காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நிர்வாக சவால் / வாசகர் சவால் கதைகளின் தலைப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=53404)

xxxGuy 27-12-09 11:49 AM

நிர்வாக சவால் / வாசகர் சவால் கதைகளின் தலைப்பு
 
நண்பர்களே,

சமீப காலமாக நமது உறுப்பினர்கள் நிர்வாக சவால் கதைக்கு நல்ல ஆதரவு தந்து வருகிறார்கள், அதில் பங்கேற்ற அத்தனை படைப்பாளிகளுக்கும், மற்றும் படைப்பாளிகளுக்கு பின்னூட்டமிட்டும், வாக்களித்தும் உற்சாகப் படுத்திய அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

உங்கள் உற்சாகத்தின் பலனாக "மாதம் ஒரு சவால் கதைப் பகுதி" நிரம்பி வழிகிறது. அங்கே மூலக் கதைகளைப் படிக்கும் சிலர் அதன் அனைத்து படைப்பாளிகளின் தொடர்ச்சிகளையும் படிக்கிறார்களா என்று சந்தேகமாக உள்ளது.

நிர்வாகச் சவாலுக்கான வாக்கெடுப்பு திரியின் மூலம் அதில் பங்கேற்ற ஒவ்வொருவர் தொடர்ச்சிகளையும் படிக்கலாம். ஆனால் பலர் அவ்வாறு செய்வதில்லை, நேராக தொடர்ச்சிகள் பகுதிக்கு சென்று கதைகளில் உலாவருகிறார்கள். தற்போது சவால் தொடர்ச்சிகளை பதிப்பவர்களில் சிலர் கதைகளில் தலைப்பில் படைப்பளிகளின் பெயர்களையும், சிலர் சவால் தொடர்ச்சி, சவால் கதை என்றும் துவக்குகிறார்கள். இதற்கு ஒரு சரியான முறையை வரையறை செய்வதன் மூலம், ஒரு கதையின் அனைத்து தொடர்ச்சிகளையும் எளிதாக கிடைக்க வழி செய்ய உள்ளோம்.

உங்கள் கதைகளை இனி எளிதில் அடையாளம் காண, ஜனவரி 2010 முதல் நிர்வாக தொடர்ச்சிக் கதைகள் பதிக்கும் போது அவை கீழ் கண்டபடி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

[1-கதைப்பெயர்] - [2-படைப்பாளிபெயர்] - [3-பகுதிஎண்] [4-மற்றவை]

உதாரணம் : பொலிகாளை - xxxGuy - 05 (இறுதி) (நி.சவால் தொடர்)

** நான்கு பகுதிகளையும் பிரிக்க Bracket (அடைப்பு குறி) அல்லது hyphen (சிறுகோடு) குறிகள் இரண்டையும் தேவைப் படி உபயோகித்துக் கொள்ளவும்.

இதன் மூலம் ஒருவர் திரிகளை ஒழுங்கு படுத்திப் பார்க்க Threads என்று மேலே உள்ள தலைப்பை (heading) அழுத்தினால் ஒரே தலைப்புள்ள கதைகள் வரிசைப் படுத்தப் பட்டு (Sorted) சேர்ந்து வரும், அடுத்து ஒரே படைப்பாளியின் கதை பின்னர், அதை பாகங்கள் வரிசையாக வரும்.

விரைவில் நமது நிர்வாக உதவியாளர்கள் மூலம் அந்தப் பகுதியின் பழைய கதைகளின் தலைப்பு திருத்தப் படும். இதில் எங்களுக்கு உதவி செய்ய நினைக்கும் உறுப்பினர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு அந்தப் பகுதி தலைப்பு திருத்தும் வசதி கொடுக்கப் படும்.

கதைகளை ஒழுங்காக வரிசைப் படுத்தி, அவற்றை பலருக்கு எளிதில் கிடைக்குமாறு வழிசெய்ய எங்களுக்கு உதவுங்கள்.

நன்றி..!

