காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   சில சந்தேகங்கள்.. சில ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=57995)

காமராஜன் 05-05-11 11:27 AM

சில சந்தேகங்கள்.. சில ஆலோசனைகள்
 
ரொம்ப நாட்களாக ஒரு ஐயம்..
நிர்வாக ஆலோசகர்
நிர்வாக உதவியாளர்
கண்காளிப்பாளர்
மேற்பார்வையாளர்...
என்று அவ்வப்போது பார்க்க நேரிடுகிறது.. அமைப்பில்.. சொல்லப் போனால் அமைப்பின் ஏணிப்படியில் (hierarchy of the organizational structure) இவர்களுக்குள் என்ன வித்தியாசம்?:001:

நிர்வாகக் குழுவில் இருப்பவர்களுக்கு (அவர்கள் இந்தப் பதவிகளில் இருக்கும் வரை) ஒரு சீருடை .. யூனிஃபாரம் கொடுத்தால் என்ன??

asho 05-05-11 12:20 PM

காமராசனுக்கு நிர்வாக உறுப்பினர்கள் மேலே ஒரு கண் எப்போதும் இருக்கிறது என்பது தெரிந்ததே, அதனை வெளிப்படையாக அறிய திரி ஆரம்பித்திருக்கிறார்.

இதற்கு நிர்வாக உறுப்பினர் மட்டுமே பதில் தர இயலும் என்பதால் நான் தர முற்படுகிறேன்.

முதலில் தளம் தங்குதடையில்லாமல் இயங்க நிர்வாக உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த நிர்வாக உறுப்பினர்கள் உறுப்பினர்களில் இருந்தே தேர்வு செய்யப்படுகின்றனர். முன்னாள் நிர்வாக உறுப்பினர் விலகல்/நீக்கம் காரணத்தினால் தளத்திலே புது நிர்வாக உறுப்பினர் தேர்வு பற்றி ஒரு திரி நிர்வாகி அவர்களால் ஆரம்பித்து விருப்பம் உள்ளவர் பதிந்து பின் அவர்கள் பங்களிப்பு தெரிந்து பின் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

முதலிலே நிர்வாக உதவியாளர் என்ற மட்டிலே தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அந்த வேலை (பிழை திருத்தம், விதிமுறை மீறல்களை நிர்வாக குழுவிற்கு சுட்டிக்காட்டல், தளத்திலே புதியவர் அல்லது சந்தேகம் ஏற்படுபவர்களுக்கு தனிமடலில் உதவி புரிதல், கதைகளை உரிய இடத்திற்கு மாற்றுதல், யுனிகோடாக்கம்[முன்னர் இருந்தது]இன்னும் பிற சில ) திறம்பட செய்தால் அடுத்து கண்கானிப்பாளராக தகுதி உயர்த்தப்படுகிறார். இது அவர்கள் சேவைக்கு கிடைத்த அங்கிகாரம். நன்றாக பரிணமிக்க முடியாதவர்\தெரியாதவர்கள் தாங்களே உதவியாளர் பொறுப்பில் இருந்தும் விலகிக்கொள்கிறார்கள்.

கண்கானிப்பாளர்கள், உதவியாளர்கள் பணிகளுடன், நிர்வாக விசயங்களை(அதனை பொதுவிலே சொல்ல முடியாது)கூடுதலாக செய்கின்றனர்.

மேற்பார்வையாளர்கள், மேலே உள்ளவர்கள் செய்யும் வேலைகளை சரி பார்ப்பதுடன், மாதம் ஒருமுறை நடத்தப்படும் போட்டி, மற்றவர்கள் நடத்தும் போட்டிக்கு உதவுவதுடன், கூடுதலாக நிர்வாகி அவர்கள் ஆன்லைனிலே தளத்திலே இல்லாத பட்சத்தில் உடனடியாக செய்யப்பட வேண்டிய வேலைகளை செய்யும் பொறுப்பு பெற்றவர்கள்.

நிர்வாக ஆலோசகர், நேரடியாக மேற்பார்வையாளர் வேலைகளை செய்யாவிட்ட்டாலும், நிர்வாக குழுவில் (தனிமடல்கள் மூலம்) விவாதிக்கப்படும் விசயங்களுக்கு தீர்வு காண கருத்து தருபவர். இவையனைத்தும் தலைமை நிர்வாகி அவர்கள் இறுதி ஆலோசனைப்படி முடிவு செய்யப்படுகிறது.

