காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காமலோக வசதிகளில் பிடித்தவை, பிடிக்காதவை, புரியாதவை? (http://www.kamalogam.com/new/showthread.php?t=59861)

xxxGuy 12-01-12 09:29 AM

காமலோக வசதிகளில் பிடித்தவை, பிடிக்காதவை, புரியாதவை?
 
நண்பர்களே,

நம் காமலோகம்.காம் தளத்தில் உள்ள வசதிகளில் (Features) உங்களுக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை, புரியாதவை எவை?

அவற்றை ஏன் என்று விளக்கத்துடன் இங்கே தெரிவித்தால், புதியவர்களும் அவற்றை சோதித்து பார்த்து பயனடைவார்கள். நிர்வாக உறுப்பினர்களும் உங்களுக்கு புரியாத வசதிகளுக்கு விளக்கங்கள் கொடுப்பார்கள். ஏனென்றால் பல பழைய உறுப்பினர்கள் கூட சில வசதிகள் நம் தளத்தில் இருப்பதே இன்னும் தெரியாமல் இருக்கிறார்கள், அவர்களுக்கு இது உதவலாம்.

பின்னர் அந்த விளக்கங்களையும், மற்றும் நமது தளத்தில் ஏற்கனவே நிர்வாக உறுப்பினர்கள் பல வசதிகளைப் பற்றி கொடுத்துள்ள விளக்கங்களையும் ஒரு தனிப் பகுதியில் சேமித்து வைத்து கொள்ளலாம். அவ்வாறு செய்தால் ஒவ்வொரு வருடமும் புதிதாக வருபவர்கள் அவற்றை எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

PUTHUMALAR 12-01-12 11:23 AM

இங்கு நான் கண்டறிந்த அனைத்து வசதிகளுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை தான் தலைவரே.. பிடிக்காதவை என்று எதுவுமே இல்லை.. அந்த பிடித்த வசதிகள் எல்லாம் எனக்கு எவ்வாறு பயனுள்ளவைகளாக இருந்துச்சுனு சொல்ல எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேணும் தலைவரே.. பிறகு இங்கேயே வந்து அவற்றைப் பற்றி இன்னும் விரிவாகவே சொல்கின்றேன்..

பிறகு:

முதலில் சொல்லனும்னா முதல் பக்கத்தில் லாகினுக்கு கீழ் வரும் லைவ் சேர்ச் தேடு பொறி மிக மிக பயனுள்ளதாய் உள்ளது.. நாம் விரும்பும் தெரிந்த தெரியாத திரியின் தலைப்பில் உள்ள சில வார்த்தைகளைத் தட்டினால் அது சம்பந்தமான அனைத்து திரிகளையும் அது காட்டி விடுகின்றது..

2. முதல் பக்கத்தில் லாகினுக்கு கீழுள்ள பாரில் உள்ள அனைத்து லிங்களும் பயனுள்ளதாய் உள்ளன.. அதிலும் நியூ போஸ்ட்ஸ் லிங்கும் க்யூக் லிங்ஸ் பட்டனும் அதன் கீழ் வரும் லிங்களும் மிகவும் பயனுள்ளவைகளாய் உள்ளன.. எளிதில் புதிய பதிப்புகளையும் அன்றைய பதிப்புகள் முழுவதையும் அடையாளம் கண்டு படித்து பின்னூட்டம் இட வசதியாய் இருக்கின்றன..

சார்ட் கட்டாய் எடிட் ஆஃப்ஷன்ஸ் எடிட் சிக்னேச்சர் எடிட் டீடெய்ல்ஸ் சென்று தேவையானவற்றைத் திருத்தவும், மாற்றவும் முடிகின்றது.. யாரெல்லாம் ஆன்லைனில் இருந்து எந்தெந்த திரிகளைப் பார்க்கின்றார்கள் எதற்கு பின்னூட்டம் இடுகின்றார்கள் என்பதை எல்லாம் ஹூ இஸ் ஆன் லைன் லிங் சென்று பார்க்க முடிகின்றது..

