காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நடிகர் வி.எஸ்.ராகவன் அஞ்சலி (http://www.kamalogam.com/new/showthread.php?t=65830)

padithoraipandi 27-01-15 08:47 PM

நடிகர் வி.எஸ்.ராகவன் அஞ்சலி
 
1000 படங்களுக்கும் மேலே நடித்துள்ள பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் கடந்த வாரம் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

NamiXXX 28-01-15 12:18 AM

பழம்பெரும் நடிகர் வி எஸ் ராகவன் அவர்கள் சத்தமிலாமல் 1000 படங்களில் நடித்து சாதனை புரிந்துள்ளார் என்பதை விக்கியில் படித்து தெரிந்து கொண்டேன் .. நல்ல குணசித்திர நடிகர் ..அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்

ramjiram 28-01-15 01:33 AM

பல படங்களில் சிறப்பாக நடித்தவர்.(வசந்த மாளிகை,சிரித்து வாழ வேண்டும்)..
அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.

vjagan 28-01-15 02:05 PM

சிறந்த குணசித்திர நடிகரின் ஆத்மா சாந்தி அடைய என்னுடைய பிரார்த்தனைகள் அய்யா அம்மணி !

அன்பு 31-01-15 03:38 PM

வி.எஸ்.ராகவனா ? எனக்கு யார்னே தெரியலையே....? 1000 படங்கள் நடிச்சிருக்காருன்னு வேற சொல்றீங்க... கூகுள் பண்ணித்தான் பாக்கனும்.

எனிவே. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்.

பின்னர் பதிந்தது.

ஆஹா இவரா... சிறந்த காமெடியனாச்சே. நடிகர் லாரன்ஸ்ன் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துலகூட குசு போட்டுக்கலாமான்னு கேட்டேன் ? சத்தமில்லாம போட்டுக்கங்கன்னு வசனம் பேசுவாரே...

ஸ்திரிலோலன் 01-02-15 05:21 AM

சமீபத்தில் கூட "அறை எண் 305 ல் கடவுள்" என்ற படத்திலும் "இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா" என்ற படத்திலும் நடித்தவர்.. மிமிக்ரி ஆர்டிஸ்டுகள் அனைவரும் அவர் பேசிய "மிஸ்டர் பிள்ளைவாள்" என்ற ஃபேமஸ் டயலாக்கை மிமிக்ரி செய்து பேசுவர்..

அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்....

tamilplus 03-02-15 12:10 AM

அவரோட குரலில் ஒரு தனித்தன்மை இருக்கும். கே. பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு படத்தில் ஒரு ஆங்கிலோ இந்திய அப்பாவா வந்து ரொம்ப நல்லா நல்ல நடிச்சிருப்பாரு. நடிகர் சிவகுமாரே " நான் இல்லை . என்னை விட இவர்தான் திரை உலக ஜென்டில்மேன்" அப்படினு சொல்லிஇருக்கிறார்

eros 03-02-15 12:23 AM

1000 படங்கள் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியம் !! அவ்வளவு எல்லாம் இருக்காது என்று நினைத்தேன். திறமையானவர், இயல்பான நடிப்பு. !

kannanvino 06-02-15 07:41 PM

மிமிக்ரி கலைஞர்கள் பேசும் மாதிரி களில் இவரது குரல் மிகவும் பிரபலமானது நடிப்பு பழம் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

RAJA678 08-02-15 10:20 PM

அருமையான நடிகர் . அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன் . எனக்கு அவருடைய பேச்சு மொழிநடை ரொம்ப பிடிக்கும்


All times are GMT +5.5. The time now is 03:22 PM.

Powered by Kamalogam members