உறுப்பினர் அனுமதி உயர்வு/இரத்து/மாற்றம் இதெல்லாம் தலைமை நிர்வாகி அவர்களே நேரடியாக் செய்கிறார். விதிமுறை மீறும் நபர்/திரிகளை உடனடி தடை செய்ய மேற்பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.

சீருடை என்பது சற்று ஒவரில்லையா காமராசன். அது தான் ஒவ்வொருத்தர் பெயரும் தனி நிறத்தில் உள்ளதே, பின் வேறு என்ன?.

காமராஜன் 05-05-11 07:35 PM

நண்பர் அசோவுக்கு நன்றி..!
எனது கண்ணோடத்துக்குள் வரும் எதையுமே பார்வையிடுவது வழக்கம்.. சிலவற்றை மேல்வாரியாக.. சிலவற்றை .... உன்னிப்பாக.. உடனே ரியாக்ஷன் செய்வதை தள்ளிப் போடுவதும் வழக்கம் ஆகி விட்டது.

ஏணிப்படி.. ஏறக் குறைய எனது கணிப்பு சரியானதே என்பதை கன்ஃபர்ம் பண்ணியிருப்பதற்கு மீண்டும் நன்றி. ஆலோசகர்கள்.. (அட்வைசர்ஸ்)... பொதுவாக பின்னணியில் இருந்தே செயல்படுவது வழக்கம். அன்றாட செயல்பாடுகளில் (ஆப்பரேஷன்ஸ்) இல் ஈடுபடுவது நார்மலாக இல்லை. அதைத் தவறு என்று சொல்ல முடியாது.

ஆனால் நான் இந்தத் திரி தொடங்கக் "காரணம்' அவ்வப்போது தென்படும் 'முரண்பாடுகள்'... முற்றிலும் தவிர்க்க முடியும் என்று நான் கூறவில்லை.. குறைக்கலாம் அல்லவா??

நிர்வாகக் குழுவுக்குள்.. விதிமுறைகளின் அர்த்தம் கற்பித்ததில் (interpretation of rules), விதிமுறைகளை அமல்படுத்துவதில் (Adhoc implementation of rules) .. பல முரண்பாடுகள் தோன்றுவது இயற்கை.. குறைப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

வேண்டுமானால் சுட்டிகளுடன் உதாரணத்துடன் விரிவாகச் சொல்லத் தயார்..

சீருடை.. எந்த அளவுக்கு புரியப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. நான் ஒரு டாக்டர் என்று வைத்துக் கொள்வோம்.. ஒரு மார்க்கெட் அல்லது சாலையில் கார் ஓட்டும்போது நான் ஒரு தனி மனிதன்.. ஆனால் ஒரு ஆஸ்பத்திரிக்குள் கோட் அண்ட் ஸ்தெதஸ்கோப் போட்டு உள்ளே நுழையும்போது வேறு ஒரு அவதாரம்.. பொறுப்புக்கள் அதிகம்..!!!

ஒரு சின்ன உதாரணம்.. எனது ப்ரொஃபைலில் .. சில எச்சரிக்கைப் புள்ளிகள் உள்ளன.. அதில் ஒன்று "புதிய அங்கத்தினரை தவறாக (!) வழி நடத்தியது" என்று ஒரு திரியில்...! அந்தத் திரியில் நான் 'கோட்' செய்து நிர்வாகத்தின் சொல் வாக்கையே நான் கூறினேன் என்று வலியுறுத்தியிருந்தேன்... அன்று கிடைத்த பதில் ..ஒரு நிர்வாக நண்பர்.. நான் தனி அங்கத்தினர் என்ற ரோல்-இல் சொன்னேன்.. நியாயமான பதில்.. இதைத்தான் 'சீருடை' என்று கூறினேன்...