இன்னும் வளரும்..

oolvathiyar 12-01-12 01:07 PM

மிக மிக அற்புதமான திரி தலைவா. என்னன்ன பிடிச்சிருக்கு எது பிடிக்கல்வில்லை என்று அலசினால் நிறைய கிடைக்கும் மாற்றம் கொன்டு வரும் காலத்தில் இதை அலசி முடிஞ்சதை செயல்படுத்தலாம்,
2008 ஆம் வருடம் இதே போல நான் ஒரு திரி துவங்கி அதில் நிறைய ஆலோசனைகளும் விளக்கங்களும் பெற்று வைத்திருக்கிறேன்.
இதோ அந்த திரி
காமலோகத்துக்கு ஆலோசனை தரலாமே
நான் ஆரம்பித்த அந்த திரியையும் இத்துடன் இனைத்து விட்டால் அங்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு அலசபட்டிருக்கும் விசயம் இப்போதைய மக்களுக்கும் தெரிஞ்சு பிற்காலத்தில் செயல் வடிவம் கொன்டு வர உதவும். அதனால் அந்த திரியை இத்துடன் இனைத்து விடும் படி கேட்டு கொள்கிறேன்.

KANNAN60 12-01-12 01:24 PM

எனக்குப் பிடித்த வசதிகள்:

- தேடும் வசதி
- ஆஃப்லைனின் செல்லும் வசதி
- நாம் படிக்காத/படித்த திரிகளைக் காட்டும் வசதி
- யார் யார் நமக்குப் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் என்று ஒரே திரையில் காட்டும் வசதி
- நண்பர்கள் பதிந்த லேட்டஸ்ட் திரியைக் காணும் வசதி
- தகராறான/தவறான திரிகளை ரிப்போர்ட் போஸ்ட் செய்யும் வசதி

பிடிக்காத வசதிகள்:

- ஒரு தேடுதலுக்கும் அடுத்த தேடுதலுக்கும் உள்ள கால இடைவெளிக் கட்டுப்பாடு

தேவையான வசதிகள்:

- மெயில் பாக்ஸில் அடுத்த மெயிலைப் (next) படிக்கும் வசதி. தற்சமயம் இன்பாக்ஸுக்குத் திரும்பி வந்துதான் அடுத்த மெயிலைப் பார்க்க முடிகிறது
- 50க்கு மேலும் மெயில் சேமிக்கும் வசதி (100 ஆக்கலாமே)
- இரண்டு வார்த்தைகள் கொண்ட சொற்றொடரைத் தேடும் வசதி
- மல்ட்டி கோட் செய்ய எளிதான வசதி. தற்சமயம் ஒவ்வொன்றாய் எடுத்துச் சேமிக்க வேண்டியிருக்கிறது. நாம் ஒரு பகுதியை க்ளிக் செய்து மல்ட்டி-கோட் செய்யச் செய்ய ரிப்ளை பாக்ஸில் அந்தப் பகுதி சேமிக்கப்பட்டால் (quote, unquote வார்த்தைகளும் ‘[’ ‘]’ ‘/’ குறிகளும் இணைத்து) நன்றாக இருக்கும். நம்முடைய கருத்தை மட்டும் கீழே டைப் செய்து போஸ்ட் செய்யலாம்.

இன்னும் ஏதாவது தோன்றினால் இங்கேயே எழுதுகிறேன் தலைவர் அவர்களே! வாய்ப்புக்கு நன்றி!

niceguyinindia 12-01-12 06:45 PM

எனக்கு தெரிந்த வரை ஒரு தேடுதலுக்கும் அடுத்த தேடுதலுக்கும் மிக அதிகமான நேரத்தை எடுத்து கொள்கிறது முடிந்தால் கால அளவை குறைக்க முயற்சிக்கலாம்

மற்றபடி வேறெந்த அசவுகரியங்களும் எனக்கு இல்லை

RasaRasan 12-01-12 08:17 PM

லோகத்தில் உள்ள வசத்திகளை நான் இன்னும் முழுமையாய் உபயோகிக்கவில்லை. நான் முழுமையாய் எல்லா வசதிகளும் பெற்றுள்ளதாகவே உணர்கிறேன். எங்களின் குறைகளை கேட்டு தளத்தை மேம்படுத்தும் தலைவருக்கு நன்றி.

dreamer 12-01-12 08:37 PM

மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நம் தளத்தலைவர் நம் தேவைகளைக் கேட்டறிந்து இயன்றவற்றை செய்யும் எண்ணத்துடன் இத்திரியைத் தொடங்கியுள்ளார். அவர்களுக்கு நம் நன்றி.

1. முதற்பக்கத்தில் காலண்டருக்கு மேல் உள்ள தேடுதல் பெட்டியில் ஒரு சொல்லைப் பதிது க்ளிக் செய்தால்,
Your submission could not be processed because you have logged in since the previous page was loaded.
Please push the back button and reload the previous window.

