காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   உலக முதியோர் தினம் (World Elders' Day) (http://www.kamalogam.com/new/showthread.php?t=63719)

dreamer 01-10-13 06:12 PM

உலக முதியோர் தினம் (World Elders' Day)
 
யாராவது ஒருவர் ஒரு திரி தொடங்கி இன்று (உலக முதியோர் தினம் - World Elders' Day) முதியோரை வாழ்த்துவீர்கள் என எதிர்பார்த்தேன். ஏமாந்தேன்.

ஒருவேளை முன்பொரு முறை நண்பர் அசோ (வேறு ஒரு சந்தர்ப்பத்தில்) சொன்னமாதிரி காமலோகத்தில் முதியவர் ஏது என வாளாவிருந்துவிட்டீர்கள் போலும்.

asho 01-10-13 06:38 PM

அப்படி நானா சொன்னேன், தலைமை நிர்வாகி தான் சமீபத்தில் சொல்லியிருந்தார்.

முதியவர்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள், அவர்கள் அறிவாலும்,மனத்தின்மையாலும், அனுபவத்தாலும் இந்த உலகத்தை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தான் உலகம் பயனிக்கிறது.

அவர்களுக்கு நாம் எப்போதும் மதிப்பும் நன்றியறிவித்தலும் செய்ய வேண்டும்.

என்னைப்பொருத்தவரை நான் தனிவாழ்விலும், லோகத்திலும் சீனியர்களிடம் மதிப்புடன் தான் இருந்து வந்துள்ளேன். நம் தளத்தில் வாத்தியாரை கிழவர் என்று சொல்வது அவர் அனுபவ அறிவை வைத்து, அப்படி சொல்வதும் அவரை கிண்டல் செய்ய அல்ல, செக்ஸின் போது அதிக வயதானவர்கள் எளிதில் சோர்வுற்றுவிடுவார்கள் என்று சொன்னால் வாத்தி டென்ஸனாகிவிடுவார் என்பதற்காக. மற்றபடி வாத்தியார் என்னை விட ஓரிரு வயது மூத்தவர் என்றே கணக்கிடுகிறேன்.

முதியோர்களை இந்த நன்னாளில் வாழ்த்தி வணங்குவோமாக.

RasaRasan 01-10-13 07:13 PM

முதியோர் தினம்மான இன்றைய நாளில் ட்ரீமர் அய்யா அவர்கள் நலமுடன் பல்லாண்டு இன்புற்று வாழ அவர்களை வாழ்த்தி அவரிடம் இருந்து ஆசிரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
அன்புடன்,
ராரா

tdrajesh 01-10-13 07:30 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1250074)
இன்று (உலக முதியோர் தினம் - World Elders' Day)

மன்னிக்க வேண்டும், இதெல்லாம் யார் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள் அண்ணா!! அன்னையர் தினம், தந்தையர் தினமே என்று யாருமே நினைவில் கொண்டு வாழ்த்துவதில்லையே!!!
Quote:

Originally Posted by asho (Post 1250083)
முதியவர்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள், அவர்கள் அறிவாலும்,மனத்திண்மையாலும், அனுபவத்தாலும் இந்த உலகத்தை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தான் உலகம் பயணிக்கிறது.
அவர்களுக்கு நாம் எப்போதும் மதிப்பும் நன்றியறிவித்தலும் செய்ய வேண்டும்.
முதியோர்களை இந்த நன்னாளில் வாழ்த்தி வணங்குவோமாக.

நண்பர் அசோ மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்.
Quote:

Originally Posted by kamakodangi68 (Post 1250093)
நம் லோகத்திலுள்ள அனைத்து பெரியோர்களுக்கும் இந்த நன்னாளில் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அவர்கள் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என்று என் மனதார வேண்டுகிறேன்..

புதியவர், நண்பர் காமகோடங்கியும் அழகாக சொல்லியிருக்கிறார்.

இருவர் சொன்னதையும் நானும் ரிப்பீட் செய்கிறேன். வாழ்த்துகள் அண்ணா.

அப்படியே எங்களையும் ஆசிர்வதியுங்கள் அண்ணா.

kamakodangi68 01-10-13 07:35 PM

வாழ்த்துகள்
 
ட்ரீமர் அய்யா அவர்களே...

தங்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

தங்களின் ஆசியையும் அன்பையும் இன்று மட்டுமல்ல என்றும் எதிர்பார்க்கிறேன்..

நம் லோகத்திலுள்ள அனைத்து பெரியோர்களுக்கும் இந்த நன்னாளில் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அவர்கள் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என்று என் மனதார வேண்டுகிறேன்..

dreamer 02-10-13 06:07 AM

Quote:

Originally Posted by asho (Post 1250083)
முதியவர்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள், அவர்கள் அறிவாலும்,மனத்தின்மையாலும், அனுபவத்தாலும் இந்த உலகத்தை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தான் உலகம் பயனிக்கிறது. அவர்களுக்கு நாம் எப்போதும் மதிப்பும் நன்றியறிவித்தலும் செய்ய வேண்டும்.