பல ரோல்களில் வரும் நண்பர்கள்... நிர்வாக ரோல்-இல் வரும்போது "மேபா-1" அல்லது 'ககா-3" அல்லது "நிஉ-2" என்று log-in செய்து செயல்பட்டால் இந்த முரண்பாடு வராது அல்லவா??

asho 05-05-11 07:45 PM

இங்கு யாரும் தளத்திற்கு என்று முழுநேர பணியாளர் இல்லை,தலைமை நிர்வாகி உள்பட்.தளமும் வனிக நோக்கத்துடன் நடத்தப்படுவதில்லை. எனவே தனியாக நிர்வாக பணிக்கென்று ஊதியம் பெறுபவர் எவருமில்லை. உறுப்பினர்களே ஆர்வத்துடன் கிடைக்கும் நேரத்த்தில் தளத்திற்கு வருகை தந்து படைப்புகள் கண்டு/தந்து நண்பர்களுடன் மகிழ்ந்து, அவசியம் இருப்பின் நிர்வாக வேலைகளை செய்து வருகின்றனர். இதே போலவே தத்தம் தனிப்பட்ட மனநிறைவிற்காக தளத்திலே பங்களிப்பும் செய்து வருகின்றனர். அவர்கள் தனிப்பட்ட மனநிறைவிற்காக செய்யும் படைப்புகள் தளவிதிகளுக்கு மாறாக இருந்தால், தளவிதிகள்படி தண்டனை பெறக்கூடும். எனவே தனித்து ஒருவர் நிர்வாக உறுப்பினராக மட்டுமோ, சட்டையை கழட்டி வைத்துவிட்டு சக உறுப்பினராகவோ செயல்பட முடியாது. தளத்திலே கலகம் விளைவிக்கும், தள அமைதி கெட செய்பவர்களால் தான் எங்களுக்கு கூடுதல் வேலை. அவர்களை திருத்தவே எச்சரிக்கை/தடை ஒன்றுக்கு சிலமுறை யோசித்து விவாதித்து தருகிறோம். மற்றபடி எவரொருவரையும் மிரட்டுவதோ, தண்டிப்பதோ, மனம் நோகடிப்பதோ நோக்கமல்ல.

உங்களுக்கு உள்ள எச்சரிக்கை புள்ளிகள் பற்றி உதராணத்திற்கு சொல்லியிருக்கிறீர்கள், உண்மையிலே அதை நீக்குவது பற்றி பதில் வேண்டுமென்றால் உரிய இடத்தில் பதிந்து கேளுங்கள் பதில் சொல்கிறோம்.

oolvathiyar 05-05-11 08:44 PM

Quote:

Originally Posted by காமராஜன் (Post 1071308)
நிர்வாகக் குழுவுக்குள்.. விதிமுறைகளின் அர்த்தம் கற்பித்ததில் (interpretation of rules), விதிமுறைகளை அமல்படுத்துவதில் (Adhoc implementation of rules) .. பல முரண்பாடுகள்

விதிமுறைகள் வகுக்கபடுவது சுலபம் ஆனால் அதை புரிய வைப்பதும் அமல்படுத்துவதும் கடினமான வேலை. அவ்வபோது முரன்பாடுகள் வரதான் செய்யும். நிர்வாக மேற்பார்வையாளர்கள் முழுநேரம் பீல்டில் இருக்க முடியாது, அவர்கள் ஆன்லைனில் வரும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை / சர்சைகளை தடுக்க அந்த நேரத்தில் என்ன செய்ய வேன்டும் என்பது அவர்கள் மனதில் தோன்றியபடி முடிவு செய்கிறார்கள். இப்பதான் ஆன்லைனுக்கு வந்திருக்காங்க. இன்னும் எத்தனை நேரம் இங்க இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. எந்த நேரத்திலும் ஏதாவது பர்சனல் வேலைகள் வரலாம். லாக் அவுட் ஆகலாம். இப்படி சூல் நிலையில் இருக்கும் போது அந்த நேரத்தில் தோன்றியதை தானே செய்ய முடியும் அப்படி இருக்கும் போது சில முரன்பாடுகளை தவிர்க்க இயலாதே.
பெரிய நாட்டில் ஏற்படுத்தி வைத்த சட்டங்களை கூட கீழ் கோர்ட்டு மேல் கோர்ட்டு ஹை கோர்ர்டு சுப்ரீம் கேர்ட்டு என்று இழுத்து கொன்டே போகவில்லை.
ரூல்ஸ் ஏற்படுத்துவது சுலபம் ஆனால் இம்பிலிமன்டேசன் என்பது கடினம் என்பது நாட்டு விசயத்திலேயே இருக்கும் போது நம் லோகத்திலும் இருப்பது இயல்புதானே.

Quote:

Originally Posted by காமராஜன் (Post 1071308)
பல முரண்பாடுகள் தோன்றுவது இயற்கை..