என்று வருகிறது. அந்த மெஸேஜ் சொல்லியபடி பின்சென்று மீண்டும் ஒரு வார்த்தையைப் பதித்துத் தேடச் சொன்னால் மீண்டும் இதே பதில். எத்தனை தடவை கேட்டாலும் இப்படித்தான் வருகிறது. இதை சரிசெய்தால் வசதியாக இருக்கும்.

2. ஒரு கதையிலிருந்து மூன்று நான்கு பகுதிகளை கோட் செய்யவிரும்பினால், 'QUOTE' என்ற பட்டனைக் க்ளிக் செய்தால் முழுக்கதையும் வந்துவிழுகிறது. இதில் நமக்குவேண்டிய பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டுவது மிக சிரமமான காரியம். நமக்கு வேண்டிய பகுதிகளை ஹைலைட் செய்து அவை மட்டும் 'கோட்' பட்டனைத் தட்டும்போது கிடைக்குமானால் வசதியாக இருக்கும். மல்டிகோட் செய்யும்போதும் இதேமுறையில் ஹைலைட் செய்யப்படும் பகுதிகள் மட்டும் கிடைத்தால் நல்லது.

3. ஒரு பின்னூட்டத்தை அல்லது அதன் ஒரு பகுதியைக் கோட் செய்யும்போது இடையே உள்ள கொடேஷன்கள் விடுபட்டுப்போகின்றன. நாம் சொல்லவரும் கருத்து அந்த கோட் செய்யப்பட்ட பகுதியையும் சேர்த்துப் படித்தால்தான் தெளிவாகத் தெரியும்.
உதாரணத்துக்கு என் கருத்தை ஒருவர் கோட் செய்து அதன் கீழ் "இல்லை ட்ரீமர், அது தவறு' என்றுமட்டும் சொலவதாக வைத்துக்கொள்வோம். நான் விடையிறுக்கும்போது கொடேஷ்ன் பெட்டியில் உள்ள என் ஒரிஜினல் கருத்தையும் அதன்கீழ் அவர் கருத்தையும் சேர்த்துப்படித்தால்தான் அடுத்து நான் 'அது எப்படித் தவறு என்று சொல்கிறீர்களா?' என்று வினவமுடியும்.
அதனால் நாம் ஹைலைட் செய்யும் பகுதி முழுதையும் கிடைக்கும்படி செய்யலாம்.

4. 'கதைகள் பற்றிய கல்ந்துரையாடல்' பகுதியில் நம் தளத்தலைவர் 'காமலோக சரித்திர காமக்கதைகள்' என்ற திரியில் ஒரு தொகுப்பு வைத்துள்ளார். இதேபோல் பிறரும் வெவ்வேறு வகைக் கதைகளையும் அவற்றில் ஆர்வமுள்ளவர்கள் தொகுத்துவைக்கலாம் என்று அனுமத்தித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். தளத்தை மேம்படுத்த ஓள்வாத்தியார் தொடங்கிய பழைய திரியில் நண்பர் ஸ்ரீராம் அவர்கள் 'காமலோக விஞ்ஞான காம்க்கதைகளுக்கு ஒரு திரி தொடங்கலாமே என்று கூறியிருந்தார். அவரே இப்படி ஒரு திரி தொடங்கி அக்கதைகளைக் தொகுக்கலாமே..

5. சில உறுப்பினர்கள் தாம் கதைகளை எழுதமட்டுமே செய்வோம், அதற்குவரும் பின்னூட்டங்களை வரவேற்போம், கேட்டுக்கூடப் பெறுவோம், ஆனால் பிறர் கதைகளைப்படித்து பின்னூட்டம் இடமாட்டோம்' என்று கூறுகிறார்கள். நம் தளம் உறுப்பினர்களிடையே கருத்துப் பரிமாற்றத்தால் வளம்பெறுகிறது. 'என் கதையை மற்றவர்கள் படிக்கவேண்டும்' என்று எதிர்பார்ப்பவர் தாம் மற்றவர் பதிக்கும் கதைகள் சிலவற்றையாவது படிக்கவேண்டும் என்று நினைக்கவேண்டாமா? எனவே தளத்தில் கதை பதிப்பவர் ஒவ்வொருவரும் மூன்று மாதங்களில் மற்றவர் பதித்துள்ள பத்துக்தைகளையாவது பதித்துப் பின்னூட்டமிடவேண்டும் என்று ஒரு விதியைக் கொண்டுவந்தால் என்ன? அந்தப் பின்னூட்டங்கள் ஒப்புக்குப் போடப்பட்டவையா உண்மையிலேயே படித்து செய்யும் விமரிசனமா என்பதை அந்தப் பின்னூட்டம் இடுபவரின் சுயமரியாதைக்கே விட்டுவிடலாம்.