நண்பர் அசோ சொன்னதுதான் நான் இத்திரி தொடங்கியதின் நோக்கம். எனக்கு வணக்கமும் வாழ்த்தும் ஆசிகோரல்களும் கிடைக்குமென்று எதிர்பார்த்து எழுதவில்லை. உலக முதியவர்களிடையே நான் ஒரு சிறியவன். ஏன், நான் இருக்கும் முதியோர் இல்லத்திலேயே மொத்தம் 45 பேரில் என்னைவிட முதியவர்கள் 36 பேர் உள்ளனர் (அதில் 28 பேர் பெண்கள்). அனேகமாக எல்லாரும் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் உள்ளவர்கள். (நூறு முடித்தவர் ஒருவர் சென்ற ஆண்டுதான் காலமானார். சிறந்த படிப்பாளி, சிந்தனையாளர், கடைசி வரையில் கண், காது, கை, கால் எல்லாம் சிறப்பாக (கடைசி மாதம் ஓரளவு குறைந்து) செயல்பட்டன. ஒரு இரவு தூங்கச் சென்றார். அதுவே மீளாத்தூக்கம்.)

லோக முதியவர்கட்கல்ல, உலக முதியவர்களுக்கு நம் வணக்கங்கள்

HERMI 02-10-13 08:25 AM

Quote:

Originally Posted by dreamer (Post 1250193)
உலக முதியவர்களுக்கு நம் வணக்கங்கள்

நானும் இணைந்து என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.!

'இன்றைய வாலிபன்....நாளைய....!?' என்பது அவ்வப்போது என் மனதில் நிழலாடும் ஒரு நிஜம்.!

திரி தொடங்கிய ட்ரீமர் சார் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.!

Nallavan1010 02-10-13 09:09 PM

நண்பர் ட்ரீமர் அண்ணன் அவர்களுக்கு மனம் கனிந்த முதியோர் தின வாழ்த்துக்கள்.

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

ஆகிய திருக்குறள்களில் சொல்லியபடி லோகத்தின் பிதாமகர் திரு ட்ரீமர் அவர்களுக்கு மனம் நிறைந்த வணக்கங்கள்.அவர் சொனபடி யாரேனும் இந்த திரியை தொடங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவறுக்கு வருந்துகிறோம் அண்ணா.

oolvathiyar 03-10-13 01:54 PM

காமலோகத்தின் அனைத்து முதியோர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவர்களுடைய ஆசி நமக்கு எப்பவும் உண்டு, என்னை விட இளையவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள் என்றும் உண்டு.

Quote:

Originally Posted by asho (Post 1250083)
மற்றபடி வாத்தியார் என்னை விட ஓரிரு வயது மூத்தவர் என்றே கணக்கிடுகிறேன்.

ஏன் உங்களை விட ஓரிரு வயது இளையவனாக இருக்கவும் வாய்ப்பு இருக்கல்ல ( நெனப்பு தான்).

kay 03-10-13 02:01 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1250092)
Quote:

Originally Posted by dreamer (Post 1250074)
இன்று (உலக முதியோர் தினம் - World Elders' Day)

மன்னிக்க வேண்டும், இதெல்லாம் யார் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள் அண்ணா!! அன்னையர் தினம், தந்தையர் தினமே என்று யாருமே நினைவில் கொண்டு வாழ்த்துவதில்லையே!!!
Quote:

Originally Posted by asho (Post 1250083)
முதியவர்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள், அவர்கள் அறிவாலும்,மனத்திண்மையாலும், அனுபவத்தாலும் இந்த உலகத்தை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பாதையில் தான் உலகம் பயணிக்கிறது.
அவர்களுக்கு நாம் எப்போதும் மதிப்பும் நன்றியறிவித்தலும் செய்ய வேண்டும்.
முதியோர்களை இந்த நன்னாளில் வாழ்த்தி வணங்குவோமாக.

நண்பர் அசோ மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்.
Quote:

Originally Posted by kamakodangi68 (Post 1250093)
நம் லோகத்திலுள்ள அனைத்து பெரியோர்களுக்கும் இந்த நன்னாளில் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அவர்கள் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என்று என் மனதார வேண்டுகிறேன்..

புதியவர், நண்பர் காமகோடங்கியும் அழகாக சொல்லியிருக்கிறார்.

இருவர் சொன்னதையும் நானும் ரிப்பீட் செய்கிறேன். வாழ்த்துகள் அண்ணா.

அப்படியே எங்களையும் ஆசிர்வதியுங்கள் அண்ணா.

அப்படியே! இன்றைய இளைஞன் நாளைய முதியவர்! இருவருக்கும் வாழ்த்துக்கள்!:0019:

All times are GMT +5.5. The time now is 07:16 PM.

Powered by Kamalogam members