காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   சென்னை வெள்ளம் - Check in (http://www.kamalogam.com/new/showthread.php?t=67811)

starcom 08-12-15 05:27 AM

அனைவரின் பாதுகாப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முழுவதும் மீண்டு வர வாழ்த்துக்கள்...

HERMI 08-12-15 06:16 AM

Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
தமிழகத்தில் எனக்கு ரொம்ப தெரிந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். அவர்களிருவருக்கும் ஆபத்தில்லை என்று அறிந்து மகிழ்ந்தேன்.

வெங்கட் 'இது' குஜராத் குசும்பு.!!!?

பொருளோ பணமோ இழந்தால் பின்னர் சம்பாதித்து கொள்ளலாம். உயிர் விலை மதிப்பற்றது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சென்னை-லோக மக்கள், வெள்ள பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

tdrajesh 08-12-15 07:42 AM

Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
பாண்டியிலும் வெள்ளம். அநபாயனிடம் யாராவது பேசினீர்களா?

இப்போதுதான் நண்பர் அநபாயனுடன் பேசினேன். அவர் பாண்டியில் மேடான பகுதியில் வசிப்பதால் நலமாக இருப்பதாக சொன்னார். குடும்பத்தினர் சென்னைக்கு போயிருப்பதாகவும் ஆரம்பகால சிரமங்களுக்கு பிறகு இப்போது அவர்களும் நலமாக இருப்பதாகவும் சொன்னார்.
Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
ராரா & மச்சான் குமரி பக்கம் எந்த பிரச்சினையும் இல்லையே?

நண்பர் ரா.ரா.வுடன் பேசினேன். அவரும் குடும்பத்தினரும் நலம். அங்கு மழையிருந்தாலும் சென்னை கடலூர் போல் பெரிய சேதம் ஒன்றும் இல்லை என்று சொன்னார்.
Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
பச்சி நலமா?

உங்க க்ளோஸ் நண்பர்கள் இருவரை விட நலமாக இருக்கிறார்!

12.00 Noon
Quote:

Originally Posted by MACHAN (Post 1368239)
நண்பர் ஓஷோ விஜி பெங்களூரில் இருக்கிறாரா இல்லை கடலூரிலா..? அவரின் குடும்பம் எப்படி இருக்கிறது..?

சற்று நேரத்திற்கு முன்பு நண்பர் ஓஷோவிஜியுடன் பேசினேன். குடும்பத்தினருடன் கடலூரில் இருப்பதாக சொன்னார். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்போது நலம் என்று சொன்னார். இன்று அனேகமாக பெங்களூர் திரும்பக்கூடும் என்றும் சொன்னார்.

தாசன் 08-12-15 07:29 PM

நம் லோக நண்பர்கள் அனேகர் நலமுடன் பாதுகாப்பாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி

Nallavan1010 09-12-15 03:08 PM

நான் நலமாக இருக்கிறேன். நான் இருக்கும் பகுதியில் வெள்ளப்பாதிப்பு அதிகம் இல்லை. ஒருவரை ஒருவர் தொடர்புதான் கொள்ள இயலவில்லை. தொலை தொடர்பு கிடைத்தவுடன் 4-12-2015 அதிகாலை நண்பர் ராஜேஷ் அவரகளுடன் பேசினேன். பச்சி அவர்களும் தனிமடலில் நலம் விசாரித்திருந்தார். மழை வெள்ளத்தால் தென் சென்னை மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது. மிகவும் துயரம் தருவதாக உள்ளது.

கண்ணன்76 10-12-15 04:51 AM

5 நாட்களுக்கு பிறகு அழைத்து நலம் விசாரித்த அன்பு உள்ளம் அண்ணன் டி. ஆர் அவர்களுக்கு நன்றி. குடும்பத்தில் யாவரும் நலம். 5 நாட்கள் அவஸ்த்தைக்கு பிறகு மின்சாரம் கிடைத்தது. இப்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்னும் அலுவலத்தை திறக்க வழி இல்லை.

kamakodangi68 10-12-15 06:11 AM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1368395)
சென்னையில் வசிக்கும் நண்பர் கோடங்கியாருடன்தான் தொடர்பு கொள்ள முடியவில்லை. 1-12-15 க்கு அப்புறம் அவர் தளத்திற்கு வரவில்லை. யாருக்காவது தகவல் தெரிந்தால் சொல்லவும்.

ஆம் நண்பரே.. கடந்த 1ம் தேதிக்குப்பிறகு எங்கள் ஏரியாவில் மிகவும் தண்ணீர். நெட் இணைப்பு.. மின் வசதி போன்றவையும் கிடைக்கவில்லை. எனவே தளத்திற்கு வர இயலவில்லை. தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது.
Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
கோடங்கியார் நலமுடன் இருப்பார் என்று எண்ணுகிறேன்.

நான் நலமுடன் இருக்கிறேன் நண்பரே.. எங்கள் ஏரியாவில் நான் இருக்கும் தெரு மட்டும் பள்ளமாக இருப்பதால் சுற்றிலும் உள்ள நீர் இங்கே தேங்கி தரைத்தளம் முழுவதையும் பாழாக்கிவிட்டது. தெருவில் நிறைய குடும்பங்கள் காலி செய்து தெரிந்தவர்.. உறவினர் வீடு என்று போய் விட்டார்கள்..