6. முகப்புப் பக்கத்தின் வலது பகுதியில் புதிதாகப் பதிக்கப்பட்ட திரிகளின் பட்டியலிலேயே கதைகளின் சுட்டிக்குப் பின்னால் அடைப்புகளில் தீ.த.உ, என்று குறிப்பிட்டால் அப்படிப்பட்ட கதைகளை விரும்பாத உறுப்பினர்கள் அதை க்ளிக் செய்து உள்ளே சென்று பின் முகம் சுளிக்காமல் இருக்கலாமே. நான் இனி அந்தப்பகுதியில் கதை பதிக்கும்போது கதையின் பெயரிலேயே இதைச் சேர்த்துவிட எண்ணுகிறேன்.

7. ஒரு கதையைப் படித்துக்கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் முடிந்து அடுத்த பக்கத்துக்கு / முன்பக்கத்துக்குச் செல்ல நாம் மவுசால் ஸ்க்ரால் செய்யவேண்டி இருக்கிறது. பல வலைத்தளங்களில் உள்ளதுபோல் கீபோர்டில் 'PAGE UP'& 'PAGE DOWN' என்னும் கீகளை உபயோகித்து இயக்க்கும்படி அமைக்க முடியுமா?

தளத்தை மேம்படுத்த இத்திரியின் என் கருத்துகளைப் பதிக்கும் வாய்ப்புக்கு நன்றி, பாராட்டுக்குரிய தலைவர் முக்குறியோன் அவர்களே.

oolvathiyar 14-01-12 01:43 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1124479)
2. நமக்கு வேண்டிய பகுதிகளை ஹைலைட் செய்து அவை மட்டும் 'கோட்' பட்டனைத் தட்டும்போது கிடைக்குமானால் வசதியாக இருக்கும். மல்டிகோட் செய்யும்போதும் இதேமுறையில் ஹைலைட் செய்யப்படும் பகுதிகள் மட்டும் கிடைத்தால் நல்லது.

இது டெக்னிக்கலாக சாத்தியமில்லாதது. அனேக டெக்ஸ்ட் எடிட்டர் மென்பொருளில் ஒரு பகுதி டெக்ஸ்டை தான் செலக்ட் செய்ய முடியும் விட்டு விட்டு பல பகுதி டெக்ஸ்ட்களை செலக்ட் செய்ய முடியாது. கோட் மற்றும் மல்டிகோட் வசதிகளை நான் அதிகம் பயன்படுத்துவேன் எனக்கு பழகி விட்டது. நீங்களும் பழகீட்டீங்கனா சுலபமா தான் இருக்கும். ஒரு திரியில் இதை பற்றி நான் விளக்கி சொல்லி இருக்கிறேன் திரி நினைவு இல்லை.

Quote:

Originally Posted by dreamer (Post 1124479)
7. ஒரு கதையைப் படித்துக்கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் முடிந்து அடுத்த பக்கத்துக்கு / முன்பக்கத்துக்குச் செல்ல நாம் மவுசால் ஸ்க்ரால் செய்யவேண்டி இருக்கிறது. பல வலைத்தளங்களில் உள்ளதுபோல் கீபோர்டில் 'PAGE UP'& 'PAGE DOWN' என்னும் கீகளை உபயோகித்து இயக்க்கும்படி அமைக்க முடியுமா?

இந்த வசதி நம் தளத்தில் இருக்கிறது டிரீமர். நான் கதை படிக்கும் போது பெஜ் அப் பேஜ் டவுன் பயன்படுத்தி கொன்டு தான் இருக்கிறேன். எனக்கு வேலை செய்கிறதே.

Quote:

Originally Posted by dreamer (Post 1124479)
5. தளத்தில் கதை பதிப்பவர் ஒவ்வொருவரும் மூன்று மாதங்களில் மற்றவர் பதித்துள்ள பத்துக்தைகளையாவது பதித்துப் பின்னூட்டமிடவேண்டும் என்று ஒரு விதியைக் கொண்டுவந்தால் என்ன?