=========================================

ஜூலை'10 முதல் வாசகர் சவால் கதைகளும் ஒழுங்கு படுத்தப் படுகிறது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

இனிமேல் புதிய வாசகர் சவால் கதைகளைப் பதிப்பவர்கள் கீழ் கண்ட முறையில் திரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வா.சவால்: 00xx - கதை பெயர் - படைப்பாளி பெயர் - பாகம் xx - மற்றவை

கவனிக்க வேண்டியவை :

1. வா.சவால்: 00xx என்றே எழுத வேண்டும். வாசகர் சவால்: 00xx என்று கூடாது. மேலும் வா. சவால், வா.சவால் : என்பது போன்று தேவையில்லாத இடங்களில் இடைவெளியையும் விடக்கூடாது.

வா.சவால்: 00xx - இதுவே சரியானது.

2. வா.சவால்: எண்ணை நான்கு digit ல் வைக்கவும். பாகம் எண்ணை இரண்டு digit ல் வைக்க வேண்டும்,

3. பகுப்பு அட்டையையும் (Tags) திருத்தி இந்த வா.சவால்: 00xx வார்த்தை வருமாறு பார்த்துக் கொள்ளவும்.

4. ஒரே பாகத்தில் முடியும் கதைகளுக்கு பாகம் xx , தொடர்ச்சி / முடிவு இரண்டும் தேவையில்லை. தொடர் பாகங்கள் என்றால் மட்டும் கடைசி பாகத்தின் தலைப்பின் இறுதியில் (முடிவுற்றது) என சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒழுங்கு படுத்துவதன் மூலம், ஒரு வாசகர் சவாலின் அனைத்து கதைகளையும் எளிதாக வரிசைப் படுத்தலாம், அவற்றை அடையாளம் காணலாம்.

வா.சவால்: 00xx என்பதற்கு முன்னால் எந்த குறியீடுகளும் வேண்டாம், அதற்கு பின்னரே அவற்றை உபயோகிக்கவும்.

kadalkanni 27-12-09 12:01 PM

அருமையான திருத்தம் நிர்வாகி அவர்களே. இப்போது ஒருவரின் கதைகள் முழுவதையும் படித்துவிட்டு அடுத்தவரின் கதையை படித்து முடிவு எடுப்பது எளிதாக இருக்கும்.

இரண்டு மூன்று தொடர்ச்சிகளை படித்துவிட்டு அடுத்த பகுதிக்காக காத்திருப்பதைவிட, இது எழுத்தாளரின் திறமையை தெளிவாக காண்பிக்க உதவும்..

எப்போதும் நல்ல மாற்றங்களை கொண்டுவரும் நிர்வாகிக்கு மீண்டும் ஒருமுறை எனது வணக்கங்கள்

MACHAN 27-12-09 12:28 PM

நானும் டிசம்பர் மாத நிர்வாக சவால் போட்டியில் கலந்து ‘பொலிகாளை’ தொடருக்காக 5 பாகங்களை பதித்திருக்கிறேன். தலைவர் அவர்கள் அறிவித்ததை போல என் தொடர்ச்சியின் தலைப்புகளை எடிட் செய்து இப்போதே சரி செய்து விடுகிறேன். நன்றி.

thangar.c 27-12-09 02:49 PM

தேவையான ஒரு திருத்தமே!. வரவேற்கிறோம் தலைவரே...

நண்பர் பசீர் குறிப்பிட்டிருப்பது போல இதுவரை கதை படைத்த நண்பர்கள் தங்களாகவே தத்தமது படைப்புகளைத் திருத்திக் கொண்டால் நிர்வாக உறுப்பினர்களின் பணிச்சுமையைக் குறைத்து நிர்வாகத்திற்கு உதவியாத இருக்கும்.