ஆனால் நான் வசிப்பது முதல் தளம். எனவே என்னை அடைக்கலம் நாடி வந்த மூவரை நான் கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி காலை வரை உணவு, இருப்பிடம், உடை போன்றவற்றை கொடுத்து உதவி நல்லபடியாக அவரவர் வீடுகளுக்கு திரும்ப அனுப்பினேன்.

HERMI 10-12-15 06:48 AM

Quote:

Originally Posted by kamakodangi68 (Post 1368740)
எனவே என்னை அடைக்கலம் நாடி வந்த மூவரை நான் கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி காலை வரை உணவு, இருப்பிடம், உடை போன்றவற்றை கொடுத்து உதவி நல்லபடியாக அவரவர் வீடுகளுக்கு திரும்ப அனுப்பினேன்.

நல்லது நண்பரே. உங்களின் உதவி மிகவும் போற்றுதலுக்கு உரியது. பாராட்டுகள்.!

RasaRasan 11-12-15 07:34 PM

Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
தமிழகத்தில் எனக்கு ரொம்ப தெரிந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். அவர்களிருவருக்கும் ஆபத்தில்லை என்று அறிந்து மகிழ்ந்தேன்.

யார் எக்கேடு கெட்டு போனால் என்ன? என்ற எண்ணத்தில் குளத்தில் தண்ணீர் திறப்பதற்கு நாள் நட்சத்திரம் நேரம் காலம் என பார்த்து திறந்ததால் அவர்களிருவரும் நலமே. மற்ற சென்னைவாசிகள்தான் மூழ்கி போனார்கள்.
Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
பாண்டியிலும் வெள்ளம். அநபாயனிடம் யாராவது பேசினீர்களா?

அநபாயன் நலமாக உள்ளார். விஜியும் நலமாக உள்ளார்.
Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
ராரா & மச்சான் குமரி பக்கம் எந்த பிரச்சினையும் இல்லையே?

நன்றி வெங்கட். இங்கே தினமும் மழை பெய்கிறது. எங்கள் ரோடுதான் மோசமாக இருக்கிறதே தவிர மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவது இல்லை. எங்க ஏரியாவில் வடிகால்களும் குளம் குட்டைகளும் அதிகம். சென்னையை போல் எந்த வேசி மகன்களும் இங்கே குளம் குட்டைகளை ஆட்டையை போடவில்லை.
Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
தாமிரபரணியிலும் வெள்ளம் என்று கேள்விப்பட்டேன். பச்சி நலமா?

பச்சி தற்போது வெளி நாட்டில் உள்ளார். தாமிரபரணியில் 40 கனாடி வெள்ளத்தை கழிந்த 2 நாட்களாக திறந்து விட்டார்கள். தாமிரபரணி கரையோர மக்களை இடம் மாற்றியுள்ளதாக செய்தியில் கேட்டேன்.
Quote:

Originally Posted by tdrajesh (Post 1368395)
அதிர்ஷ்டவசமாக சற்று நேரத்திற்கு முன்பு போனில் புழுவாரை தொடர்பு கொள்ள முடிந்தது. தரை மாடியில் இருந்த அவர் வியாழன் கிழமை வரை முதல் மாடியில் இருந்ததாகவும், இப்போது திருப்போரூரில் இருப்பதாகவும் சொன்னார். வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் நீரில் மூழ்கி விட்டதாக சொன்னார். குடும்பத்தினர் நலம், உடல் நல குறையேதும் இல்லை என்றும் சொன்னார்.

உங்கள் மூலம் புழு அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி ராஜேஷ் சார்.
Quote:

Originally Posted by venkat8 (Post 1368470)
அபார்ட்மெண்ட்டின் மொட்டைமாடியில் நின்றுக்கொண்டு ஹெலிகாப்டரிலிருந்து போடும் உணவிற்கு கையும் ஏந்தியிருக்கிறேன். ம்ம் கசப்பான நிகழ்வுகள்..

Quote:

Originally Posted by kamakodangi68 (Post 1368740)
ஆனால் நான் வசிப்பது முதல் தளம். எனவே என்னை அடைக்கலம் நாடி வந்த மூவரை நான் கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி காலை வரை உணவு, இருப்பிடம், உடை போன்றவற்றை கொடுத்து உதவி நல்லபடியாக அவரவர் வீடுகளுக்கு திரும்ப அனுப்பினேன்.

இயற்கை பேரிடர் என வந்து விட்டால் ஏழை பணக்காரன் வித்தியாசம் இன்றி மனிதனாகி விடுகிறான். சென்னையிலும் பக்கத்து வீட்டில் யார் யார் என தெரியாதவர்கள் எல்லாம் இன்று ஒருவருக்கொருவர் உதவ ஆரம்பித்துள்ளனர். ஒருவருகொருவர் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

kay 11-12-15 10:00 PM

மனித நேயம் எங்கும்! சென்னை மீண்டும் உயிர்த்தெழுகிறது! எத்தகைய பேரிடர் வந்தாலும் இந்தியா மீண்டெழும்! தொடர்ந்து நம்மால் இயன்ற உதவிகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்வோம்!:0026::0026::0026:


All times are GMT +5.5. The time now is 05:59 AM.

Powered by Kamalogam members