அண்ணன் ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
|
அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ட்ரீமர் அய்யா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கண்டு மிகவும் வருத்தம் உற்றேன். மிகவும் பண்புடையவர் அவர். அவர் பின்னூட்டங்கள் சிலவே ஆனாலும் நன்கு உற்சாகப்படுத்துவார். அவர் இறைவனுடன் என்றும் ஒன்றாய் இருக்கப் பிரார்த்திக்கிறேன்! அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இறப்புக்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன! தகவல் பதிவு செய்த நண்பர் டிடிஆர் அவர்களுக்கு மிக்க நன்றி!:0021:
|
எனது சில கதைகளுக்கு ட்ரீமர் அண்ணனிடமிருந்து பின்னுட்டங்கள் கிடைக்க பெற்றேன். அவருடைய எழுத்திலிருந்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். அவரிடம் எப்படியாவது பின்னுட்டம் பெற்றுவிடவேண்டும் என்ற அவா எனக்கு எப்போதுமே உண்டு. அப்படிப்பட்ட பெரியவரின் மறைவு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கின்றது
|
லோகத்தில் நான் இருந்த ஒரக்குறைய 10 ஆண்டுக்கு மேலாக லோகத்தை அடைந்து வெளியே லாக் அவுட் ஆகும்போது சோகமாக போனது கிடையாது. அந்த அளவு நேற்றிலிருந்து ஏதோ ஒரு மனபாரம் மனதை அழுத்தி உள்ளது. ஒரு குடும்ப உறுப்பினரை இழந்த ஒரு உணர்வு.
அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மௌனி |
மிக்க சோகமான செய்தி. ட்ரீமர் ஐயா மருத்துவமணையிலிருந்து விரைவில் குணமடைந்து செல்வார் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் இந்து துக்ககரமான செய்தியை எதிர்ப்பார்க்கவில்லை. இந்தியா சென்றால் சென்னைக்கு சென்று ட்ரீமர் ஐயாவை சந்திக்கலாம் என்றிருந்தேன்.
ட்ரீமர் ஐயா பற்றி வாத்தியார் சொன்ன கருத்துகள் யாவும் உண்மையே. ட்ரீமர் ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். |
அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
இது ஒரு மிக பெரிய இழப்பு இந்த தளத்திற்கு |
துயரமான செய்தி.. நண்பர் ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
|
தளத்தின் மூத்த உறுப்பினர் ட்ரீமர் ஐயாவின் மறைவு செய்தியை கேட்டு மிக மனவருத்தம் அடைகிறேன்.
ஐயா அவர்கள் இவ்வுலகை விட்டுப்பிரிந்தாலும் உறுப்பினர்கள் அனைவரின் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். |
நமது மூத்த உறுப்பினர், அண்ணன் "டிரீமர்" இயற்கை எய்தியது மிக வருத்தத்தை அளிக்கிறது.
இந்த வயதிலும் அவரது சுறுசுறுப்பும் பங்களிப்பும் என்னை வியக்க வைத்தது. அவரது இழப்பு செய்தியை கேட்டது முதல் என் நெஞ்சத்தை துக்கம் அழுத்துகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். |
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
|
All times are GMT +5.5. The time now is 07:09 PM. |
Powered by Kamalogam members