இயற்கை என்று நீங்களே தெளிவாக சொல்லி விட்டீங்க.
Quote:

Originally Posted by காமராஜன் (Post 1071308)
குறைப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

உங்கள் நோக்கத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் அது வெறும் நிர்வாக உருப்பினர்கள் கையில் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது உருப்பினர்கள் கையிலும் இருக்கிறது.

Quote:

Originally Posted by காமராஜன் (Post 1071308)
தென்படும் 'முரண்பாடுகள்'... முற்றிலும் தவிர்க்க முடியும் என்று நான் கூறவில்லை.. குறைக்கலாம் அல்லவா??

கண்டீப்பாக குறைக்கலாம். எந்த சர்சைகளை ஊதி பெரிசாக்குவதன் மூலம் முரன்பாடுகளை குறைக்க முடியாது என்பதும் இயற்கை. இதை சரியாக புரிந்து கொண்டு உருப்பினர்கள் செயல்பட்டாலே போதும். ஏன் சொல்கிறேன் என்றால் தளம் சீராக போக நம்மை போன்ற உருப்பினர்களும் கடமைபட்டவர்கள் தானே.

முரன்பாடுகளை தவிர்க்க நான் சொல்லும் யோசனையை கடைபிடிக்கலாம்
1. முரன்பாடுகள் தோன்றினால் அதை திரியில் தனிமனித தாக்குதல் இல்லாமல் விவாதிக்கலாம் வாதடலாம் விளக்கம் கோரலாம்.
2. திரி பூட்டபட்டுவிட்டால் தனி மடல் மூலம் தீர்வு கான முயற்ச்சி செய்யலாம். அவ்வாரு செய்யும் போது நிர்வாக உருப்பினர்கள் தங்கள் சிரமத்தையும் நமக்கு புரிய வைப்பார்கள். அதை அனுசரித்து நாமும் நம் கருத்தை அவர்களுக்கு தெளிவாக்கலாம்.
3. இவ்வளவு தூரம் வேலை செய்ய நேரமில்லை அல்லது மூடு இல்லாத பட்சத்திலோ அல்லது எவ்வளவு விளக்கியும் நிர்வாக உருப்பினருக்கு புரியவில்லை என்ற நிலை வந்தால் அதை விட்டு விட்டு அடுத்த வேலை பாக்க போய் விடலாம்
4. ஒரு திரியில் ஏற்படும் சர்சைகளை அங்கு தீர்வு கான முடியவில்லை என்பதற்காக மற்ற திரியில் போய் சம்மந்தமில்லாத கருத்து பதிவதை நிச்சயம் தவிர்க்க பட வேன்டிய செயல்.

நன்பர் காமராசன் அவர்களே முரன்பாடுகள் என்பது நம் அனைவருக்குமே உள்ள தவிர்க்க முடியாத ஒரு குணம். முடிந்த வரை முரன்பாடுகளை குறைக்க முயற்ச்சிக்கலாம். முடியாத பட்சத்தில் முரன்பாடுகளை ஏற்று கொண்டு ஜாலியாக பொழுதை கழிக்கலாமே. பொழுது போக வேன்டும் என்பது தானே நமது முதல் கடமை.

உங்களின் இத்திரியை பாராட்டுகிறேன். இன்னும் ஸ்பெசிப்பிக்காக சொல்லுங்கள் நாம் கருத்து பரிமாற்றங்கள் செய்து முரன்பாடுகளை குறைக்க முயல்வோம்.

காமராஜன் 07-05-11 12:07 PM

நண்பர் ஓவா.. அவருக்கே உரித்தா முத்திரையுடன் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.. வாழ்த்துக்கள்.. என் நோக்கம் யாரையும் குறை கூறுவது அல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்... நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே "ஓவர்" இல்லை அல்லவா!!!
Quote:

. இவ்வளவு தூரம் வேலை செய்ய நேரமில்லை அல்லது மூடு இல்லாத பட்சத்திலோ அல்லது எவ்வளவு விளக்கியும் நிர்வாக உருப்பினருக்கு புரியவில்லை என்ற நிலை வந்தால் அதை விட்டு விட்டு அடுத்த வேலை பாக்க போய் விடலாம்
:y2::y2::y2::y2:

kay 08-05-11 07:07 PM

நிர்வாக நண்பர்கள் மிகவும் ஆதரவுடன் உதவும் நோக்கத்துடன் தான் பணி செய்கிறார்கள்! அவர்கள் பணி மகத்தானது! நன்றி நண்பர்களே! பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்! திரி துவக்கிய காரா அவர்களுக்கும் நன்றி!
:0019::0019::0019:

bedroom_salak 08-05-11 07:31 PM

ஜாலியாக நண்பர்களுடன் அரட்டை அடிக்க,இன்பம் சுகிக்க என்று மட்டுமின்றி, சில,பல புதிய நமக்கு இதுவரை அறியாத, தெரியாத பல தகவல்களை அறியும் இடமாகவும் இருக்கு என்பதிலே எள்ளளவிலும் சந்தேகமில்லை..