மேலும் ஒவ்வொரு பாகத்திலும் மூலக்கதைக்கான இணைப்புச் சுட்டியை பதிவு செய்வது வாசகர்களுக்கு உதவியாக அமையும்.

anusuya 27-12-09 03:51 PM

Quote:

Originally Posted by UN MACHAN (Post 922693)
நானும் டிசம்பர் மாத நிர்வாக சவால் போட்டியில் கலந்து ‘பொலிகாளை’ தொடருக்காக 5 பாகங்களை பதித்திருக்கிறேன். தலைவர் அவர்கள் அறிவித்ததை போல என் தொடர்ச்சியின் தலைப்புகளை எடிட் செய்து இப்போதே சரி செய்து விடுகிறேன். நன்றி.

நன்றி நண்பரே...இது போல மற்ற படைப்பாளிகளும் செய்து விட்டால் வேலை எளிதாகி விடும்...(எல்லோரும் சேர்ந்து தேர் இழுத்தால் விரைவில் சேர வேண்டிய இடம் சேர்ந்து விடும் தானே.....)

bedroom_salak 27-12-09 05:48 PM

எல்லோருக்கும் எளிதில் புரியும்படியும், சிரத்தை இன்றி தொடர்ச்சியை படிக்க ஏதுவாகவும் இந்த புதிய மாற்றம் இருக்கும்..

ஆதி 27-12-09 07:20 PM

புது புது முறைகளில் லோகம் சிறப்பாகும். நல்ல முறை/முயற்சி.

நன்றி

பச்சி 27-12-09 08:08 PM

சவால் தொடர்ச்சிகளை படிக்க இலகுவான ஒரு வழிமுறை இது. உரிய நடவடிக்கை ஏற்பட வழி செய்யும் தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றி.

இதுவரை நிர்வாக சவால் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் கொடுத்தவர்களும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி தத்தமது தொடர்ச்சிகளின் தலைப்புகளை மேலே 'நிர்வாகி' அவர்கள் கூறியுள்ள வழிமுறையின் படி திருத்தி பதிந்தால் மற்றவர்களுக்கான வேலைப்பளுவை குறைக்கலாம்.

நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

/////

நான் இதுவரை கலந்து கொண்ட நி.சவால் போட்டி கதை தொடர்களின் தலைப்புகளை மாற்றிவிட்டேன்.

மாற்றுபவர்கள் கவனிக்க:

அந்தந்த மாதங்களில் வென்ற தொடர்களின் தலைப்புகளில் (வென்ற கதை) என்று ஆரம்பத்தில் இருக்கும். அதையும் நீக்கிவிட வேண்டியது அவசியம். அதை தலைப்பின் இறுதியில் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். கதையின் பெயர் தான் ஆரம்பத்தில் இருக்க வேண்டும்.

coolanu 27-12-09 08:20 PM

நல்ல யோசனை மற்றும் வழிகாட்டுதல் தலைவரே. சொன்னவாறு மாற்றினால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.

நான் எழுதின (முன்னொரு காலத்தில்) சவால் தொடரின் தலைப்பையும் மாற்றி விட்டேன்.
நன்றி

sweet maran 27-12-09 08:59 PM

கடந்த நான்கு நாட்களாய்....
வாசகர் சாவலில் கதைகளை அகரவரிசைப்படியோ அல்லது படைப்பாளிகளின் அடிப்படையிலோ.... படிக்க மிகவும் சிரமப்பட்டேன்...

நானும் நான்கு தொடர் பாகங்கள் கொடுத்துள்ளேன்.
தலைமை நிர்வாகி கூறிய யோசனைப்படி என் கதையை முறைப்படுத்திவிட்டேன்.

வீட்டில் ஆங்காங்கே கிடக்கும் பொருட்களை...
அடுக்கி விட்டு... குப்பையை கூட்டி.... தண்ணீர் தெளித்து...
சேரில் உக்கார்ந்து.. ஆகா நம்ம வீடு அகலமாய்...அழகாய் இருக்கிறதே.. என மனதில் ஒரு திருப்தி வருமே..அந்த திருப்தி .இப்பொழுது எனக்கு இருக்கிறது.

இதனை.. வகைப்படுத்திய தலைமை நிர்வாகி அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்


All times are GMT +5.5. The time now is 04:30 PM.

Powered by Kamalogam members