம் தஞ்சம் கொள்ள அவனிடமே பிரார்த்திக்கிறேன்! அவர் குடும்பத்துக்குக் காமலோக நண்பர்கள் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Laal 25-05-13 11:00 PM

Quote:

Originally Posted by kay (Post 1228822)
மதன் அவரைப் பற்றித் தனியாகக்
கட்டுரை எழுத வேண்டும்!

+1

உண்மையில் வருத்தமான செய்தி....

பி.பி.எஸ், டி.எம்.எஸ் போன்ற கலைஞர்களின் உடல் இறந்தாலும் அவர்களின் குரலுக்கு இறப்பே இல்லை....உலகம் இருக்கும் வரை அவர்களின் குரல் சிடி,டிவிடி என ஏதோ ஒரு பார்மட்டில் வாழ்ந்துகொண்டே தான் இருக்கும்...

அஞ்சலி செலுத்த ஏதுவாக திரி தொடங்கிய கே-க்கு ஜே.....

Mathan 26-05-13 12:07 AM

வெங்கலக் குரல் மன்னா வீழ்ந்துவிட்டாயா ?!

என் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகமிது
அன்பினில் வாழும் உள்ளமிது அணையே இல்லா வெள்ளமிது
இதயத்தில் ரகசியம் அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது !

முடிந்துவிட்டது தலைவா. உங்களை நாங்கள் இழந்துவிட்டோம். மண்ணுலகிற்கு தாங்கள் ஆற்றிய கலைப்பணி தான் எத்தனை எத்தனை ? சொல்ல வார்த்தை இல்லையே. தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்து,

தாயில்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள் !

என்று பாடிய இந்த மகத்தான பாடலை போற்றுவதா?

நாணயம் மனுஷனுக்கு அவசியம் மிகவு அவசியம்
அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த ரகசியம்

பிறந்த மனிதன் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்ற இதுப்போன்ற பல தத்துவங்களை பாடிய பாடல்களை போற்றுவதா ?

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா
வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டு சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
இல்லாரைக் கேட்டால் ஏளன செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் !

மனித வாழ்வில் உள்ள ஏற்ற தாழ்வுகளை பாடிய இதுப்போன்ற பாடலை போற்றுவதா ?

மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
புதுமேகம் எழுகின்றது உன் தோகை அசைகின்றது

மனிதனின் உத்வேகத்தில் அவனுக்கு காலம் கொடுக்கின்ற இதுப்போன்ற மறுமலர்ச்சி பாடலை போற்றுவதா ?

முள்ளை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே

வெள்ள அலை மேலே துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவ கண்டேன் என் மேலே

எண்ணற்ற காதல் பாடல்களை போற்றுவதா ? எதை போற்ற ?

பாட்டும் நானே... பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே

இசையால உருகாதா உள்ளமுண்டோ என எம்மப்போன்ற இசை ஞானம் இல்லாதவனையும் முனுமுனுக்கவைத்த கம்பீர குரலுக்கு சொந்தம் கொண்டாடும் இசைவேந்தே நான் எதை போற்ற ?

உன் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் எனது கடந்த காலங்களை திரும்பிப்பார்ப்பேன். உன் பாடலை முனுமுனுக்கும் நாட்களை எண்ணி எண்ணி இன்புறுவேன். எனது ஆசா பாசங்களை உனது பாடல்கள் பல மூலம் எண்ணி ரசிப்பேன். நான் வளர்ந்த இந்நாள் முதல் எனது பால்ய நண்பர்களை இழந்துள்ளேன், என அன்பு உறவுகளை இழந்திருக்கிறேன். உம்மைப்போன்ற எத்தனையோ மேதைகளை இழந்திருக்கிறேன், இன்று உம்மையே இழந்துவிட்டேன். நான் எதற்க்காக வாழ்கிறேன் ? எனது கடந்த காலங்கள் எனக்கு திரும்ப கிடைக்குமா ? உங்களை எல்லாம் என்று காண்பேன் ? என் கண்கள் பனிக்கிறதே ! இந்த மண்ணுலகில் நீ இல்லை என்றாலும் என்றும் என் இதயத்தில் இருப்பாய் மன்னவனே. உமது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் எனது பிரார்த்தனை.

உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்த இல்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேணி தாங்கினார் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்... அந்த நாலு பேருக்கு நன்றி !!

Quote:

Originally Posted by kay (Post 1228822)
மதன் அவரைப் பற்றித் தனியாகக்
கட்டுரை எழுத வேண்டும்!