பலதரப்பட்ட மக்கள் வாராங்க..அதனாலே, சில சட்ட திட்டங்கள் தேவைபடுது..அதை பெரும்பாலனோர் ஏத்துகிடுறாங்க..சிலருக்கு, கஷ்டமாகவும் இருக்கு..அதை மேற்பார்வையிட ஒரு குழு தேவையும் படுது..அப்படி உருவாக்கபட்டவைகளை பற்றி நண்பர் கா.ரா.விற்கு சில சந்தேகங்கள் இருக்க,,அதை வினாவாக எழுப்ப..குழுவை பற்றி எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களை, புரியும்படியான விதத்திலே சொன்ன நண்பர்கள் அசோவிற்கும், ஓல்வாத்தியாருக்கும் பாராட்டுக்கள்..

ஆதி 08-05-11 10:24 PM

திரு.கா.ரா அவர்களின் பதிப்பு என்றாலே எனக்கு ஒரு பயம் அன்று முதல். ஆனால் இதோ மிகவும் பயனுல்ல பதிப்பு. பலர் நம் தலத்தைபற்றி தெரிந்து கொள்ளக்கூடிய விஷங்களை விளக்கமாக கேட்டிருக்கிறார். அதற்கு அசோவின் விளக்கமான பதில் போற்றத்தக்கது. வாத்தியாரும் நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறார்.

என்று நம் தளத்தில் உருப்பினர் ஆனேனோ அன்று முதல் இன்று வரை வேறு ஒரு தளத்தை தேட மனம் விரும்பியதே இல்லை. காரணம் நம் தளத்தின் கட்டுக்கோப்பான முறை. இது ஒரு குடும்பம் போல.

காமராஜன் 09-05-11 05:52 AM

சொல்லப் போனால்... இந்தத் திரி தொடங்குவதற்கு எனது மனதில் அடித்தளத்தில் ஏதோ ஒரு சந்தேகம் இருந்தது... அதை நானே உணரவில்லை போலும்..
நண்பர் ஆதி வந்தவுடன் தான் அது மெல்ல மெல்ல மேலே வந்தது. காரணம்... "பூட்டு".

சில மாதங்கள்.. அல்லது வருடங்களாகக் கூட இருக்கலாம்.. ஒரு நிர்வாக உறுப்பினர் துவங்கிய ஒரு திரியை . வேறு ஒரு நிர்வாக அங்கத்தினர் 'பூட்டு" போட்டு விட்டார். இருவருமே அந்த நேர்த்தில் நிர்வாக உறுப்பினர்.. மங்கலாக ஞாபகம் இருப்பது.. ஏதோ ஒரு மொழி கற்பது பற்றிய திரி.. அங்கு சர்ச்சை என்ற கேள்விக்கே இடம் இல்லை.. பூட்டு செயல்படும் அளவுக்கு அமைதி கெடவும் ஒரு அம்சமும் இல்லை..

அதானாலேயே இந்த "ஏணிப்படி" பற்றிய சந்தேகம் எழுப்பினேன்..

அசோ கேட்டபடி எனது எச்சரிக்கைப் புள்ளி .. இங்கு ஒரு பொருட்டே அல்ல..! அதற்கு என்று ஒரு இடம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.. அது எங்கே?? என்று விதிமுறைகள் தெள்ளத் தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்.. ('அந்த'த் திரி பூட்டப் பட்டு பல வருடங்கள் ஆகி விட்டது என்பது வேறு விஷயம்.. !)

எனவே எனது ஆலோசனை நம்பர் (1)... எல்லா விதி முறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு திரியில் பதித்தால் என்ன???

தற்போது பல இடங்களிலும் சிதறிக் கிடக்கின்றன...


All times are GMT +5.5. The time now is 07:02 AM.

Powered by Kamalogam members