இந்த கருத்தை நானும் வரவேற்கிறேன். நான் முன்பு நடத்திய ஒரு சவால் போட்டியில் மற்றவர்கள் படைப்புக்கு பின்னூட்டம் இடாத படைப்பாளிகளின் படைபுகள் போட்டியிலிருந்து நராகரிக்கபடும் என்று விதிமுரையே வைத்தேன். அப்பவும் நிறைய மக்கள் கலந்து போட்டியை வெற்றி பெற செய்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

எனக்கு இந்த வசதி இருந்தால் மிகவும் சந்தோச படுவேன்
அதாவது ஒரு டெக்ஸ்டை தேர்வு செய்து Ctrl+B, Ctrl+U, Ctrl+I கொடுத்தால் போல்ட் அன்டர்லைன் ஆவதை போல லிங் அல்லது யூஆர்எல் பேஸ்ட் பன்ன Ctrl+K போன்ற ஏதாவது சார்ட் கட் வசதி ஆசைபடுகிறேன்

xxxGuy 14-01-12 03:01 PM

நண்பர்களே,

உங்கள் ஆலோசனையை குறித்துக் கொள்கிறேன். தற்போது என்னால் உடனடியாக செய்ய முடிந்த ஒரு சில வசதிகளை முடுக்கிவிடுகிறேன். மற்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கவனிக்கிறேன்.

1) ஒரு தேடுதலுக்கும் அடுத்த தேடுதலுக்கும் நடுவே 180 வினாடிகள் (3 நிமிடங்கள்) இடைவெளி வைக்கப் பட்டிருந்தது. இதற்கு காரணம் சில தீய சக்திகள் இதை திரும்ப திரும்ப உபயோகித்து நமது தளத்தின் வேகத்தை குறைக்கவோ அல்லது தடைபடச் செய்யவோ கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்யப் பட்டிருந்தது. இது பலருக்கு அசௌகரியம் என்று உணரப் படுவதால், அதன் நேர அளவு இன்றிலிருந்து 60 வினாடிகளாக (1 நிமிடம்) குறைக்கப் படுகிறது.

2) உங்கள் விருப்பப் படி தனிமடல் வசதியின் அளவு 50-லிருந்து 100 ஆக உயர்த்தப் படுகிறது.

Quote:

Originally Posted by KANNAN60 (Post 1124393)
பிடிக்காத வசதிகள்:
- ஒரு தேடுதலுக்கும் அடுத்த தேடுதலுக்கும் உள்ள கால இடைவெளிக் கட்டுப்பாடு

தேவையான வசதிகள்:

- 50க்கு மேலும் மெயில் சேமிக்கும் வசதி (100 ஆக்கலாமே)
- இரண்டு வார்த்தைகள் கொண்ட சொற்றொடரைத் தேடும் வசதி
- மல்ட்டி கோட் செய்ய எளிதான வசதி.

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1124423)
எனக்கு தெரிந்த வரை ஒரு தேடுதலுக்கும் அடுத்த தேடுதலுக்கும் மிக அதிகமான நேரத்தை எடுத்து கொள்கிறது முடிந்தால் கால அளவை குறைக்க முயற்சிக்கலாம்

@கண்ணன்60,
3) நம் தளத்தின் மல்டி கோட் வசதியை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்களா என எனக்கு சந்தேகமாக உள்ளது. நான் இந்த பதிப்பை மல்டி கோட் மூலமாகத் தான் பதிக்கிறேன். 3 பதிப்புகள் மொத்தம் 4 சொடுக்குகளில் எளிதாக வந்து விட்டன.

4) இரண்டு "வார்த்தைகள்" கொண்ட சொற்றொடரைத் தேடும் வசதியும் எனக்கு சரியாக புரியவில்லை, இரண்டு "எழுத்துகளா"? அல்லது வார்த்தைகளா என எனக்கு சந்தேகமாக உள்ளது. இரண்டு வார்த்தை என்றால். இந்த வசதி ஏற்கனவே இருக்க வேண்டும்.

Quote:

Originally Posted by dreamer (Post 1124479)
1. முதற்பக்கத்தில் காலண்டருக்கு மேல் உள்ள தேடுதல் பெட்டியில் ஒரு சொல்லைப் பதிது க்ளிக் செய்தால்,
Your submission could not be processed because you have logged in since the previous page was loaded.
Please push the back button and reload the previous window.

என்று வருகிறது. அந்த மெஸேஜ் சொல்லியபடி பின்சென்று மீண்டும் ஒரு வார்த்தையைப் பதித்துத் தேடச் சொன்னால் மீண்டும் இதே பதில். எத்தனை தடவை கேட்டாலும் இப்படித்தான் வருகிறது. இதை சரிசெய்தால் வசதியாக இருக்கும்.