அண்ணா திரி ஆரம்பித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரைப்பற்றிய கட்டுரயை விரைவில் எனது 'சங்கீத சகாப்தங்கள்' திரியில் சேர்க்கிறேன்.

RasaRasan 26-05-13 12:53 AM

எங்கிருந்தாலும் வாழ்க*
உம் இதயம் அமைதியில் வாழ்க*

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பொன் மொழிக்கேற்ப டி எம் எஸ் அவர்கள் இறந்தாலும் அவர் நினைவுகள் என்றென்றும் அழியா.

மதன் அவர்களின் பாடல்களை படிக்கும் போது ஏனோ கண்களின் ஓரத்தில் சிறிதாய் நீர் கசிகிறது.

kprakash3516 26-05-13 01:03 AM

இசை கடல் வற்றியது.
ஆனாலும் அவர் பாடிய பாடல்கள் மழையாய் பொழிந்துகொண்டே இருக்கும்.
ஏனோ இந்த திரிக்கு நட்சட்திர மதிப்பு கொடுக்க மனம் வர வில்லை:(

RasaRasan 26-05-13 01:29 AM

"உள்ளம் உருகுதையா முருகா "என்று T.M.S.பாடினர் .முருகனிடத்தில் அவருக்கு உள்ளம் உருகி விட்டது .ஆனால், தமிழ் நெஞ்சங்களுக்கு T.M.S.பாடல் கேட்டு, அவர்பால் உள்ளம் உருகி விட்டது .

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
மரமானாலும் பழமுதிர் சோலை மரம்மாவேன்

போன்ற சிறு வயதில் கேட்டபாடல்களை இப்போது கேட்கும் போதும் மனம் இலகுவாகி போகிறது.

KANNAN60 26-05-13 01:52 AM

டி. எம். எஸ் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு, குடும்பத்தில் ஒருவரை இழந்த துக்கத்தில் ஆழ்ந்தேன்.

காலையில் எழுந்ததும் எங்கள் கிராமத்துக் கோயிலில் “உள்ளம் உருகுதைய்யா’வில் தொடங்கி, பள்ளிக்கருகில் இருக்கும் ஏதாவது திருமண மண்டபத்தில் இருந்து ‘மயக்கமென்ன இந்த மவுனமென்ன?’வில் தொடர்ந்து, இரவில் படுத்திருக்கையில் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ வரை டி.எம்.எஸ் நம் நாளைத் தொடாத நேரமே இல்லையென்று சொல்லலாம்.

அவருடைய மறைவு உண்மையிலேயே திரையுலகுக்கும், இசைக்கும் நேரிட்ட மாபெரும் இழப்பு!

டி.எம்.எஸ்சின் ஆத்மா சாந்தியடைய எல்லார்க்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

venkat8 26-05-13 02:53 AM

அண்ணாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

MACHAN 26-05-13 03:10 AM

"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்"


என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் டி எம் எஸ் அவர்கள்...!

அவரும் பி. சுசீலா அம்மாவும் இணைந்து பாடிய டூயட் பாடல்களை மச்சான் கேட்காத நாளே இல்லை எனலாம். நண்பர் கே அவர்கள் சொன்னதுபோல புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் ஏற்ற மாதிரி தனது குரலை மாற்றி மாற்றி பாடுவதில் வல்லவர். அவரின் மறைவு தமிழ்த்திரை உலகுக்கு பெரும் இழப்பு. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

HERMI 26-05-13 05:46 AM

சிறுவயதில் நிதமும் இவர் பாடல் கேட்டே வளர்ந்தோம். அவர் மறைந்தாலும், அவரது உயிரோட்டமான வெண்கல குரல் என்றென்றும் வாழும். அண்ணாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.!

ஒரு இசையமைப்பாளர்களுக்கு உள்ள அங்கீகாரம் ஒரு பாடகருக்கு கிடைப்பதில்லை என்று ஒரு கட்டுரையில் இவரின் சாடல் கண்டு உண்மையில் வருந்தினேன். நம் நாட்டில் இருக்கும்போது ஏறெடுத்தும் பார்க்காத அரசு, இறந்த பின் சுடுகாட்டில் தக்க மரியாதை செய்வது ஒன்றும் புதிதில்லையே..!

நண்பர் கேவுக்கு நன்றி.!


All times are GMT +5.5. The time now is 12:10 AM.

Powered by Kamalogam members