2. ஒரு கதையிலிருந்து மூன்று நான்கு பகுதிகளை கோட் செய்யவிரும்பினால், 'QUOTE' என்ற பட்டனைக் க்ளிக் செய்தால் முழுக்கதையும் வந்துவிழுகிறது. இதில் நமக்குவேண்டிய பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டுவது மிக சிரமமான காரியம். நமக்கு வேண்டிய பகுதிகளை ஹைலைட் செய்து அவை மட்டும் 'கோட்' பட்டனைத் தட்டும்போது கிடைக்குமானால் வசதியாக இருக்கும். மல்டிகோட் செய்யும்போதும் இதேமுறையில் ஹைலைட் செய்யப்படும் பகுதிகள் மட்டும் கிடைத்தால் நல்லது.

3. ஒரு பின்னூட்டத்தை அல்லது அதன் ஒரு பகுதியைக் கோட் செய்யும்போது இடையே உள்ள கொடேஷன்கள் விடுபட்டுப்போகின்றன. நாம் சொல்லவரும் கருத்து அந்த கோட் செய்யப்பட்ட பகுதியையும் சேர்த்துப் படித்தால்தான் தெளிவாகத் தெரியும்.
உதாரணத்துக்கு என் கருத்தை ஒருவர் கோட் செய்து அதன் கீழ் "இல்லை ட்ரீமர், அது தவறு' என்றுமட்டும் சொலவதாக வைத்துக்கொள்வோம். நான் விடையிறுக்கும்போது கொடேஷ்ன் பெட்டியில் உள்ள என் ஒரிஜினல் கருத்தையும் அதன்கீழ் அவர் கருத்தையும் சேர்த்துப்படித்தால்தான் அடுத்து நான் 'அது எப்படித் தவறு என்று சொல்கிறீர்களா?' என்று வினவமுடியும்.
அதனால் நாம் ஹைலைட் செய்யும் பகுதி முழுதையும் கிடைக்கும்படி செய்யலாம்.

@டிரீமர்,

5) உங்களின் பாயிண்ட் நம்பர் (1)-ல் கூறியுள்ள தகவல் வியப்பாக உள்ளது. இதுவரை யாரும் இதைத் தெரிவிக்கவில்லை. இது ஒருவேளை உங்கள் கணிணியில் அல்லது உலாவியில் உள்ள பிரச்சனையாக இருக்கலாம். குறிப்பாக Cookies பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது. வேறு உலாவியில் அல்லது வேறு கணிணியில் முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? சாத்தியம் என்றால் முயற்சி செய்து பார்க்கவும்.

சற்று விளக்கமாக படிப்படியாக இந்த பிழைச் செய்தி வருவதற்கு முன் நிகழ்ந்தவைகளை வரிசைப் படுத்திக் கூறினால், சரி செய்ய எளிதாக இருக்கும். முடிந்தால் அதன் "ஸ்கிரீன் ஷாட்" ஒன்றையும் அனுப்பிக் கொடுங்கள்.

6) உங்களது பாயிண்ட் நம்பர் (1)-க்கு ஓழ்வாத்தியார் பதில் கூறியுள்ளது போல் நடைமுறையில் சாத்தியம் கிடையாது. இருந்தாலும் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் எதுவும் சாத்தியம் இல்லை என்று கூற முடியாது, ஏதாவது வழி பிறந்தால் உங்கள் ஆலோசனை நிறைவேற்றப் படும்.

7) இதை நானே பல முறை அனுபவப் பட்டிருக்கிறேன். எனக்கும் இது தேவை தான். ஆனால், பல வேலைகளின் நடுவே நினைவில் நிற்பதில்லை. நீங்கள் நினைவூட்டியுள்ளதால், இனி என் நினைவில் நிற்கும், அடுத்த மேம்படுத்துதலில் இதை சேர்க்க முயற்சி செய்கிறேன்.

மற்ற ஆலோசனைகள் அனைத்துக்கும் பின்னர் பதில் கூறுகிறேன்.

MACHAN 14-01-12 03:47 PM

நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று தேடுதல் நேர இடைவெளியை 3 நிமிடங்களிலிருந்து 1 நிமிடமாக குறைத்ததுக்கும், தனிமடல் சேமிப்பு எண்ணிக்கை 50 லிருந்து 100 ஆக உயர்த்தி தந்தமைக்கும் நன்றி தலைவரே.

All times are GMT +5.5. The time now is 03:59 AM.

Powered by Kamalogam members